” எண்ணை … ” – விவகாரமான யோசனைகள் ……!!! அண்ணன் சீமான் அவர்கள் …… ……. ……………

…………………………….

……………………………….

நிருபர் : ரஷ்யா கிட்ட க்ரூட் ஆயில் வாங்கக்கூடாதுன்னு டிரம்ப் சொல்றாரு…இந்தியாவோட ஆயில் கம்பனிங்களும் ரஷ்யா கிட்ட க்ரூட் ஆயில் வாங்கறத நிறுத்தப்போறதா ….

“இருங்க , இருங்க …இப்ப கச்சா எண்னெய் எதுக்கு? கச்சா எண்ணெய் இல்லன்னா இங்க எதுவும் நடக்காதா? நம்ம முப்பாட்டான் எல்லாம் கடல் கடந்து போய் வாணிபம் செய்யறப்பவும், மத்த நாட்ட எல்லாம் வென்று வெற்றிக்கொடி நாட்டிட்டு வந்தப்பவும் கச்சா எண்ணை பயன்படுத்தியா பண்ணான்?

கச்சா எண்ணைக்கும் நம்ம கலாச்சாரத்துக்கும் என்ன சம்மந்தம்…? எதோ நீங்க எண்ணை சுத்தகரிப்பு ஆலைங்கள அமச்சி, மூலக்கி மூல எண்ணை நிரப்பும் நிலையங்கள தொறந்து வச்சி ஒரு குழாய கைல புடிச்சிகிட்டு நிக்கிறதால என் அண்ணன் ,தம்பி , அக்கா தங்கச்சி எல்லாம் தன் கிட்ட இருக்குற இருசக்கர உருளியத் தள்ளிட்டு போய் அதுல இருக்குற ஒட்டய தொறந்து காட்டிட்டு நிக்கிதுங்க.

இல்ல நான் கேக்கறேன், எத்தனையோ பெரிய போர எல்லாம் என் பாட்டன் பூட்டன் பண்ணிருக்கான். அப்பல்லாம் இந்த எண்ண தேவப்பட்டுச்சா? இமயத்துல இருந்து கல்ல கொண்டாந்து கோயில் கட்னப்ப தேவப்படாத எண்ணை –

இப்ப பக்கத்து தெருவுக்கு போய் பரோட்டா வாங்கறதுக்கே தேவைன்ற நெலைல கொண்டாந்து விட்டது யாரு ?

நான்லாம் சின்னப்பையனா இருந்தப்ப எங்க ஐயா கம்பர் – கள்ளு வேணும்னு கேட்டா பனை வண்டிய ஓட்டிக்டிடு டுர்ருன்னு சத்தம் போட்டுகிட்டே பனங்காட்டுக்கு ஓடி மரம் ஏறி கள்ளு எறக்கிக் கொண்டாந்து குடுப்பேன்.

நான் வுட்ட அந்த டுர்ர்ரு சத்தத்துக்கு எண்ணை தேவைப்பட்டுச்சா?

உடனே நீங்க எல்லாம் என்னா சொல்வீங்க? கம்பர் காலம் என்னா? இவன் காலம் என்னா? பொய் புளுவறான்னு நக்கல் பண்ணுவீங்க. நான்னா நானா? ஏன் இப்டி எல்லாம் …

உங்க கிட்ட எல்லாம்…. கேட்டா விஞ்ஞான முன்னேற்றம்ன்பீங்க? எது முன்னேற்றம்? சுற்றுச் சூழல் பாதிக்கப்படறதா முன்னேற்றம்? இந்த எண்ணையால எவ்ளோ சுற்றுச் சூழல் பாதிக்கப்படுது? கரியமில வாயு மட்டுமா வருது? இந்த எண்ணையால தான் இவ்ளோ பெரிய சாலைகள் வருது. மக்களும் மிருகங்களும் வாழற காட்டையும் நாட்டையும் அழிச்சி 400 அடி சாலை போடறான்.

மனுஷனுக்கு எதுக்குடா நானூறு அடி சாலைன்னு எவனாச்சும் யோசிச்சானா?

ஒத்தையடிப்பாதைல உல்லாசமா போயி சொகுசா வாழ்ந்துட்டு இருந்த இனம் தம்பி இது….

என் தாத்தன் பெரியப்பன எல்லாம் குடகு மலைல விட்டா, மலையூடாவே போயி மேற்குத்தொடர்ச்சி மலைல நீலகிரி வந்து , என் முப்பாட்டன் பெட்டாக் குறும்பன் வீட்ல தங்கி பசியாறி, அங்க இருந்து கிழக்குத் தொடர்ச்சி மலையப் புடிச்சி,

சீனாக்காரண்ட்ட போயி சீலைய வித்துட்டு வந்துடுவான்.

இதெல்லாம் சொன்னா….

இல்ல நான் கேக்கறேன்…இந்த எண்ணையால என்ன புண்ணியம்.. ? வாகனம் இயக்கறதுக்குன்னு சொல்வீங்க….நான் கேக்கறேன்…ஏன் வாகனம் இயக்கணும் ? எதுக்கு அவனவனும் ஒரு எடத்துல இருந்து இன்னொரு எடத்துக்கு ஓயாம போய்கிட்டே இருக்கீங்க?

கேட்டா வேலையாப்போறேன்னு சொல்ல வேண்டியது. சென்னைல இருக்குறவன் கோவைக்கு வேலைக்கு போறான். கோவைல இருந்து சென்னைக்கு வேலைக்கு வரான். என்னா இது? யோசிக்கணுமா இல்லியா?

சென்னைல எடுத்துகிட்டா –

தாம்பரத்துல இருந்து பாரிமுனைக்கு வேலைக்கு போறான். பாரிமுனைல இருந்து தாம்பரத்துக்கு வரான். போக்குவரத்து ரெண்டு பக்கமும் அதிகமாத்தான் இருக்கு. இதெல்லாம் பைத்தியக்காரத்தனமா இல்லியா?

இதெல்லாம் இந்த கச்சா எண்ணையாலதான?

கால் நடையாத்தான் போவணும்னா யோசிப்பான் இல்ல?

வண்டி இருக்கு, எண்ணைய ஊத்து…வேக மிதிப்பானை மிதின்னு அவனவனும் வேகமா போய் என்ன பண்றான்….தெருவுல செவனேன்னு படுத்துட்டு இருக்குறவன் மேல ஏத்தி சாவடிக்கிறான். இதுவரைக்கும் இந்த எண்ணையால உண்டான எண்ணைச் சாவுன்னு எவனாச்சும் கணக்கெடுத்து இருக்கானா? எடுக்க மாட்டான். ஏன்னா எடுத்தா அவன் குட்டு வெளிப்பட்டுடும்.

அவனவன் அவனவன் ஊர்ல இருந்துகிட்டு அவனவன் மண்ண நேசிச்சிகிட்டு அவனவன் உறவுகள் கூட ஒண்ணு மண்ணா கெடந்துகிட்டு, அன்பா, பண்பா , வாழலாம் இல்ல?

இந்த எண்ண இருக்கறதால என் தம்பிங்க எல்லாம் வெளியூரு வெளிநாடுன்னு ஓடிடறான். என் தங்கசிங்க எல்லாம் தனியா கெடந்து …என்னத்த சொல்றது? ….அப்ப என் முப்பாட்டன் திரைக்கடல் ஓடி திரவியம் தேடிட்டு வர்ர வரைக்கும் முப்பாட்டிங்க எல்லாம் பசலைல பாட்டுப்பாடிட்டு கெடந்தாங்க.

காலம் மாறிடிச்சி…இப்ப பசலை இருக்கா? இப்பவும் பாட்டு பாடிட்டா கெடக்க முடியும்? நம்மூருக்கு வர்ர வெளியூர்க்காரன் மேஞ்சிட்டு போயிடறான்.

ஒரு மூத்த இனத்த இனக்கலப்பு செஞ்சி அழிச்சதத் தவிர இந்த எண்ணை என்ன பண்ணுச்சி?

…………………………………

என் குறிப்பு – இதைப்படித்ததும் உங்களுக்கு என்ன தோன்றிற்றோ – எனக்குத் தெரியாது…. ஆனால், அண்ணன் சீமான் அவர்கள் சொன்ன யோசனை என்று நினைத்து விடப்போகிறீர்களே என்று தான் தலைப்பிலேயே எச்சரிக்கை செய்ய முயன்றேன்…. மேற்கண்ட கருத்துகளுக்கு சொந்தக்காரர் சீமான் அண்ணன் அல்ல….. ” அராத்து ” அண்ணன்….😊😊😊”

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ” எண்ணை … ” – விவகாரமான யோசனைகள் ……!!! அண்ணன் சீமான் அவர்கள் …… ……. ……………

  1. அவரது பேச்சு கேட்பதற்கு மட்டுமே… நடைமுறை வாழ்வுக்கு முற்றிலும் ஒத்து வராது!
    அதனால்… படித்ததும் கிழித்து விடவும்!!

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நல்லா எழுதியிருக்கார் அராத்து. கச்சா எண்ணெய் தருவது முன்னேற்றம் ஆனால் ஏஐ வேலை வாய்ப்பையே அழித்துவிடும் அந்த வளர்ச்சி ஆபத்து என்பது தானும் சீனாவும் ரஷ்யாலேர்ந்து என்னனாலும் வாங்கலாம் அந்தப் பணத்தை ரஷ்யா எளிய மக்களுக்கான சாரிட்டிக்கு உபயோகிக்குது ஆனால் இந்தியா அளிக்கும் பணத்தை வைத்து போரில் பலரைக் கொல்லுது என்பதுபோல இருக்கு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.