……………………………….

…………………………………

காலை உணவை பிரேக்பாஸ்ட் என்கிறார்கள். இரவு முழுவதும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் வயிற்றுக்கு எதுவும் அனுப்பாமல் உள்ள அந்த உறக்க நேரம் ஏறக்குறைய சிறிய விரதம் போலத்தான்.
விரதம் என்பதை ஆங்கிலத்தில் பாஸ்ட் என்கிறோம். இதை பிரேக்… உடைப்பது – விரதத்தை முடிப்பது.
நிறையப் பேர் நான் காலையில் சாப்பிடுவதில்லை என்று பெருமை பேசுவார்கள். அப்படிக் காலையில் சாப்பிடாமல் மதியம் சாப்பிடுபவர்களைப் பாருங்க… இயந்திரத்தனமாக இருப்பார்கள். நாளடைவில் ஆரோக்கியமற்று இருப்பார்கள்.
காலையில் ராஜா போல் சாப்பிட வேண்டும். ராஜா மாதிரி என்றால் நிறையச் சாப்பிட வேண்டும் என்றல்ல.. நிறைவாக, அதாவது சத்துள்ள உணவுகள் குறைந்த அளவு சாப்பிடுவதே ராஜ உணவு.
இட்லிக்கு சட்னியை விட சாம்பாரே சிறப்பு. காரட், பீட்ரூட், கொய்யாக்காய், வாழைப்பழம், வசதியிருந்தால் ஆப்பிள்.
தினமும் பார்லி கஞ்சி குடிப்பது தவறு.
மதியம் யோகிபோல் அளவாக சாப்பிடுங்கள். இரவு ரொம்பக் குறைவா சாப்பிட வேண்டும்.
மனிதனுக்குப் பணம் சம்பாதிப்பது எப்படி முக்கியமோ அதேபோல் உணவு, உறக்கம், உடற்பயிற்சி என்ற மூன்றும் முக்கியமே.
உணவு, உறக்கம், உடற்பயிற்சி சரியாக இருந்தால்- ஆரோக்கியம் தானா வரும்.
ஆரோக்கியம் வந்தால் உற்சாகம் வரும், உற்சாகம் வந்தா மனசு உழைக்கச் சொல்லும்.
உழைச்சா… பணம் வரும், மரியாதை வரும், நிம்மதி வரும்.
நம்மில் நிறையப் பேர் சம்பாதிப்பது மட்டும் பிரதானம். பணம் இருந்தால் எல்லாம் தானா வரும் என்று உறக்கத்தை மறந்து, உணவை மறந்து, உடற்பயிற்சியை மறந்து உழைக்கிறார்கள். பணம் வருகிறது- ஆரோக்கியம் போய் விடுகிறது. ஆரோக்கியம் போனா எல்லா வினையும் வரும்.
உணவு முக்கியம்தான். வயிறு நிரம்ப உண்பதுதான் சரி என்று நெஞ்சு முட்டும் வரை சாப்பிடுவது என்பதும் தவறான ஒன்றாகும்.
நான் சிறிய வயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளாமல் இருந்து விட்டேன்….. நிறைய்ய்ய்ய நாட்கள் ப்ரேக்-ஃபாஸ்டை தவற விட்டு விட்டேன்… ( விளைவு – இப்போது – படுகிறேன் … அவஸ்தை…!!!)
உடற்பயிற்சிக்காக ஜிம் போவது தவறல்ல. உடற்பயிற்சிக் கூடங்களில் சத்து உணவுகள் என விற்பனை செய்கிறார்கள். அவைகளைச் சாப்பிட்டால் செயற்கையான வழியில் உடல் பருமன் பெறும். ஆனால் பலூன் போல ஒருநாள் வெடிக்கும்.
உடல் அல்ல.. உடலின் உள்ளே இரத்தக் குழாய்கள் அடைக்கும், வெடிக்கும்.
உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் செயற்கை உணவைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஒரு காலகட்டத்தில் – உடல் மற்ற உணவுகளை ஏற்றுக் கொள்ளாது.
பிரபல நடிகர் உடற்பயிற்சிக் கூடத்தில் திடீர் என மரணம் அடைந்ததற்குக் காரணம் இதுபோன்ற உணவுப் பழக்கம்தான். வேறு உணவுகள் எடுத்துக் கொண்டால் உடல் ஏற்றுக் கொள்ளாது. எதிர்மறை விளைவை உண்டாக்கி விடும்.
எல்லா உணவுகளையும் கலந்து உண்ணும் பழக்கம் வேண்டும். அதிகப்படியான கருவாடு, ஊறுகாய், அப்பளம் கிட்னி பாதிப்புக்கு வழிவகுக்கும்.
எண்ணெய்ப் பண்டங்கள், குறிப்பா பஜ்ஜி, போண்டா, வடை, முக்கோண சமுசா, பப்ஸ் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தக் குழாய்கள் அடைக்கத் தொடங்கும்.
சீசன் பழங்களைச் சாப்பிட வேண்டும். வீண் செலவு, வெட்டிச் செலவு செய்கிறோம். பழங்களுக்கு மட்டும் விலை அதிகம் என்கிறோம். பப்பாளி, சப்போட்டா, சீதாப்பழம், கொய்யாக்காய், மாம்பழம், தர்ப்பூசணி, பப்பாளிப் பழம் தொடர்ந்து சாப்பிட்டால் நல்லது.
சர்க்கரைக் குறைபாடு, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து உட்கொள்வது உயிர்ப் பாதுகாப்பு. அதே நேரம் யோகாசனம், தியாயம் தொடர்ந்து செய்தால் உடல் நலம் பெறும், உடல் பலம் பெறும்.
ஊசிக் குறிப்பு : இரவு உறக்கம் வராவிட்டால் படுக்கையில் அமர்ந்து நீங்கள் அடிக்கடி செல்லும் ஆலயங்களை மனதில் கொண்டு வாருங்கள். கற்பனையில் கோயிலில் முகப்பில் இருந்து உள்ளே நடந்து உள் பிரகாரத்தில் இருக்கும் மூலவரைப் பார்க்கச் செல்லுங்கள். செல்லும் போது வழியில் இருக்கும் சாமிகளையும் பாருங்கள். மூலவரைப் பார்ப்பதற்குள் நீங்கள் சுகமாய்த் தூங்கி இருப்பீர்கள். (உதவிக்கு நன்றி – பாக்கெட் நாவல் அசோகன் ….!!!)
……………………………………………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….