சோஷியல் மீடியாக்கள், நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ – தடையாக இருக்கின்றன …… இயக்குநர் ராஜூ முருகன்…!!!

………………………………………..

…………………………………………..

நான் கம்யூனிஸ்ட் இல்லை…. ( நிஜமான கம்யூனிஸ்டுகளை இப்போது பார்ப்பதே அரிதாக இருக்கிறது என்பது வேறு விஷயம் ) …. இருந்தாலும், நான் கம்யூனிச தத்துவங்கள் பலவற்றை ஆதரிப்பவன் … யதார்த்த வாழ்வில் , சிறிய வயதிலிருந்து இன்று வரை கடைபிடிப்பவன்.

கீழே. எழுத்தாளர் – இயக்குநர் ராஜூ முருகன் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்வது …..

……………………………………..

பொருட்களைக் குறைவாகப் பயன்படுத்தி, வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் (Own Less Live More) என்று இப்போதுள்ள இளைஞர்களுக்கு எவ்வாறு கூறுவீர்கள்?

………….

நான் சோசியல் மீடியாக்களைப் பயன்படுத்துவதில்லை….. நாம் நினைக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு இது ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

மனிதர்கள் யாரும் அவர்களுக்காக வாழ்வதில்லை. பிறருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது ஒரு நோயாகவே உள்ளது. அது தற்போது அதிகமாகவே உள்ளது.

கார் வாங்கியவுடன் அதனை சோசியல் மீடியாவில் போஸ்ட் ஆக வெளியிடுவதன் தேவை இருக்கிறதா? அது ஒரு மிகப்பெரிய சாதனை இல்லை. அது நம்முடைய தேவை.

இந்த உலகத்தில் கார் இல்லாமல் கோடான கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட அதிகமாக உழைப்பவர்கள். சொல்லப்போனால் அவர்கள் தான் உலகத்திற்காக அதிகமாகச் சிந்தனை செய்பவர்கள்.

அவர்களிடம் கார் கிடையாது. நான் நன்றாக இருக்கிறேன் என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் போதுமானது. ஆனால் அதனைச் சமூகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை என்று நான் சொல்கிறேன்.

அதில் ஒரு மோட்டிவேஷன் மற்றவர்களுக்குக் கிடையாது என்று சொல்கிறேன். கோடான கோடி மக்களை நாம் ஹர்ட் செய்கிறோமோ என்று நான் நினைப்பேன்.

நாம் வசதியாக இருக்கிறோம் என்று மற்றவர்களுக்குக் காட்டுவது என்பது ஒரு நோய் என்று நான் நினைக்கிறேன். வாழ்க்கை என்பது வாழ்வதற்காகவே, அதனை யாருக்கும் காட்டிக் கொள்வதற்காகவோ, மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமோ இல்லை.

இப்போது உள்ள மக்களிடம் உள்ள எண்ணம் என்னவென்றால் நம்மைச் சுற்றி எதிரிகள் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் தாண்டி நாம் உயர வேண்டும் என்பதுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.

அதுதான் வன்மமாக மாறுகிறது. எல்லோருமே மற்றவர்கள் முன் நான் வாழ்கிறேன் எனக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

பொருட்கள் என்பது தேவை மட்டுமே. ஒரு தேவை ஏற்படும்பொழுது ஒரு பொருளை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். ஒரு செருப்பு வாங்குகிறோம் என்றால் அது பிய்கிற வரைக்கும் போட்டுக்கொண்டு பிறகு அதனைப் போட்டுவிட்டு வேறு ஒரு செருப்பு வாங்க வேண்டும் என்பது தான்.

அதனை கம்யூனிஸ்ட் இயக்கம் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது.

நிறைய கம்யூனிச தோழர்களை நான் பார்த்துள்ளேன். அந்த ஊருக்கு அவர்களால்தான் சாலை போடப்பட்டிருக்கும், பள்ளிகள் கட்டப்பட்டிருக்கும் ஆனால் அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் சாதாரணமாக நடந்து கொள்வார்கள்.

ஒரு தேநீர் மட்டும் குடித்துவிட்டு உலக அரசியலைப் பேசிவிட்டு அந்த நாளைச் சந்தோஷமாகக் கழிப்பார்கள். அவர்களால்தான் பல விஷயங்கள் நடந்திருக்கும். அதனை அவர்கள் கிளைம் கூடச் செய்ய மாட்டார்கள்.

அதனை வைத்துத்தான் நான் புரிந்து கொண்டேன், பொருள் என்பது பெருமை அல்ல, தேவை மட்டும்தான். அதனைத்தான் இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். – (நன்றி: விகடன் தளம் )

………………………………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.