ஜெமினி வாசன் அவர்களைப்பற்றிய சில சுவாரஸ்யங்கள் – கொத்தமங்கலம் சுப்பு ….. !!!

……………………………………..

……………………………………………………………………………………………………………………………………………………………

கடைசி நாள் வரை எஸ்.எஸ்.வாசன் அவர்களுடனே பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் ( தில்லானா மோகனாம்பாள் நினைவிருக்கிறதா …??? ) வாசன் அவர்களைப்பற்றி சொன்னது ….

…………………………………………….

” அவருக்கு – தானொரு முதலாளி என்ற எண்ணமே தோன்றியதில்லை….!!!”

“வேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் ஷூட்டிங் மும்முரத்தில் வெறும் ரொட்டியைத் தின்றுவிட்டுப் படம் எடுப்பார். அதிலும், ‘சந்திரலேகா’ படப்பிடிப்பின்போது அவர் பட்டபாடு சொல்லத் தரமன்று.

ஸ்டுடியோவில் மூலைக்கு மூலை யானைகளும் குதிரைகளும் கட்டிக்கிடக்கும். அகழிகளின் அருகில் காவலர்கள் நிற்பார்கள். எங்கு பார்த்தாலும் அரண்மனைகளாக இருக்கும். அந்தப்புரப் பணிப் பெண்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள்.

போர்ட்டிகோக்களில் அரண்மனைக் கோச்சுகளும், ‘நான்கு குதிரை சாரட்’டுகளும் நிற்கும். ‘மெஸ்’ஸிலிருந்து அரண்மனைச் சமையல் மணம் வந்துகொண்டே இருக்கும். வாத்தியக்காரர்களும் சங்கீத வித்வான்களும் கொண்ட ஜெமினி ஆர்கெஸ்ட்ரா முழங்கிக்கொண்டே இருக்கும்.

‘நம்பர் ஒன்’ ஸ்டுடியோவில் ஜெர்மன் பெண் ஒருவர் 100 நாட்டிய வனிதைகளை ஆட்டி வைத்துக்கொண்டு இருப்பார். ஆயுத சாலைகளில் கத்திகள் தயார் ஆகும். ஸ்டன்ட் வீரர்களும், ரஞ்சன், ராதா, சியாம்சுந்தரும், சோமுவும் வாட்போர் நடத்திக் கொண்டே இருப்பார்கள்.

ஜெமினி ஸ்டுடியோவே ஒரு பெரிய சமஸ்தானமாகக் காட்சி அளிக்கும். ஆனால், ‘எங்கே அந்த சமஸ்தான மன்னர்? ராஜா எங்கே?’ என்று கேட்டால்,

ஒரு தொளதொளத்த கதர் சட்டையையும், அதன் மேல் மூன்று முழத் துண்டையும் போட்டுக் கொண்டு, அவர் எங்கும் இருப்பார். புதிதாய் அமர்த்திய தொழிலாளர்கள் சிலர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்… “எங்கே தம்பி, முதலாளி? இதைப் பார்க்கவே வரமாட்டேங்கறாரே?”

“பட முதலாளி இல்லியா… எத்தினியோ வேலை இருக்கும்!”

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தங்கள் அருகில் நிற்கும் அந்த எளிய மனிதர்தான் முதலாளி என்பது தெரியவில்லை….

அந்த முதலாளிக்கும், ” நான்தான் உங்கள் முதலாளி ” என்று சொல்லத் தோன்றவில்லை. ஏன் என்றால், தான் முதலாளி என்ற எண்ணமே அவருக்கு ஒரு நாளும் தோன்றியதில்லை.”

…………………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஜெமினி வாசன் அவர்களைப்பற்றிய சில சுவாரஸ்யங்கள் – கொத்தமங்கலம் சுப்பு ….. !!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சில மனிதர்கள் மிகவும் அசாதாரணர்கள். உதாரணம் ஜீவா அவர்கள், எஸ் எஸ் வாசன், ஏ வி எம் செட்டியார், காமராஜர்…. இந்த மாதிரி அசாதாரணர்கள் 60க்கு அப்புறம் பிறந்தமாதிரியே தெரியவில்லை. அந்த அசாதாரணர்கள் வாரிசுகளும் வெகு சாதாரணர்களாகவே இருந்தார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.