பட்டுக்கோட்டை பிரபாகரின் நிஜக்கதை …!!!

………………………………

………………………………

அப்பாவை என்னால் மறக்க முடியாது. ரொம்பவும் டிசிப்ளின்.

அப்பா 17 வயதில் கடை ஆரம்பிச்சு, அவரே பெண் தேடி எங்க அம்மா வீட்டுக்கு வர்றாங்க. அம்மாவுக்கு படிக்கிறதில் ரொம்ப ஆசை. கல்யாணமாகி வந்ததும், பட்டுக்கோட்டை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததுதான் முதல் வேலை. அப்பாவின் மேன்மையும் சதா எங்களுக்காக உழைத்துக்கொண்டே இருந்ததும் கூட ஒரு காதல்தான். அப்பாவைப் பார்க்க எனக்கு ‘எம்டன் மகன்’ நாசரின் ஞாபகம் வரும். அந்த சிடுசிடு முகம்தான்.

ஆனால், சமயங்களில் அது கனிந்து போகும்போது, வரும் அழகு குறிப்பிடத்தக்கது. பாசத்தை காட்ட வேண்டிய நிமிஷத்தில் காட்டிவிட்டு மாறிவிடுவார். அப்பாவிடமிருந்தே நான் திட்டமிடுதலை தெரிந்து கொண்டிருக்கிறேன். விடுமுறையில் காரைக்குடியில் இருக்கிற தாத்தா வீட்டுக்குப் போனால் சுதந்திரமும், படிக்க நிறைய புத்தகங்களும் கிடைக்கும். தனலட்சுமி அத்தை ஆயிரக்கணக்கான புத்தகங்களை பைண்டிங் செய்து வைத்திருந்தார். வகை வகையான புத்தகங்கள்… சித்திரக்கதைகள், ‘துப்பறியும் சாம்பு’, ‘பொன்னியின் செல்வன்’ என அத்தனையும் அங்கேதான் அறிமுகம் ஆகிறது.

நான் எழுத்தாளன் ஆவதற்கான விதை அங்கே விதைக்கப்பட்டிருக்கும் என எண்ணுகிறேன். பள்ளிக்காலங்களைப் பொறுத்தவரை டீன்ஏஜ் உணரப்பட்டது. எதிரினக் கவர்ச்சி இல்லவே இல்லை என்றால் அது உண்மையில்லை. அதிலிருந்து தப்பித்து வந்தவர்கள் யாராக இருக்கக்கூடும்?

கோலம் போட வருகிற பெண்ணின் சரியான நேரத்தை கணித்து, அவளைப் பார்க்க சைக்கிளில் ஒரு ரவுண்ட் போய் வந்ததைத் தவிர அப்போது என்ன செய்தோம்? கல்லூரியில் படிக்கும்போது பக்கத்திலேயே ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரி இருந்தது. அவர்களைப் பார்த்துக் களித்தது தவிர எதுவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்ததே இல்லையே!

காதல் என்பது உள் மனசுக்குத் தெரியும். திட்டம் போட்டு ஆரம்பிக்கிற விஷயமாகத் தெரியவில்லை. அது எந்தக் கணத்தில், எப்படி, எவ்விதத்தில் தோன்றி கிளை பரப்பும் என யாருக்கும் தெரியாது.

உடல் ரீதியான விளையாட்டே இப்பொழுதெல்லாம் காதல் எனப்படுகிறது. அழுத்தமான காதல் அனுபவத்தில் இதெல்லாம் சேரவே சேராது.

இப்பொழுதெல்லாம் காதல் ஜோடிகளுக்கு தனியாக தைரியம் குவிந்திருக்கிறது.

வெளியே காணப்பட வேண்டிய நளினம், நாகரீகம், கூச்சம் மறந்து எல்லை மீறுகிறார்கள்.

இந்த காமம், எதிர் பாலின பரிதவிப்பு, எல்லாம் தாண்டி புரிந்துகொள்ளல்தான் முக்கியமாகப்படுகிறது. இப்பொழுது கடலை போடுவது என புது பிரயோகம் சொல்கிறார்கள்.

அது ஃபேஸ்புக், அலைபேசியெல்லாம் வந்த பிறகு நடப்பது. முன்பெல்லாம். அழகாய் இருக்கிறாய் என்றுகூட கண்ணுக்கு நேராக சொல்லிவிட முடியாது. இப்போது பெண்களே அழகை ரசிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

சுயபடம் எடுத்துப் போட்டு – எத்தனை லைக், எத்தனை பேர் ஹார்ட்டின் விடுகிறார்கள் என பார்க்க ஆசைப்படுகிறார்கள். ……………………..( நன்றி – பட்டுக்கோட்டை பிரபாகர்+குங்குமம் …)

…………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.