
எமில் புஸ்தானி
…………………………………………………………………………………………………………………
லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். அவருக்கு சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. அதில் பயணம் செய்யும்போதுஜ், ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. அப்படியும், இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது.
அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசி வரை அந்த உடல் கிடைக்கவே இல்லை.
……………………………………………………………..

ரூட் சைல்ட்
…………………………………………………………………………………………………………………………..
பிரிட்டனைச் சார்ந்த பெரும் பணக்கார யூதர் ரூட் சைல்ட். ….அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சிலபோது பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார்.
ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவு தான்.!!! கடைசி வரை கதவு திறக்கவே இல்லை. சப்தமிட்டார்.. கத்தினார்.. கதறினார்… அழுதார் …. யாருக்கும் கேட்கவில்லை. ….காரணம், அவர் தங்குவது வீடல்ல.. அரண்மனை. அவர் பெரும்பாலும் அரண்மனையிலிருந்து பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார். அன்றும் அவர் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர்.
பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு பணக்கட்டுகளுக்கு மேல் கிடந்து மரணித்தார். மரணிக்கு முன் விரலைக் காயப்படுத்தி, அவரது ரத்தத்தால், சுவரில் எழுதினார் “”உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர், இறுதியில் பசியாலும் தாகத்தாலும் இங்கே இறக்கிறார்”” – என்று.
சில வாரங்களுக்குப் பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
……………………
பணம் மட்டும் இருந்தால் போதும்…. அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு – இவையெல்லாம் பாடங்கள்….
எல்லாரும் ஒருநாள் உலகைப் பிரிந்து தான் ஆகவேண்டும். ஆயினும் – , எங்கே..? எப்போது..? எப்படி..? என்பது மட்டும் யாருக்கும் தெரியாது = தெரிந்து கொள்ளவும் முடியாது.
அந்த வேளை வரும்போது – பணத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது ….!!!
……………………………………………………………………………………………………………………………………………………………………………..



கல்ஃபில் சம்பாதித்துப் பெரும் பணக்காரரான ஒரு மலையாளி, தனக்கு ஒரு பெரிய பங்களா கட்டி, அதன் ஆறு வாசல்களில் ஆறு விலையுயர்ந்த காரை நிறுத்திவைத்தார். கல்ஃப் சம்பாத்தியம் போதும் என்று நினைத்து தன் புதிய பங்களாவில் வாழ்வோம் என்று திரும்பியவர் விமானநிலையத்தில் (கேரளா) இறங்கியதும் இறந்துவிட்டார். அவரைக் கூட்டிச் செல்ல அந்த ஆறு புதிய கார்களில் ஒன்று வந்திருந்தது. புதிய காரில் பிணத்தை ஏற்றிச் செல்லக்கூடாது என்று, ஆம்புலன்ஸை வரவழைத்தார்கள். இவ்வளவு சம்பாதித்துவிட்டு அவரால் அவருடைய காரிலும் பயணிக்க முடியவில்லை, பங்களாவிலும் ஓய்வைக் கழிக்க இயலவில்லை.
இன்னொன்று நான் கேள்விப்பட்டது, சென்ற வருடம் முக்திநாத் சென்று வருவோம் என்று ஓய்வு பெற்ற (65-70க்கு மேல் வயது இருக்கும்) ஒருவர் யாத்திரை மேற்கொண்டார். அண்ணனுடன் தாங்களும் செல்வோம், அவ்வளவு தூரம் இருக்கும் கோயிலுக்கு வேறு எப்போது போகப்போகிறோம் என்று நினைத்து அவருடைய சகோதரிகளும் மற்ற உறவினர்களும் சேர்ந்துகொண்டனர். முக்திநாத் கோயிலுக்கு கடின பிரயாணத்திற்குப் பிறகு சுமார் 150 படிகள் ஏறவேண்டும். அந்தப் பிரதேசமெல்லாம் குளிர் அதிகம் என்பது தெரியுமல்லவா? கிட்டத்தட்ட 100 படிகளுக்கு மேல் ஏறினவர், கடைசி சில படிகள் இருக்கும்போது மாரடைப்பால் மரணமடைந்தார். (டிவிஎஸ் குழுமத்தில் தெரிந்தவர்களைக் கொண்டு அவரது உடல் கொண்டுவரப்பட்டது). அவருடன் சென்ற யாருமே தரிசனம் செய்ய முடியவில்லை.
இவையெல்லாம் வாழ்க்கையின் நிலையாமை. நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு செய்திகளையும் சில வருடங்களுக்கு முன்பே படித்துவிட்டேன்.