…………………………………….

…………………………………………………………………………………………………….
இன்று காலை எதேச்சையாக இந்த ஹைக்கூ கவிதை கண்ணில் பட்டது.
இத்தனை எளிமையான வரிகளுக்குள், எத்தனை கூர்மையான, ஆழமான பொருளை அடக்கியது யார் என்று ஆச்சரியப்பட்டேன். யதார்த்தத்தின் மீது கவிதையால் அறையப்பட்ட ஒரு சாட்டையடி போல உணர்ந்து, வியந்து, ரசித்தேன் இந்த ஹைக்கூவை.
நம்ம வாத்தியார் ஹைக்கூ பற்றி ஏராளமாக எழுதி இருக்கிறார். சுஜாதாவை படிக்க ஆரம்பித்த பிறகு தான் எனக்கு ஹைக்கூக்களின் உலகமும் அறிமுகமானது. “
“ஹைக்கூ -ஒரு புதிய அனுபவம்” என்ற அவரது புத்தகத்தில் ஹைக்கூவின் வரலாறு, ஆதார அமைப்பு, விதிகள், ஜப்பானிய, தமிழ் ஹைக்கூக்கள் இப்படி ஹைக்கூவின் அழகியலையும், அதன் தத்துவார்த்த இலக்கணத்தையும் மிகத் தெளிவாக விளக்கி இருப்பார்.
ஹைக்கூ என்பது ஒரு அனுபவம்.
எழுதியவனின் அனுபவமும் அதை படிப்பவரின் அனுபவமும் ஒத்துப் போக வேண்டும் என்று அவசியமில்லை.
ஆயினும், எழுதியவனின் ஆழமான உணர்வை, படிப்பவனின் மனதிற்குள் எளிதாகவும், நேரடியாகவும் கடத்திவிடும் அபூர்வ வல்லமை கொண்டவை இவை.
மூன்றே மூன்று வரிகள் என்றாலும் அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனை…!!! எத்தனை…!!! ஒரு சிறிய ஜன்னல் போல பெரிய உணர்வுலகைத் திறந்துவிடுகிறது.
ஹைக்கூ எழுதுவது மட்டும் ஒரு கலை இல்லை, அதை படிப்பதும் கூட….
“சிறிய கவிதையில் கவிஞன் வாசகனை ஒரு மலையுச்சிக்கு ஒரு கழுகு தன் குஞ்சை எடுத்துச் செல்வது போல அழைத்துச்சென்று, அங்கே தொபுக் என்று போட்டு விடுகிறான்…!!!
கற்பனை உள்ள வாசகன் பறக்கிறான். இல்லாதவன் விழுந்து சாகிறான்”
– ராபர்ட் ப்ளை. ( நன்றி – TF Rinnozah )
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….