………………………………………………………….

……………………………………………………………..
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் இன்னொரு
அபூர்வமான காஸ்ட்யூம் படம் ….
……………………….

……………………….
சிவப்பு அங்கி, கருப்புத் தொப்பி சகிதமான உடையுடன்
இருந்த எம்.ஜி.ஆர்…. சிறப்பு டாக்டர் பட்டம் பெற்றது
1983 ஆம் ஆண்டில்.
பட்டம் கொடுத்தது சென்னைப் பல்கலைக்கழகம்.
வழங்கப்பட்ட நாள் செப்டம்பர் 17 ஆம் தேதி, 1983 ஆம் வருடம்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக இருந்த துரைமுருகனுக்கு –
கடைசி நேரத்தில் தான் (முந்தைய இரவு) எம்.ஜி.ஆருக்கு டாக்டர்
பட்டம் வழங்கப்படுவது தெரியுமாம்.
தெரிய வந்ததும், துரைமுருகன், தனது தலைவர் கலைஞரை இரவில் தொலைபேசியில் அழைத்து இந்த செய்தியைச் சொன்னபோது,
கலைஞர் சொன்னாராம் –
“எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதை எதிர்க்காதே.
அதிலும் தமிழக முதல்வருக்குத் தரப்படும்போது அதை எதிர்க்க
வேண்டாம்.
அது மட்டுமில்லாமல் நீ அவரால் வளர்க்கப்பட்டவன்.
எனவே, நீ அதனை எதிர்த்துப் பேசக்கூடாது”(துரைமுருகனை சட்டக்கல்லூரியில் சேர்த்து, சட்டம் படிக்க பண உதவிகள் உட்பட அனைத்து உதவிகளையும் செய்தவர் எம்.ஜி.ஆர்.)
குடியரசுத் தலைவர் ஜெயில்சிங், ஆளுநர் குரானா போன்றவர்கள்
கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் – டாக்டர் பட்டமளிப்பு
கௌனை அணிந்து கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். சொன்னது –
“தம்பி துரைமுருகன் செனட்டில் இருக்கும்போது, எனக்கு
டாக்டர் பட்டம் கிடைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி”.
( நன்றி: ஜூனியர் விகடன் – 1983 அக்டோபர் இதழ் )
…………………………………………………………………………………………………………………………..……………



நிஜமான சாமியாரா இல்லை ….