…………………………………………………………………………..

………………………………………
ஒவ்வொரு சம்பவத்தின் போதும், கற்பழித்த கூட்டுக் கயவர்களின் பின்னணியைப் பார்த்தால் –
ஒவ்வொரு தறுதலையின் மீதும் ஏகப்பட்ட கொலை, கற்பழிப்பு, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன…. எல்லா மிருகங்களும் மீண்டும் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து – குற்றச்செயல்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்… இவர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் உரிய வேகத்தில் தீர்மானிக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், இப்படி மேலும் மேலும் குற்றங்கள் தொடர்ந்திருக்குமா ….???
இந்த நாட்டில் -ஏன் இந்த அவலம் …???
எத்தனை நீதி மன்றங்கள் ? எத்தனை வழக்குரைஞர்கள் ?
இருந்தும் ஏன் லட்சக்கணக்கில் முடிக்கப்படாத வழக்குகள் ?
தீர்ப்புகள் வருடக்கணக்காக இழுத்தடிக்கப்படும் நிலை ஏன் ?
தாமதிக்கப்படும் தீர்ப்பு மறுக்கப்பட்ட நியாயம் என்பது சட்டம் படித்தவர்களுக்கு
தெரியாதா ? பின் ஏன் இந்த நிலை ?
சுயநலம் – அப்பட்டமான சுயநலம்.
வருடக்கணக்காக ஒத்திவைப்புகள் (வாய்தா) கொடுக்கப்படுவதேன் ?
3 ஒத்தி வைப்புக்களுக்கு மேல் அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் வழக்குகளை தொடர்ந்து நடத்தி முடிக்க முடியாதா ?
தங்கள் வரும்படி தொடர்வதற்காகவே வாய்தா வாங்கும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகளும் ஒத்துழைப்பு அளிப்பது ஏன் ?
கட்சிக்காரர்களிடம் வழக்கறிஞர்கள் வாங்கும் சம்பளத்திற்கு (துவக்கத்திலும், பின்னர் ஒவ்வொரு வாய்தாவின் போதும், பின்னர் வழக்கு முடிவடையும்போதும் ) யாராவது – என்றாவது – ஒப்புகைச்சீட்டு (ரசீது) கொடுப்பது உண்டா ?
இதுவரை எந்த வழக்கறிஞர் வீட்டிலாவது, அலுவலகத்திலாவது, என்றாவதுவருமான வரி அதிகாரிகள் சென்று சோதனை செய்ததாக கேள்வியாவது பட்டிருக்கிறோமா ?
– ஏன் ? என்று மாறும் இந்த நிலை ?
“இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே -சொந்த நாட்டிலே ?
நம் நாட்டிலே ? ” – என்று நாமக்கல் கவிஞர் பாடி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்
எந்தவித முன்னேற்றமும் இல்லையே !
வாய்தாவுக்கு வாய்தா வருமானம் என்பதை தடை செய்து,
ஒரு வழக்கு முழுவதற்குமான ஒரே சம்பளம் என்றும்,
வழக்கறிஞர்கள் வாங்கும் பணத்திற்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என்றும்சட்டம் கொண்டு வரமுடியாதா ?
3 வாய்தாவிற்கு பிறகு மேற்கொண்டு நீட்டிக்கப்படாமல் வழக்கு தொடர்ந்து நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்க முடியாதா ?
வருமானத்தையே குறியாக கொண்ட வழக்குரைஞர் மத்தியிலிருந்து நீதிபதிகளை நியமிக்காமல் – மூத்த -முதிர்ந்த அனுபவம் கொண்ட சட்டக்கல்லூரி பேராசிரியர்களை நீதிபதிகளாக நியமிக்கக் கூடாதா?
ஏன் முடியாது ?
எல்லாமே முடியும் – மனம் இருந்தால் !!!
யாருக்கு ….??? செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்போர்க்கு …1!!
………………………………………………………………………………………………………………………………………..



SUPER SIR GOOD