ஆங்கிலேயர்கள் இந்தியாவிடமிருந்து திருடிய செல்வத்தின் மதிப்பு … !!!

……………………………………………….

………………………………………………..

இந்தியாவை பிரிட்டன் கிட்டதட்ட 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இந்திய வரலாற்றின் மிகவும் துரதிர்ஷ்டமான காலகட்டம் இந்த 200 ஆண்டுகள்தான்.

பிரிட்டன் இந்தியாவை ஆட்சி செய்த போது தொழில்நுட்பரீதியாக பல முன்னேற்றங்கள் இருந்தாலும் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் செல்வம் கடுமையாக சூறையாடப்பட்டது. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் இந்தியாவின் செல்வத்தின் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு நாடுகடுத்தப்பட்டது.

காலனித்துவ இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நிதி உறவுகள் குறித்து ஆராய்ச்சி செய்த பொருளாதார நிபுணர்கள், அனைத்து இந்தியர்களின் மனதிலும் இருக்கும் கேள்விக்கு பதிலளித்துள்ளார்கள், அதுதான் பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து எவ்வளவு பணத்தை திருடியது …?

பிரபல பொருளாதார நிபுணர் உத்சா பட்நாயக்,

சமீபத்தில் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் வெளியிடப்பட்ட தனது கட்டுரையில், பிரிட்டன் இந்தியாவில் இருந்து $45 டிரில்லியன் டாலர்களை சூறையாடியது என்றும், இந்தியா இன்றுவரை வறுமையிலிருந்து மீள முடியாமல் இருக்க இதுவே காரணம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் 77 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறி இருந்தாலும் அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்றுவரை தொடர்கிறது. இந்தத் தொகை இன்று பிரிட்டனின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சுமார் 15 மடங்கு அதிகம்.

இந்தியாவை ஆண்டதால் பிரிட்டனுக்கு எந்தவித பொருளாதார நன்மையும் கிடைக்கவில்லை என்று பிரிட்டன் மக்கள் நம்புகிறார்கள், ஆனால் உண்மை முற்றிலும் வேறு. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிலிருந்து சுரண்டிய செல்வம் அவர்களின் நிதிநிலை வெகுவாக அதிகரித்தது.

தங்கம் மற்றும் அந்நிய செலாவணி வருவாய் போன்ற விலைமதிப்பற்ற வளங்களுக்காக இந்தியர்களுக்கு ஒருபோதும் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை, இவை அனைத்தும் பிரிட்டிஷ் நாட்டின் மக்களுக்கு உணவளிக்கச் சென்றன. “இந்தியாவின் காஸ்ட்லி எருமை இதுதான்… இதோட விலை மொத்த இந்தியாவையும் ஆச்சரியப்படுத்தும்… எவ்வளவு தெரியுமா?”

ஆய்வின்படி, 1900 முதல் 1945-46 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் தனிநபர் வருமானம் கிட்டத்தட்ட சீராக இருந்தது. 1900-02ல் இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ.196.1 ஆக இருந்தது,

ஆனால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு 1945-46ல் வெறும் ரூ.201.9 ஆக மட்டுமே இருந்தது.

1929 க்கு முன் மூன்று தசாப்தங்களாக உலகின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி உபரி வருவாயை இந்தியா பதிவு செய்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலேயர்கள் மத்திய அரசின் பட்ஜெட்டில் 26-36 சதவீதத்திற்கு சமமான வளங்களை சூறையாடினர்.

இது ஒரு ‘வளர்ந்த’ தேசத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். இந்த சர்வதேச வருவாய் இந்தியாவில் இருந்திருந்தால், சரியான சுகாதாரம் மற்றும் சமூக நலக் குறியீடுகளின் அடிப்படையில் நாடு மிகவும் முன்னேறியிருக்கும்.

“இந்த நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு ரொம்ப அதிகமாம்..இங்க சுற்றுலா போனா பட்ஜெட்டில் ராஜா மாதிரி சுத்தலாமாம்!” பிரிட்டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து, அதிக வரி விதித்ததால், இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டு இந்திய மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது.

பொருளாதார நிபுணரின் கூற்றுப்படி, 1900 ஆம் ஆண்டில் 200 கிலோவாக இருந்த தனிநபர் ஆண்டு உணவு நுகர்வு 1946 இல் இரண்டாம் உலகப் போரின் போது 137 கிலோவாகக் குறைந்தது.

சுதந்திரத்தின் போது இந்தியாவின் நிலை அனைத்து சமூக காரணிகளிலும் மோசமாக இருந்தது என்று அவர் கூறினார். இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேற இதுவும் காரணம்.

பிளாசிப்போர் வியாபாரிகளாக இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்கள் ஆட்சியாளராக மாற பிளாசிப்போரே காரணமாக இருந்தது. பிளாசிப் போரில் வெற்றி பெற்ற பிறகு, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவினர்.

…………………………………………………………………………………………………………………………………………………………………….…………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.