…………………………………………………………………………………….



பெரிதிலும் பெரிது – மிகப்பெரியது இந்த உலகம்….
இயற்கை அதிசயங்களும், விஞ்ஞான அற்புதங்களும்
நிறைந்த உலகம்…
நம் வாழ்நாளில் இந்த உலகத்தின் எத்தனை
பகுதிகளை பார்த்திருக்கப்போகிறோம்…?
நடைமுறை சாத்தியமாக –
எத்தனை பகுதிகளைத் தான் நம்மால் பார்க்க முடியும்…?
உலகின் பல்வேறு பூகோளப்பகுதிகளில்
பல்வேறு நாடுகள்… வடக்கே ஆர்க்டிக் முதல்
தெற்கே அண்டார்டிகா வரை…!!!
வளம் மிகுந்த செழிப்பான, மலைப்பிரதேசங்கள் ….
வறண்ட பாலைவனங்கள்…
அரிய பள்ளத்தாக்குகள்…..
தாங்க முடியாத குளிர்…
பொறுத்துக்கொள்ள முடியாத சூடு …
மனிதர் சுகமாக வாழ – அனைத்து வசதிகளையும்,
ஹைடெக் – டெக்னாலஜி மூலம் உருவாக்கி அனுபவித்து வரும்
வளர்ந்த நாடுகள்….
அடிப்படை வசதி கூட இல்லாத ஆப்பிரிக்க நாடுகள்.
செழிப்பான நாகரிக வளர்ச்சி மிகுந்திருந்த,
பண்டைய கால, சரித்திரப் புகழ்பெற்ற இடங்கள்….
மக்கள் நடமாட்டமே இருந்திராத
அத்வானப் பிரதேசங்கள்…
இந்த நிலை காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளிலும்,
பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், வாழும் சூழ்நிலை ஆகியவற்றில்
எக்கச்சக்கமான மாற்றங்களை, வேறுபாடுகளைக் காண முடிகிறது.
அடிக்கடி பயணங்களை மேற்கொள்பவர்களால்,
இந்தியாவுக்குள்ளேயே கூட நிறைய மாறுபாடுகளை
உணர முடியும்….
தென்னிந்தியாவில் இல்லாவிடினும்,
வட இந்தியாவில், மழைக்காலத்தையும்,
குளிர்காலத்தையும், வெய்யில் காலத்தையும், தனித்தனியே
உணர முடியும். எனவே, அதற்கான சீதோஷ்ண மாற்றங்களையும்,
அந்த மாற்றங்களினால் ஏற்படும் மாறுபட்ட வாழ்க்கைச்
சூழல்களையும் நன்கு உணர, அனுபவிக்க முடியும்.
ஒரு சமயம், டிசம்பர் கடைசியில், குளிரின் உச்சகட்டத்தில்
காஷ்மீர் எப்படி இருக்கிறது என்று அனுபவித்துப் பார்ப்பதற்காகவே
நான், குடும்பத்துடன் ஒரு பயணம் சென்றிருந்தேன்.
டிசம்பர் 31-ந்தேதி, “குல்மார்க்’ குளிரையும், பனிப்பொழிவையும்
ரசித்து….(!!! )அனுபவித்தோம்.
அதே மாதிரி ஒரு கொட்டும்
மழைக்காலத்தில், ஹிமாசல பிரதேசம் சென்று சுற்றினோம்…!!
அடிப்படையில், இளைஞனாக இருந்த காலத்திலிருந்தே –
நான் ஒரு யாத்ரிகன். சிறு வயதிலிருந்தே –
பல ஊர்களுக்கு பயணம் செய்வதிலும்,
வித்தியாசமான இடங்களை பார்ப்பதிலும், வித்தியாசமான
மனிதர்களுடன் பழகுவதிலும் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு.
எனவே, நான் அப்படி நேரில் செல்ல முடியாத,
பார்க்க முடியாத இடங்களைப் பார்க்கவும்,
தெரிந்திராத விஷயங்களை தெரிந்து கொள்ளவும் –
என்னால் – – இந்த வயதில் செய்ய முடிந்த
ஒரு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறேன்….!!!
என் பயணத்திற்கான துணையும், சாதனங்களும் –
(60 வயதுக்கு மேல் நான் கற்றுக்கொண்ட -)
கணிணியும், இன்டர்னெட்டும், கூகுளும் தான்………….!!!
அப்படி நான் தேடி, விரும்பிக் காண்கின்ற இடங்களில்
தெரிந்துகொள்ளும் செய்திகளில் –
சுவாரஸ்யமான சிலவற்றை இந்த தள வாசக
நண்பர்களும் அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
இங்கே நாம் பயணிக்கவிருப்பது –
உலகிலேயே அதிகக் குளிரான ஒரு நாட்டிற்கு –
ரஷ்யாவில், சைபீரியாவில் உள்ள, சாகா (Sakha Republic )
குடியரசின் தலைநகரம் – “யாகுட்ஸ்க்”.
ரஷ்யாவிலிருந்து –
1630-வாக்கில் மக்கள் இங்கு குடியேறத் துவங்கியதாக தெரிகிறது.
இந்தியாவுக்கு அந்தமான் போல,
ரஷ்யா, அதன் தலைநகரமான மாஸ்கோவிலிருந்து
தொலைதூரத்தில் ஒரு சிறைச்சாலையை யாகுட்ஸ்க்-ல்
கட்டியதன் மூலம் இந்த பிரதேசத்தில், மக்களின் குடியேற்றத்துக்கு அடித்தளமிட்டது.
யாகுட்ஸ்க் நகரின் சீதோஷ்ண நிலையைப் பார்க்கும்போது,
இங்கு 2,85,000 பேர் வசிக்கிறார்கள் என்பது
ஒரு பிரமிப்பூட்டும் விஷயமே.
யாகுட்ஸ் பற்றிய விவரங்களையும்,
இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும்,
நான் எழுத்தில் சித்தரிப்பதை விட,
நீங்கள் காணொலி மூலம் காண்பது இன்னமும்
சிறப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்….
எனவே, 2 காணொலிகள் கீழே –
(இரண்டும் சுவாரஸ்யமாக இருக்கும்…
எனவே, இரண்டையும் பாருங்கள்….!!! )
……………………………………………………………………………………………………………………………………………………………………………….



நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்