உதயமாகுமா சுதந்திர பலோசிஸ்தான் ….??? ( இந்தியாவின் உதவியோடு … !!! )

…………………………………………

………………………………………..

பலோசிஸ்தானின் வரலாற்றுப் பின்னணி –

முதலில், சில முக்கிய தகவல்கள் –

பலோசிஸ்தானின் மொத்த மக்கள் தொகை சுமார் 1.5 கோடி தான் என்றாலும் கூட பாகிஸ்தானின் பெரும் நிலப்பகுதியை பலோசிஸ்தான்   கொண்டிருக்கிறது….. பாகிஸ்தானின் பரப்பளவில் பலோசிஸ்தான் தான் மிகப்பெரிய மாகாணம் ……இதன் நிலப்பரப்பு பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் 44% ஆகும்.

பலோசிஸ்தான் தனியாகப் பிரிந்தால் பாகிஸ்தானில் பாதி போய் விடும்….!!!

எக்கச்சக்கமான கனிம வளங்களை கொண்ட பூமி
பலோசிஸ்தான்.

கிபி 13ம் நூற்றாண்டில் செங்கிஸ் கானின் மங்கோலியப் பேரரசில்
இருந்த பலுசிஸ்தான், 14ம் நூற்றாண்டில் தைமூர் பேரரசில் சென்றது.
கிபி 15ம் நூற்றாண்டு முதல் முகலாயப் பேரரசில் ஒரு பகுதியாக பலுசிஸ்தான் இருந்தது.

கிபி 17-ஆம் நூற்றாண்டு முதல் 1948 முடிய பலுசிஸ்தான்,
பிரிட்டிஷ் இந்தியாவின் கட்டுப்பாட்டில், ஒரு சுதேச சமஸ்தானமாக இருந்தது.

1947-ல் நடைபெற்ற இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பலூசிஸ்தான்
பகுதி, அந்த மக்களின் விருப்பத்துக்கு எதிராக, பாகிஸ்தான் நாட்டோடு இணைக்கப்பட்டு, அதன் ஒரு மாகாணமாக உள்ளது….

பலோசிஸ்தான் மக்களின் புரட்சிப் பின்னணி –
(இடுகையின் பல தகவல்கள் வெவ்வேறு இணைய தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை ….)

பலுசிஸ்தான் பிணக்குகள் –

முதல் பிணக்கு –

1948 பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டப்படி, பலுசிஸ்தான் மன்னராட்சிப் பகுதி, பாகிஸ்தான் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சூலை 1948ல் பலுசிஸ்தான் இளவரசரின் படைகள் துப்பாக்கிகள் ஏந்தி, பாகிஸ்தானிய அரசுப் படைகளுக்கு எதிராக 1950ம் ஆண்டு வரை கலகம் செய்தனர். பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னாவும், அவருக்குப் பின் வந்தவர்களும், பலுசிஸ்தான் சமஸ்தானத்தை 1955ல் கலைக்கும் வரை
விட்டு வைத்தனர்.

இரண்டாம் பிணக்கு –

பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்திய ஒரு நாட்டுக் கோட்பாட்டினால், பலுசிஸ்தான் பழங்குடி மக்களுக்கு மைய அரசில் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்காத காரணத்தினால், நவாப் நௌரோஸ் கான் குழுவினர், பாகிஸ்தான் அரசுப் படைகளுக்கு எதிராக 1958 முதல் 1959 முடிய ஆயுதமேந்தி கொரில்லாப் போரில் ஈடுபட்டனர். இறுதியாக நவாப் நௌரோஸ் கான் குழுவினரை சிறை பிடித்து தூக்கிலிட்டு, பலுசிஸ்தானியர்களின் கிளர்ச்சியை அடக்கினர்.
( Nawab Nauroz Khan fought a lone battle as the rest of Balochistan did not support the uprising.)

மூன்றாம் பிணக்கு –

1960களில் தனி பலுசிஸ்தான் நாடு கோரிக்கையை முன்வைத்து
போராட்டம் வெடித்தது. பாகிஸ்தான் அரசுப்படைகளுக்கு எதிராக
1963 முதல் 1969 முடிய கொரில்லாப் போர் நடைபெற்றது. பலுசிஸ்தானியர்களின் தொடர் எதிர்ப்பின் காரணமாக, 1970ல்
பாகிஸ்தான் அதிபர் யாகியா கான் ஒரே நாடு, ஒரே அரசு என்ற ஒரு அலகு கோட்பாட்டை கைவிட்டு, பலுசிஸ்தானை பாகிஸ்தானின்
ஒரு மாகாணமாக அங்கீகரிப்பட்டதுடன், அனைத்து மாகாணங்களுக்கும், மைய அரசின் அதிகாரங்களைப் பிரித்து வழங்கினார்.

நான்காம் பிணக்கு 1973–77 –

1973-ல் பாகிஸ்தான் அதிபராக இருந்த சுல்பிக்கார் அலி பூட்டோ, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாண அரசுகளை கலைத்து இராணுவ ஆட்சியை கொண்டு வந்தார். இதனால் தனி நாடு கோரி,
மீர் அசர் கான் ராம்கனி தலைமையில் பலுசி ஸ்தான் மக்கள் விடுதலைப் படை என்ற ஆயுதமேந்திய அமைப்பு தோன்றிது…பலுசிஸ்தான் கொரில்லாப்படைகளுக்கும், ஈரான் உதவியுடன் கூடிய பாகிஸ்தானிய இராணுவத்திற்கு இடையே நடைபெற்ற மோதல்களில், பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் 300 – 400 வரையும், பலுசிஸ்தான் கொரில்லா வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 7,300 – 9,000 வரை கொல்லப்பட்டனர்.

ஐந்தாம் பிணக்கு 2004 முதல் – தற்போது வரை –

2004-ல் பலுசிஸ்தான் தனி நாடு கோரும் புரட்சிப் படையினரால்,
சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருந்த குவாதார் துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், நான்கு பேர் காயமடைந்தனர். 2005ல் பலுசிஸ்தான் அரசியல் தலைவர்கள் நவாப் அக்பர் கான் புக்தி மற்றும் மீர் பாலச் மர்ரி ஆகியோர் பாகிஸ்தான் அரசுக்கு 15 அம்ச கோரிக்கையை அனுப்பினர்.

15 அம்ச கோரிக்கையின் முக்கியமானது, பலுசிஸ்தானில் கிடைக்கும்
கனிம வள வருவாயில் கனிசமான பங்கு பலுசிஸ்தான் மாகாண அரசுக்கு வழங்குதல் மற்றும்
பலுசிஸ்தானில் உள்ள இராணுவ கட்டமைப்புகளுக்காக, பலுசிஸ்தான் மாகாணத்திற்கு பெருந்தொகை வழங்க ஈட்டுத்தொகையாக வேண்டும் என்பதே.

15 டிசம்பர் 2005-ல் பலுசிஸ்தானுக்கு ஹெலிகாப்டரில் சென்ற பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்புப் படையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை, பலுசிஸ்தான் புரட்சிபடையினர் சுட்டுக் காயப்படுத்தினர்.

ஆகஸ்டு 2006-ல் புரட்சிப்படைத் தலைவர் நவாப் அக்பர் கானை
பிடிக்க வந்த, இராணுவ வீரர்களில் 60 பேர் மற்றும் 7 இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பின் கட்டளையால் பலுசிஸ்தான் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது. குண்டு வீச்சில் பலுசிஸ்தான் விடுதலைப் படைத் தலைவர் நவாப் அக்பர் கான் கொல்லப்பட்டார்.

3 ஏப்ரல் 2009-ல் பலூசிஸ்தான் தேசிய இயக்கத் தலைவர் குலாம் முகமது பலூச் மற்றும் அதன் இரண்டு துணைத் தலைவர்கள்,
கை விலங்கிட்டு, கண்களை துணியால் மூடி சரக்கு வாகானத்தில் அடையாளம் தெரியாதவர்களால் தூக்கிச் செல்லப்பட்டனர்.

ஐந்து நாள் கழித்து 8 ஏப்ரல் 2009ல் கடைவீதியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த மூவரின் உயிரற்ற சடலங்கள் கடைவீதியில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பலுசிஸ்தான் மாகாணம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

12 ஆகஸ்டு 2009-ல் பலுசிஸ்தானின் முன்னாள் கலாத் சமஸ்தானத்தின் மன்னர் மீர் சுலைமான் தாவூது கான் தன்னை பலுசிஸ்தான் நாட்டின் மன்னராக அறிவித்துக் கொண்டதுடன், ஒரு அமைச்சரவையையும் நியமித்துக் கொண்டார்.

பலுசிஸ்தானில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் 37% மக்கள் தனி பலுசிஸ்தான் நாடு கோரிக்கைக்கு வாக்களித்தனர்…..

இத்தனைக்கும் அப்பாலும், பலோசிஸ்தானில் சுதந்திரத்தை விரும்பும்
மக்கள், பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிரிந்திருப்பதாலும்,
அவர்களை ஒருங்கிணைத்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக
போராடும் அளவுக்கு, சக்திவாய்ந்த தலைவர் யாரும் அங்கே
உருவாகாததாலும், பலோசிஸ்தான் இன்னமும் வேறு வழியின்றி,
பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு மாகாணமாகவே இருக்கிறது.

………………….

இன்றைய நிலையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே
ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான மோதல் சூழலில் –

பலோசிஸ்தான் போராட்ட அமைப்புகள், இந்தியா தங்கள் சுதந்திரப்போராட்ட குழுக்களை ஒன்று படுத்தி, பாகிஸ்தான் ஆட்சிக்கு எதிராக போரிட்டு, சுதந்திர பலோசிஸ்தான் உருவாக உதவ வேண்டும்
என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்…….

இந்த நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு பலோசிஸ்தான் மக்களின் தற்போதைய பிரச்சினைகளை விளக்கி,
இந்தியா பலூச் மக்களுக்கு உதவ வேண்டும் என்று
கோரிக்கை வைக்கிறார் – டாக்டர் அம்ஜத் அயூப் மிர்ஜா ….

அவரது விளக்கமான பேட்டி, தற்போதைய நிலைமையை
தெளிவாக விளக்கும்…. பேட்டி காணொளி – கீழே ….

………………………………..

Balochistan’s Time Is Now, Human Rights Activist Dr. Amzad Ayub Mirza On Why Pak Will Disintegrate

இந்த வீடியோவை பார்த்த பிறகு – சுதந்திர பலோசிஸ்தான் – உடனடியாக இல்லா விட்டாலும்,

நிச்சயமாக, கூடிய விரைவில் உருவாகி விடும் என்றே எனக்குத் தோன்றுகிறது….!!!

உங்களுக்கு … ????

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உதயமாகுமா சுதந்திர பலோசிஸ்தான் ….??? ( இந்தியாவின் உதவியோடு … !!! )

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:
  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //இந்தியா தங்கள் சுதந்திரப்போராட்ட குழுக்களை ஒன்று படுத்தி, பாகிஸ்தான் ஆட்சிக்கு எதிராக போரிட்டு, சுதந்திர பலோசிஸ்தான் உருவாக உதவ வேண்டும்//

    இந்தியா இந்த வேலைகளைச் செய்யாது. (நிச்சயமாக). இந்தியா எதற்காக ஆதரிக்கவேண்டும்? ஆதரித்தால், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து பண உதவி இராணுவ உதவி செய்ததற்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அதனால் இந்தியா இந்த விஷயத்தில் தலையிடாது, நம் மக்கள் யாரும் பலூசிஸ்தானில் இல்லை, தமிழர்கள் இலங்கையில் இருந்ததைப் போல.

    பலூசிஸ்தான் நிச்சயமாக உருவாகும். அதற்கு நல்ல தலைமை அங்கு உருவாக வேண்டும். பாகிஸ்தான் துரைமுருகன்கள் அந்தக் கனிமவளத்தினால் மிகுந்த லாபமும் கொள்ளையும் அடிக்கிறார்கள்.

    பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று பலூசிஸ்தான் அறிவித்தால், ஒருவேளை அமெரிக்கா தலையிட வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவுக்கு இந்தப் பிராந்தியத்தில் நல்ல ஒரு இடம் (space) தேவை. அப்போதுதான் எதிர்காலப் போர்களின்போது தன் படையைக் கொண்டுவந்து நிறுத்த இயலும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.