கப்படோசியா, துருக்கி ….

………………………………

…………………………….

……………………………….

…………………………………

துருக்கி – எப்போதுமே டூரிஸ்டுகளுக்கு பிடித்தமான ஒரு இடம்.


அண்மையில், துருக்கியில் – கப்படோசியா – என்கிற
சுற்றுலாத்தலம் பற்றிய விவரங்களை படித்தேன் / பார்த்தேன்.

கப்படோசியா மத்திய துருக்கியின் மையப்பகுதியில் இருக்கிறது.
1000 மீட்டர் உயரத்தில் எரிமலை சிகரங்களையும் தன்னிடத்தே
கொண்டிருக்கும் ஒரு இடம்.

தனித்துவமான புவியியல், வரலாற்று மற்றும் கலாச்சார அம்சங்களைக் கொண்ட பல பகுதிகளைக் கொண்டிருப்பதால் இது ஒரு பிரபலமான
சுற்றுலாத் தலமாக மக்களை ஈர்க்கிறது…..

இந்தப் பகுதியின் வரலாற்றில், கப்படோசியா தனது பழமை காரணமாக
ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

கப்படோசியா என்ற பெயரின் முதல் பதிவு கிமு 6 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே துவங்குகிறது …. பாரசீக சாம்ராச்சியத்தின்
அகாமனிய மன்னர்களான முதலாம் டேரியஸ் மற்றும் செர்க்செசு ஆகியோரின் முத்தரப்பு கல்வெட்டுகளில் “கட்டபுகா” என்று
இதன் பெயர் வெட்டப்பட்டுள்ளது….

பழமை வாய்ந்த இந்த சுற்றுலாத்தலத்தை நண்பர்கள்
காண வேண்டாமா…? அதன் சுவாரஸ்யமானதொரு
காணொளி கீழே –

………………………………………………………………………………………………………………….

…………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.