ஈ .எஸ் . பி – பவர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா….??? உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா …???

………………………………………

………………………………………

அண்மையில், பல வருடங்களுக்கு முன், மலையாளத்தில் வெளிவந்த
“அய்யர் தி கிரேட்” என்கிற வித்யாசமான திரைப்படத்தை பார்க்க நேரிட்டது…..

மம்மூட்டி, கீதா இன்னும் பலர் நடித்திருந்த இந்தப்படம் ஈ .எஸ் . பி. பவரை அடிப்படையாக கொண்ட கதையைக் கொண்ட படம்….

அந்தக் கதை – ஈ .எஸ் . பி. பவரைப்பற்றி, வலைத்தளத்தில் தேடி பல விவரங்களை சேகரித்து, இந்த இடுகையை எழுத வைத்தது……

ஈ.எஸ்.பி பவர் என்றால் என்ன?

Extra Sensroy perception என்பதன் சுருக்கமே E.S.P. அதாவது புலன் கடந்த அறிவு. அதீத உளவியல் ஆற்றல் என்று இதைச் சொல்கிறோம்….

Extrasensory perception –

  • Extrasensory perception (ESP), also known as a sixth sense, or cryptaesthesia, is a claimed paranormal ability pertaining to reception of information not gained through the recognized physical senses, but sensed with the mind. wikipedia

………………………………………….

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்த 24 வயது இளைஞருக்கு, அவரது சொந்த ரைஸ் மில்லில் இயந்திரத்தை ரிப்பேர் செய்யும் போது, சுவரில் தலை மோதி பலத்த அடிபட்டது. மூன்று நாட்கள் நினைவின்றி, கிட்டத்தட்ட கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

மருத்துவமனையில் இவரது படுக்கை அருகே, பேசிக் கொண்டிருந்த டாக்டர், ‘நாளைக்கு இவருக்கு தலையில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்…’ என்று சொன்னார்.

அவர்கள் பேசுவதைக் கேட்ட அந்த இளைஞர், ‘நாளைக்கு எனக்கு ஆபரேஷன் நடக்காது…’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டதற்கு, ‘இன்று இரவு இரண்டு மணிக்கு நீங்கள் இறந்து விடுவீர்கள்!’ என்றார். ஏதோ உளறுகிறார் என்று சட்டை செய்யாமல் டாக்டர் சென்று விட்டார்.

ஆனால், இளைஞர் குறிப்பிட்டபடி, இரவு இரண்டு மணிக்கு அந்த டாக்டர் இறந்துவிட்டார். .. !!!

கோமா நிலையிலிருந்து உடல் குணமான அந்த இளைஞருக்கு, இ.எஸ்.பி., அதாவது, எக்ஸ்ட்ரா சென்சரி பர்செப்ஷன் என்ற அதிசய சக்தி வந்தது.

அந்த இளைஞர் தான் பின்னர் ஜோதிடம், நியூமராலஜி இரண்டிலும் சிறப்பு பெற்று, 1971 முதல் 2010ம் ஆண்டு வரை புகழ் பெற்ற எண் கணித மேதையாக, பல லட்சம் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தினராலும் நன்கு அறியப்பட்ட, ‘நம்புங்கள் நாராயணன்’ ஆக சிறப்பாக வாழ்ந்தவர்.

……………………………………………………….

கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு இந்த ஈ.எஸ்.பி பவர் – சில
சமயங்களில் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா … ???
இதை கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் …

கீழே அவரது வார்த்தைகளிலேயே –

தோன்றாமல் தோன்றும் சுடரொளி ஒன்று அடிக்கடி என்னைக் காப்பாற்றுகிறது. அமைதியைத் தருகிறது.

என்ன நடக்கப் போகிறது என்பது கனவிலே வருகிறது.

பத்து நாட்களுக்கு முன்பு பெங்களூர் மண்டிப்பேட்டையில் ஒரு ஹோட்டலைத் திறந்து வைக்கச் சென்றேன்.

விமானம் போய் இறங்கியபோது மாலை மணி நான்கு. படுத்துத தூங்கிவிட்டேன்.

ஒரு கனவு. அற்புதமான கனவு.

கண்ணன் என் கனவிலே வந்தான். ஒரு சிறு குடிசையில் அவனுக்கு நான் அமுது படைத்தேன். அவன் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். என்னென்னவோ அவனிடம் பேசினேன். அவன் சொன்னது மட்டும் நினைவிருக்கிறது. “எல்லாம் சரியாக நடக்கும், கவலைப்படாதே.”

மறுநாளைக்கு மறுநாள் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு.

ஒரு பெருமாள் கோயில். ஒரு பட்டாச்சாரியார் எனக்குக் குங்குமம் வழங்குகிறார்.

இவை என்ன கனவுகள்?

நல்லவர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே வரும் கனவுகள். எனக்கும் அவை ஏன் வந்தன…? எனக்கு ஞானம் பிறந்த கதை இது தான்.

பரம்பொருளைப் பற்றிய சிந்தனை வளர வளர, கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடிகிறது..நல்லவனாக இருப்பது சுலபமாகிறது.

விவரங்களை முழுதுமாக அவர் தரவில்லை.

நமக்குப் புரிவது கண்ணதாசனுக்கு அபூர்வமான ஈ.எஸ்.பி. பவர்
இருந்தது என்பதைத் தான்.

சில உதாரணங்கள் –

சேலத்தில் கவிஞர் வாழ்ந்த காலத்தில், அவரது நண்பரும்,
அருணோதயம் பதிப்பாளரான அருணாசலமிடமும், நண்பர் கற்பூரபாண்டியனிடமும் தான் கண்ட கனவைத் துயரத்துடன்
விவரிக்கிறார்….

“28-1-1947 அன்று இரவு பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டேன். மகாத்மா காந்தியை யாரோ சுட்டு விடுகிறார்கள்’ என்றார் கவிஞர்.

“அந்த மனிதருக்கா அப்படி ஆகும்” என்று அவர் கூற்றை மறுத்து
இருவரும் கேலி செய்கிறார்கள்.

ஆனால் மறுநாளே, 30-1-1947 இரவு 7 மணி செய்தியில் வானொலி
மகாத்மா காந்திஜியை, கோட்ஸே சுட்டுக் கொன்றதை அறிவித்த போது அனைவரும் விக்கித்துப் போயினர்….

…………………………


கம்பன் விழாவில் கலந்து கொள்ள பாண்டிச்சேரி சென்றார் கவிஞர். உடன் சென்றவர் அவர் உதவியாளர் இராம. கண்ணப்பன்.

பாண்டிச்சேரியில் மழையே இல்லை.ஒரே வறட்சி.

விழாவின் இறுதி நாளன்று பேசிய கவிஞர் சொன்னார்:” நான் கண்னனை வணங்குவது உண்மை எனில் புதுச்சேரி எல்லையைக் கடக்கு முன் மழை பெய்ய வேண்டும். பரந்தாமன் இங்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”

அவர் வாக்கு பொய்க்கவில்லை.
வருணன் அதைக் கேட்டான். ஓடி வந்தான்.

பேச்சை முடித்து கவிஞர் திண்டிவனம் வந்து சேர்ந்த போது புதுச்சேரி மழையில் மிதப்பதாக்ச் செய்தி வந்தது!

…………………………………………..

இதே போல சென்னையில் வானதி பதிப்பகத்தார் மயிலாப்பூர்
கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ஒரு விசேஷ கவியரங்கம்
ஏற்பாடு செய்திருந்தனர்.

கவிஞரும் அதில் பங்கேற்றார்.

பனிரெண்டு அறுசீர் விருத்தச் செய்யுள்களை அங்கு அவர் பாடினார்.

வான் முட்டும் கோபுரங்கள்
வானுக்குச் செய்தி சொல்வீர்!

தேன்முட்டும் இதழாள் சக்தி

தேவியைத் துயிலெ ழுப்பீர்!
கான்முட்ட மழைபொழிந்து

காவிரி பெருகி ஓடி
மீன்முட்டும் வெள்ளக் காடாய்
வியன் நிலம் ஆவதாக!

என்று இறுதி விருத்தத்தை முடித்தார்.

கவியரங்கம் முடிந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து கிளம்பினார் கவிஞர். தியாகராய நகர் வருவத்ற்குள் அடை மழை கொட்டியது… !!!

……………………………………………………………………………………………………………………..

சாதாரண மனிதர் ஒருவரின் வாழ்வில், இந்த பவர் எப்பேற்பட்ட விளைவுகளை தோற்றுவிக்கிறது என்பதை வைத்து தான் அய்யர் தி க்ரேட் – படம் வந்தது ….

அப்படி ஒரு நபராக மம்முட்டி சூரிய நாராயண ஐயர் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். வீட்டில் வளர்ந்த ஒரு கிளியை பிடிக்கபோகும் நேரத்தில் சிறிய விபத்தில் மம்முட்டி சிக்கி விட, அவர் அக்ரோ போபியா என்ற ஈ.எஸ்.பி நோய்க்கு ஆளாகிறார். இதன் மூலம் எதிர்காலம் குறித்த விசயங்கள் எல்லாம் அவர்க்கு தெளிவாகிறது. கேரளத்தில் நடக்கபோகும் முக்கிய ரயில் விபத்து குறித்து தெரிவிக்கிறார். யாரும் நம்பாத நிலையில் விபத்து நடந்து பல நூறு பேர்கள் மாள்கின்றனர்.

அதன் பிறகு ஒரு விமான விபத்து குறித்து கூற அதுவும் நடக்கிறது. இதனால் கேரள அளவில் மிக பிரபலமாகி விடுகிறார் மம்முட்டி. மம்முட்டியின் மனைவியாக கீதா நடித்திருக்கிறார்…..

கேப்ரியாஸ் என்ற நிறுவனம் சிறு குழந்தைகளுக்கான உணவுப்பொருளில் ஸ்டீராய்டு கலக்கிறது என்ற உண்மையை உணர்கிறார். இதை அறிவிக்கும் நிலையில் அந்த நிறுவனத்தலைவரான தேவன் மம்முட்டியின் எதிரியாகிறார்.

மம்முட்டியின் ஒட்டுமொத்த குடும்பமும் வில்லனால் அழிக்கப்படுகிரது….. இதற்கு பழிவாங்கும் விதமாக ஐயரும் வில்லனை கொலை செய்து விடுகிறார். இதில் ஐயரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.

குறிப்பிட்ட நாளில் ஒரு நேரத்தை சொல்லி இந்த நாளில், இந்த நிமிடத்தில் நான் மரணிப்பேன் என தன் இறப்பை மம்முட்டி அறிவிக்கிறார். இருப்பினும் ஏதாவது அய்யரின் எதிரிகளால் அவர்க்கு மரணம் நேருமோ என காவல்துறையும் ஆஸ்பத்திரியை தனது கட்டுப்பாட்டில் வைக்க, ஒரு மோசமான தீவிரவாத குழு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் காவலை மீறி சூரிய நாராயண அய்யரான மம்முட்டியை தீர்த்துக்கட்டி விடுகிறது.

இந்தப்படம் இப்போது யூ-ட்யூபில் இலவசமாக காணக்கிடைக்கிறது… ஆர்வம் உள்ளவர்களுக்கு கீழே லிங்க் –

………………………………………………………….

………………………………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக