அராத்து’வின் – ” ஒரு மொழிக் கொள்கை …”

……………………………………….

………………………………………….

மும்மொழி – ஒரு மொழிக் கொள்கை.

மும்மொழிக் கொள்கைக்கு சம்மந்தமில்லாத ஒரு விஷயம். கரோனாவுக்கு சற்று முன்புவரை கூட பொறியியல் கல்லூரிகளிலும் தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் இங்கிலீஷில்தான் வகுப்பெடுத்து வந்தார்கள்.

மாணவர்கள் தமிழ் மீடியம் படித்து இருந்தாலும், லெக்சரர்கள் மற்றும் faculties தத்துக்கா புத்துக்கா இங்கிலீஷ் என்றாலும் இங்கிலீஷில்தான் வகுப்பெடுத்து வந்தார்கள். கூடுமான வரை இங்கிலீஷில்தான் பேசுவார்கள்.

அப்படியாவது பேசிப் பழகியவர்கள் தான் இன்று அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மென்பொருள் துறையில் பெரிய இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

சமீபமாக ஒரு தேவையில்லாத மாற்றத்தைப் பார்த்து வருகிறேன். பொறியியல் கல்லூரிகளிலும், தனியார் மென்பொருள் பயிற்சி நிறுவனங்களிலும், தமிழில் வகுப்பெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஜாவா – தமிழில் பயிற்சி. பைத்தான் – தமிழில் வகுப்புகள், சாஃப்ட்வேர் டெஸ்டிங் – classes in tamil என விளம்பரங்கள் வருகின்றன. தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு என வகுப்புகள் சாஃப்ட்வேர் டிரெயினிங்க் இன்ஸ்டிடியூட்கள் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கேட்டால், தாய்மொழியில் பயின்றால், நன்கு புரியும் என்பார்கள். ஓவராகப் போய், கருப்புப் பெட்டி சோதனை , வெள்ளைப் பெட்டி சோதனை என கழுத்தறுப்பார்களா எனத் தெரியவில்லை.

இங்கிலீஷ் பேச வராதவர்கள், இங்கிலீஷில் நடத்தினால் புரிந்துகொள்ள முடியாத மாணவர்கள் , இங்கிலீஷ் பேச வராது என தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் இத்தகைய வகுப்புகளில் சேர்கிறார்கள்.

சரி , ஒரு வாதத்துக்காக தாய்மொழியில் படித்தால்தான் புரியும் என்றே வைத்துக்கொள்வோம். புரிந்து கொண்டு, அறிந்ததை, தெரிந்ததை யாரிடம் நிரூபித்து வேலை வாங்கப்போகிறார்கள். நேர்முகத் தேர்வு தமிழில் நடக்கப் போகிறதா?

இது என்ன இதயம் முரளி போல ஒருதலைக் காதலா? கற்ற சாஃப்ட்வேர் ஸ்கில்லை மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு மருகுவதற்கு?

அப்படியே தமிழ் ஆர்வம் புடிங்கிக்கொண்டு அடிக்கும், ஒரு மேலாளர் வேலை தருகிறார் என்றே வைத்துக்கொள்வோம், எதிர்காலத்தில் எப்படி தங்கள் டீம் மெம்பர், க்ளையண்டுடன் பேசி வேலை செய்யப்போகிறார்கள்.

தமிழார்வம் , தாய்மொழிப் பாசம் எல்லாம் தேவைதான். அதை நம் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பேசும்போதும், கலை , இலக்கிய வாசிப்பின் போதும் வெளிப்படுத்திக்கொள்ளலாம்.

கரியர் , டெக்னாலஜி , வேலை என்றெல்லாம் வரும்போது 100 % இங்கிலீஷ்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது என்ன தத்துவ வகுப்பா? இங்கிலீஷில் எடுத்தால் புரியாமல் போவதற்கு? முதலில் சிறிது கடினமாக இருந்தாலும் , பிடிவாதமாக இங்கிலீஷில்தான் கற்க வேண்டும். சரியோ தவறோ , இங்கிலீஷில் பேசிப் பழக வேண்டும்.

இந்தியை தமிழ்நாட்டில் எப்படி எதிர்க்கிறோமோ அதை விட அதிகமாக இங்கிலீஷ் படிப்பது, பேசுவது , எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும். குறைந்த பட்சம், பொறியியல் , டெக்னாலஜி சம்மந்தபப்ட்ட படிப்பு படிக்கும் மாணவர்களிடையேவாவது. இல்லையெனில் படித்தும் பயனில்லாமல் ஸ்விக்கி டெலிவரி பாய் ஆகவேண்டியதுதான்.

இங்கிலீஷ் நன்றாகப் பேசும் சில தமிழர்களைப் பார்த்து நாம் பெருமைப் பட்டுக்கொள்கிறோம். ஆனால் இஞ்சினியரிங் முடித்தும், இங்கிலீஷில் சுத்தமாகப் பேச வராத , புரிந்துகொள்ள முடியாத பெருங்கூட்டத்தைப் பற்றி நாமும் அரசும் கவலைப்படுவதில்லை. இப்படிப்பட்ட பெருங்கூட்டம் உருவாகி இருப்பதால்தான் ஜஸ்ட் வியாபாரம் செய்ய தாய்மொழியில் சாஃப்வேர் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்கள் கடை விரித்துள்ளன.

நானெல்லாம் கற்றுக்கொண்ட இக்குனூண்டு இங்கிலேஷே பொறியியல் பாடப் புத்தகங்களைப் படித்துதான். இங்கிலீஷ் கற்றுக்கொள்ள சிறந்த வழி பொறியியல் அல்லது டெக்னாலஜி சம்மந்தபப்ட்ட பாட புத்தகங்கள்தான். ஏனென்றால் அதில் அதிகம் டெக்னாலஜி, கணக்கு , சூத்திரங்கள் தான் இருக்கும். காம்ப்ளெக்ஸான வாக்கிய அமைப்புகள், கொடூரமான , தெரியதா அர்த்தங்கள் கொண்ட இங்கிலீஷ் வார்த்தைகள் இருக்காது. அது அல்லாமல் டெக்னாலஜி சம்மந்தப்பட்ட கட்டுரைகள் வாசிக்கலாம்.

அப்படியும் ஆர்வம் வரவில்லை என்றால் இங்கிலீஷ் போர்னோகிராஃபி புத்தகமாகவது வாசிக்கலாம். ஆர்வமும் குறையாது, இங்கிலீஷும் வருவதே தெரியாமல் நன்கு வரும்.

இந்த விஷயத்தில் ஸ்டிரிக்டாக ஒரு மொழிக் கொள்கைதான், அது இங்கிலீஷ்.

……………………………………………………………………

இதில் என் கருத்து என்னவென்றால், தமிழ் பயிற்றுமொழியில் 12-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, அடுத்து எஞ்சினீரிங் மற்றும் மெடிக்கல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் – அங்கே அனைத்துமே ஆங்கிலத்தில் தான் என்றால் – முதலில் கொஞ்சம் மிரண்டு தான் போகிறார்கள்…..

அவர்களின் அச்சத்தைப் போக்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வர
ஒரு சுலபமான வழி இருக்கிறது.

முதல் ஆண்டு கல்லூரிப் படிப்பில், பயிற்சி மொழியாக –
தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே கலந்து பயன்படுத்தலாம்.


2-ஆம் ஆண்டிலிருந்து முற்றிலுமாக பயிற்சி மொழி ஆங்கிலத்தில் என்று
வைத்துக் கொள்ளலாம். இது அவர்களின் மிரட்சியையும் போக்கி,
அவர்களை ஆங்கிலத்திற்கும் பழக்கி விடும்….

………………………………………………………………………………………………………………………………………………………………….….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அராத்து’வின் – ” ஒரு மொழிக் கொள்கை …”

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஆங்கிலம்தான் நமக்குத் தேவையான மொழி. நிச்சயம் தமிழல்ல என்பது என் அபிப்ராயம். தமிழ் கலாச்சாரம் என்பதெல்லாம் ஓகே.

    8ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் போதும். அதன் பிறகு எல்லா சப்ஜெக்டுமே ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். மொழிப்பாடமாக தமிழ் ஆங்கிலம் இருந்தாலும் அது ரேங்குக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது.

    உடனே, தாய்மொழியில் படித்த ஜப்பான், கொரியா என்று ஜல்லியடிக்கக்கூடாது. அவங்க நம்மை மாதிரி வெளிநாட்டில் வேலை, குடியுரிமை தேடிப் போவது அனேகமாக இல்லை.

    ஒருவேளை நம் வாழ்க்கை எதிர்காலத்தில் மும்பையில்தான் என்றால் நாமே மராத்தி பேசக் கற்றுக்கொள்வோம். அதுபோலவே ஹிந்தியும். மற்றபடி, தமிழுக்காகப் போராடும் பயலுவளுக்கு சொந்தமா தமிழ்ல எழுதவோ பேசவோ தெரியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இவனுவள்லாம் கி.வீரமணி, சுப வி மாதிரி. ஊரான் பெண்டாட்டிக்கு தாலி, ஐயர் இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு தன் மனைவிக்கு, மகனுக்கு அவையெல்லாம் செய்வது.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அதுவும் தவிர, மூன்றாம் மொழியெல்லாம் நிஜமாகவே தேவையில்லை. நமக்குத் தேவை, வாழ்க்கைக்குத் தேவையான மொழிகளைப் பேச எழுதக் கற்றுக்கொள்வது. உதாரணமா, உபில இருக்கற மாணவன், தமிழ்ல எழுத பேசக் கற்றுக்கொண்டால், ஒருவேளை இங்கு வேலை தேடிவந்தால் உபயோகம். அவனுக்கு சிலப்பதிகாரம் மணிமேகலை தெரிந்து என்ன உபயோகம்? அதுபோல நமக்கும் இந்தி இலக்கியங்களினால் என்ன உபயோகம்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.