🔴Thailand மாதிரி மிகப்பெரிய நிலநடுக்கம் வரும்😱India-க்கு எச்சரிக்கை – 😮Astro Shelvi |Tamil Newyear 2025 –
……………………………………………..

………………………………………………..
…………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………………………………
……………………………………………..

………………………………………………..
…………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………………………………
தாய்லாந்து மாதிரி…என்பதை மாத்திரம் படிக்க ஆரம்பித்துவிட்டு, இந்த காவிரி மைந்தன் சாருக்கு என்ன ஆச்சு? ஷெல்வி சொல்றதையெல்லாம் ஜோசியம்னு போட்டுக்கிட்டிருக்காரே என்று தோன்றியது. நல்லவேளை டுபாக்கூர் என்று தலைப்பிலேயே போட்டிருக்கீங்க.
எப்போதுமே லிஸ்ட் போட்டு வசூல் செய்பவர்களுக்கு (காதுகுத்துக்கு நல்ல நேரம் பார்த்துக்கொடுக்க 500 ரூ, பொருத்தம் பார்க்க 600 ரூ… என்று) ஜோசியம் கைவராது. இவர்களெல்லாம் ஜோசிய வியாபாரிகள்.
ஒரு இருபத்தைந்து விஷயங்கள் சொன்னா அதில் சிலது யாருக்குமே பலிக்கும். நானும் ஒரு தேர்தல் ஜோசியம் சொல்றேனே ஷெல்வி மாதிரி. எனக்கும் ஒரு பதிவு ஒதுக்குங்களேன்… இதோ சாம்பிள்.
இந்தத் தடவை 2026 தேர்தல் போல நீங்க பார்க்கவே முடியாது. மிகக் கடுமையான போட்டி இருக்கும். அதுவும் தவிர, மிகக் கடுமையாக வார்த்தை மோதல்கள் இருக்கும். நீங்க எதிர்பார்க்காதவங்கள்லாம் தோல்வியைச் சந்திப்பாங்க. எதிர்பார்க்கிறவங்கள்ல சிலர், தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெற்றி பெறுவார்கள். அதில் ஓரிரண்டு பேர், பணம் கொடுத்து வென்றார்கள், ஏமாற்று வாக்குறுதிகள் சொன்னார்கள் என்ற பெயர் வரும். தேர்தல் கமிஷன் இந்தத் தடவை மிகவும் கவனமாக இருப்பார்கள். அவர்கள் கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது சில இடங்களில் நடக்கும். தேர்தல் ஆண்டில், நம்புவது போல பல டுபாக்கூர் கருத்துக்கணிப்புகள் வந்து வாக்காளர்களைக் குழப்பமடையச் செய்யும். இருந்தாலும் நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வாக்குகளின் அடிப்படையில் மக்களுக்கு மனதுக்கு உரித்தான ஒரு கட்சி வெல்லும். இதற்குக் காரணம் கும்பமும் மீனமும்தான் (ஆமாம் அவை என்ன? சும்மா சனி, கும்பம், இந்த ராசி என்றெல்லாம் எழுதினால்தான் ஜோசியம் சொல்ற மாதிரியே ஒரு ஃபீலிங் வரும்)