இளம் பெண்களுக்கு கொஞ்சம் அவசியமான செய்தி …..

………………………………………………

……………………………………………….

டீன்ஏஜ் பெண்களே…!…

(கோவை, சென்னை சம்பவங்களுக்குப் பிறகு, இந்த செய்தி, அவசியமாகிறது … )

எந்த ஆணும் தவறான வழிகளால் வந்து உங்கள் இதயக்கதவுகளை தட்ட அனுமதிக்காதீர்கள்.

நாகரீகமான எந்த ஆணும் தவறான வாசல்களால் வந்து உங்களை அணுக மாட்டார்கள் என்பதையும்,

அனுமதிக்கப்பட்ட வழிகளால் மாத்திரமே உங்களை அணுகுவான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். உங்களை அடைய பின் வாசல் வழியால் வர மாட்டார்கள்.

‘உன் தொலைபேசி இலக்கத்தை தருகிறாயா…?”, “நாம் தனியாக வெளியே செல்வோமா..?” “நாம் பழகிக்கொள்வோமா” பின்னர் ஒரு முடிவுக்கு வருவோமா….???” என்றெல்லாம் கேட்டுத் தொல்லை தந்தால்,

திண்ணமாக ‘முடியாது” என்று சொல்லவிடுங்கள். நான் ஒன்றும் பரீட்சிக்கப்படும் வயல் நிலம் அல்ல என்பதை தெரிவித்துவிடுங்கள்.

உங்கள் கற்பையும் மானத்தையும் அற்ப விலைக்கு விற்க நீங்களே அனுமதித்து விட்டு பின்னர் சேதப்படாதீர்கள்.

கயவர்களிடமிருந்து உங்களைப் தற்காக்க வழங்கப்பட்ட பலமான ஆயுதங்கள் கைகள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவவர்கள் கயவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் உங்களை மோகப் பொருள்களாகவே / போகப்பொருள்களாகவே பார்ப்பார்கள்.

காதல் என்ற பெயரில் உங்களிடம் பேச்சுக் கொடுத்தால் பேச முற்படாதீர்கள்.

உங்கள் புகைப்படங்களை அனுப்பாதீர்கள்.

உங்கள் மனதை பறிகொடுத்து விடாதீர்கள்.

உங்கள் இரகசியங்களை நீங்கள் சொல்லிவிடாதீர்கள்.

உங்கள் மானம் மரியாதைகள் பாதுகாக்கப்டும் என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

காதல் என்ற பெயரில் உங்கள் உடலை அடையும் வரை உங்கள் மென்மையான உணர்வுகளுடன் விளையாடுவார்கள்.

உங்களை நேசிக்கும் எந்த ஒருவனும் உங்கள் உணர்வுகளை புண்படுத்தமாட்டான்.

மேற்குறிப்பிட்ட முறைகளில் உங்களை அணுக நினைக்க மாட்டான்…..

இவைகள் போக –

உங்களுக்கென ஒரு நற்பெயர் இருக்கிறது. அதற்கு நீங்கள் என்றும் அபகீர்த்தி ஏற்படுத்தாதீர்கள்.

உங்களுக்கென ஒரு தந்தை இருக்கிறார், அவரை தலை குனிய வைத்து விடாதீர்கள்.

உங்களுக்கென ஒரு தாய் இருக்கிறாள், அவள் மனதை புண்படுத்தாதீர்கள்.

உங்களுக்கென ஒரு சகோதரர் இருக்கிறார், அவர் நெஞ்சை நீங்கள் நோகடித்துவிடாதீர்கள்.

உங்களுக்கென ஒரு குடும்பம் இருக்கிறது, உங்களுக்கென உற்றார் உறவினர் உள்ளனர், உங்களுக்கென ஒரு சமூகம் இருக்கிறது. அவர்களின் மானம் மரியாதையை சுக்கு நூறாக்கி விடதீர்கள் அவர்கள் தலை காட்ட முடியாத நிலைக்கு அவர்களை ஆக்கிவிடாதீர்கள்.

அனைத்துக்கும் மேலாக,

உங்களை சதாவும் அவதானிக்கும் ஒரு இறைவன் இருக்கிறான், அவன் உங்களை பார்த்து வெட்கப்படும் நிலைக்கு அவனை நீங்கள் ஆக்கிவிடாதீர்கள்.

போலியான எமோஷன் அலைகளில் சிக்கி,

கற்பென்னும் பெரும் பொக்கிஷத்தை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.

பயந்தும், ஒளிந்தும் அரங்கேறும் தவறான தொடர்புகள் யாவும் உங்கள் வாழ்வில் ஆறாத வடுவாகவும் நீங்காத வலியாகவுமே இருக்கப் போகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் உயர்ந்தவர்கள், நீங்கள் உன்னதமானவர்கள்,

நீங்கள் விலைமதிக்க முடியாதவர்கள், நீங்கள் ஒன்றும் விளையாடி விட்டு வீசப்படும் விளையாட்டு பொம்மையல்ல என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

தனக்கு அமையப் போகின்ற கணவனுக்கு உண்மையாக இருக்கனும்…

தனக்கு பிறக்க போகின்ற பிள்ளைகளை நல்ல வழியில் வளர்க்கனும் என்ற என்ன கொண்ட எந்த பெண்ணும் எப்படிப்பட்ட ஆசை வார்த்தைகளுக்கும் மசியமாட்டாள்

அவள் எண்ணம் தூய்மையாக இருக்கும் –

ஆடையில் ஒழுக்கம் இருக்கும் =

நடத்தையில் பணிவு இருக்கும் ……( நன்றி – ஸ்ரீவளர் ராஜன் )

…………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக