ஜனநாயகன் …..!!!

……………………………………….

…………………………………………

………………………………………….

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும்.

ஆனால், போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக எம்.எல்.சி.யாக பொறுப்பேற்றுக் கொள்ளலாம் எனப் பலரும் கூறிய நிலையில், அதை ஏற்றுக்கொள்ள காமராஜர், “மக்களிடம் வாக்குகளைப் பெற்றே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும்” என்றார்.

அப்படிப்பட்ட சூழலில், “என் தொகுதியில் போட்டியிடுங்கள், நான் பதவி விலகுகிறேன்” எனக் கூறினார் அருணாச்சலம்.

இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் அவருக்கு தொடர்பே இல்லாத குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோதண்டராமன் போட்டியிடுகிறார்.

கடுமையான பிரச்சாரம் நடக்கிறது. அப்போது ஒரு இடத்தில்
‘மேம்பாலம்’ கட்டித் தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை
வைத்தனர். காமராஜர் முதல்வர் பதவியில் இருக்கிறார்.
சரி என்று கூறியிருந்தால் மொத்த வாக்காளர்களும்
வாக்களித்திருப்பார்கள்.

ஆனால் காமராஜர் அப்படி செய்யவில்லை. அப்படியெல்லாம்
செய்ய முடியாது என்று மறுத்துவிட்டு வருகிறார்.

அப்போது, உடனிருந்தவர்கள் “ஐயா… கோரிக்கையை
நிறைவேற்றுகிறேன் என்று ஒரு வார்த்தை கூறியிருக்கக் கூடாதா. கோரிக்கை நியாயமானதும்கூட. எல்லோரும் வாக்களித்திருப்பார்களே” என்று கூறினார்கள்…..

அதற்குக் காமராஜர் சொன்னார், “அது தப்பு. மக்கள் வைத்த
கோரிக்கை நியாயமானதுதான். அதைத் தேர்தலுக்குப் பிறகு செய்து கொடுத்துட வேண்டியதுதான்.

ஆனால், அதைச் சொல்லி வாக்கு கேட்கக் கூடாது. நான் அப்படிக் கேட்டால் எதிர்க்கட்சி வேட்பாளர் கோதண்டம் என்ன சொல்லி வாக்கு கேட்பார். .??

அவரிடம் அதிகாரமில்லையே. நான் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகத் தானே அமையும். இது எப்படி ஜனநாயகமாகும்?”
என்று கூறி மறுத்து விட்டார்.

இப்படி நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக வாழ்ந்து
காட்டியவர் காமராஜர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை,
நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராகவும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராகவும் விளங்கினார்….

இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல வளர்ச்சிகளுக்கும்
பிள்ளையார் சுழி போட்டவர் காமராஜர்தான்….

நிஜமாகவே மீண்டும் காமராஜரின் ஆட்சி
என்றாவது வருமா …. ???

நிஜ ஜனநாயகம் வருமா …???

……………………………………………………………………………………………………………………………………………………………………..……….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.