சிலிகான் வேலி’யிலிருந்து – “மத்தளம்பாறை” கிராமத்துக்கு குடிபெயர்ந்த தமிழ்நாட்டின் சொத்து – ஸ்ரீதர் வேம்பு … !!!

……………………………………

…………………………………….

அமெரிக்காவின் சிலிகான் வேலி’யிலிருந்து – தமிழகத்தின் “மத்தளம்பாறை” கிராமத்துக்கு குடிபெயர்ந்த

  • Zoho Corporation …
  • ஸ்ரீதர் வேம்பு –

உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”, தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) .

ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

அங்கு தான் இருந்தது.

அதன் தலைமையகத்தை, 2019ஆம் ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் “மத்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர்.

இப்போது, ஒரே வருஷத்தில், இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள், வியந்து போய் இருக்கிறார்கள்.

மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீதர் வேம்பு போவது சைக்கிளில் தான்.

சாப்பிடுவதும், டீ அருந்துவதும், கிரிக்கெட் விளையாடுவதும் கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுடன் தான்.

கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளைத் திரட்டி, 4 ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு நவீன கணினிப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

நவீன மருத்துவமனை, சாக்கடைகள், குடிநீர்வசதி, நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றை அக்கறையுடன் மத்தளம்பாறைக்குக் கொண்டு வந்துள்ளார்.

இந்தியாவின் கிராமங்களில் உள்ள 8000 இளைஞர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி கொடுத்து , வேலை வாய்ப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் இந்த உண்மையான தமிழன்..

இவர் மாதிரி மாநிலத்துக்கு 10 வழிகாட்டிகள் இருந்தால், நம் நாடு பத்தே ஆண்டுகளில் , அமெரிக்கா, சைனா ஆகிய நாடுகளை எளிதில் முன்னேறிச் சென்று விடும் என்பதில் ஐயம் இல்லை..

…………………………………………………….

…………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.