………………………………………………………………………………………….

………………………………………………………………………………………………
எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் – ஆழ்ந்த ஞானமும்,
மிகச்சிறந்த பேச்சாற்றலும் உடையவர்கள் தமிழகத்தில்
மிகச்சிலரே…
அதிலும் ஒருசிலரே, கேட்பவர்களுக்கு மிக எளிதாகப் புரியும்
வண்ணம் பேசவேண்டும் என்பதிலும் –
ஆன்மிக விஷயங்களைப்பற்றி பேசும்போது
ஒரு ஒரு வார்த்தை கூட பயனற்றதாக இருக்கக்கூடாது
என்பதை உறுதி செய்துகொண்டு பேசுவதிலும் கவனமாக
இருப்பார்கள்.
இந்த வகையில், சுகி சிவம் அவர்களை அறியாதவர்கள் யார்…?
இருந்தாலும் கூட, தமிழகத்தில், ஒரு தரப்பினருக்கு அண்மைக்
காலங்களில் சிவத்தைப் பிடிக்கவில்லை;
அவரை ஏளனப்படுத்துவதிலும், பகிஷ்கரிப்பதிலும் ஒரு தரப்பினர்
தீவிரமாக இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தினுள் – இங்கே நான் போக விரும்பவில்லை.
ஆனாலும் கூட, மிக அற்புதமான இந்த உரையை
கேட்கத்தவறுபவர்கள், பல நல்ல விஷயங்களை உணறும் வாய்ப்பை
இழக்கிறார்கள் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
இந்த காணொளியை சில நாட்களுக்கு முன்பே நான் பார்த்து
சேமித்து வைத்திருந்தேன்…. ஒரு விடுமுறை நாளில் பதிவிட்டால் தான்,
முழுவதுமாக கவனிக்க வாசக நண்பர்களுக்கு நேரமும், வாய்ப்பும்
இருக்குமென்று நினைத்து – இன்று பதிவிடுகிறேன்….
………………………………………………………………………………………………..
…………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….