ஒரு “சகாப்தம் “முடிவுக்கு வர இருக்கிறது … !!!

………………………………………..

………………………………………..

வலைத்தளத்தில் ஒரு இடுகையைப் படித்தேன்…. உள்ளத்தைத் தொடும் உண்மை….கீழே –

……………………………………………..

*ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது*.

*இது இந்தியாவின் உண்மை*.

*அடுத்த 10 – 15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக*.

*ஆம்*…

*அது நாமாகவோ*,

*நம் தாயாகவோ, தந்தையாகவோ,

பாட்டி, தாத்தா,பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா*, *சித்தி, மாமி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்*

இந்த உண்மையை உணர்ந்து கொண்டு மேலே படியுங்கள்.

*நான் கூறும் இந்த தலைமுறை மக்கள் (நம் பெரியவர்கள்) முற்றிலும் வேறுபட்டவர்கள்*.

இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள்,

அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

காலையில் நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்

வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்..

*கடவுளை வழிபடுவதற்காக, தானே பூக்களைப் பறித்து – பிரார்த்தனை செய்பவர்கள்*,

*தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்*.

*வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள்*,

*அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும்* *விசாரிப்பவர்கள்*

*இரு கைகளை கூப்பி* *வணங்குபவர்கள்*.

*வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக் கொள்ளாதவர்கள்*

*அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்*.

திருவிழாக்கள், விருந்தினர் உபச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள்

அவர்களின் அனைத்துமே குடும்பத்தையும், உற்றார் உறவினர் நலனையும்

*அது மட்டுமில்லாமல் ஊரார் நலனையும்*, *அவர்களுக்கான விருந்தோம்பலையும் சுற்றி சுற்றியே வருகிறது*.

செய்தித்தாள்கள், லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் …

தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள்….

ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள் ….

*எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகியவற்றை நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள்*,

*கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள்*

*சமூக பயம் உள்ளவர்கள்*,

*பழைய செருப்புடன் உலா வருபவர்கள்*

*பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்*.

*கோடையில், ஊறுகாய்*, *வடாம் தயாரிப்பவர்கள்*

*வீட்டில் உள்ள உரலில்* *இடித்த மசாலாப்* *பொருள்களைப்* *பயன்படுத்துபவர்கள்*

*எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்*.

*இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா*?

*உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா*?

*ஆம் எனில்*, *அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்*.

*மரியாதை கொடுங்கள்*

*அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்*

*இல்லையெனில்*, *அவர்களோடு ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடமும் மறைந்தே போய்விடும்*

*அதாவது, மனநிறைவு*, *எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை*,

*கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை*,

*மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள* , *ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை*

*எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்*.

*எனவே இதற்காகவாவது உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்*.

*நம் முன்னோர்களே நமது அடையாளம்*.

*அவர்களே நமது முகவரி*

*மற்றும் நமது பெருமை*

*அவர்களிடமிருந்து அனைத்து பழக்க வழக்கங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கற்க வேண்டும்*.

*அப்போதுதான் நாம் நம் குழந்தைகளுக்கும்*, *நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்*.

அவர்களின் “சகாப்தம்” முடியும் முன்னரே, இந்த உண்மைகளை உணர்ந்து தெளிவோம்….

( நன்றி – பாஸ்கர் …)

…………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஒரு “சகாப்தம் “முடிவுக்கு வர இருக்கிறது … !!!

  1. Senthil Nathan's avatar Senthil Nathan சொல்கிறார்:

    அருமை அருமை ங்க 🌹

    மிக்க நன்றி ங்க 🙏

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.