………………………………….

…………………………………….
பிபிசி தமிழில், ஒரு கட்டுரை படித்தேன்…
பிபிசி செய்திகள், பிரேசில்-லிருந்து ” எடிசன் வீகா ” என்பவர்
எழுதியது…. தமாஷாக இருந்தது…. நண்பர்களும் ரசிப்பதற்காக
கீழே தந்திருக்கிறேன்-
“முதல் பாவி”, “சர்வாதிகார கடவுள்…” விசித்திரமான வர்ணனைகள்…!!!
கிறிஸ்தவர்களிடையே கூட, எவ்வளவு பேர் இந்த விஷயங்களை
எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்வார்கள் … ???
…………….
உலகின் முதல் பாவியாகவும் கீழ்ப்படியாமையின் உருவகமாகவும் பார்க்கப்படுபவர், ஏவாள். அவர், பாம்பினால் தூண்டப்பட்டு, தடை செய்யப்பட்ட பழத்தைச் சாப்பிடத் தேர்வு செய்தவர். அதுமட்டுமின்றி ஆதாமுக்கும் அதையே அவர் வழங்கினார்.
அந்தச் செயலால் அவர்கள் குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்டனர்.
பின்னர் அதுவே ஏதேன் தோட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.
இதுவே, கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் தொடக்க நூலிலும் யூதர்களின் புனித நூலான தோராவில் உள்ள பெரேஷித் நூலிலும் உள்ள மையப் புள்ளி.
யூத-கிறிஸ்தவ கலாசாரங்களுக்கான அடிப்படைக் கதையை நாம் கருத்தில் கொண்டு, ஆயிரக்கணக்கான ஆண்டு கால ஆணாதிக்கத்தை அதில் இணைத்தால், ஏவாள் பாவத்தின் உருவகமாகிறார்.
ஆணின் வீழ்ச்சிக்கும், தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தின் முடிவுக்கும், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்து கொண்டதற்கும் காரண
மானானவராகக் கருதப்படுகிறார் ஏவாள்.
ஏவாளின் கதாபாத்திரம் மற்றும் அவரது செயல்கள் குறித்தான
நுணுக்கமான புரிதலைத் தெளிவுபடுத்துவதற்காக, பல சமகால
ஆய்வுகள் உலகின் உருவாக்கம் பற்றிச் சொல்லப்படும் கதைகளை மறுவிளக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
முன்னதாக, 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கன்னியாஸ்திரி ஜோனா சௌத்காட் (1750-1814) என்பவர் ஏவாள் உலக மீட்பில் கொண்டுள்ள
பங்கைக் குறிப்பிட்டார்.
இந்தக் கதைக்கு அவர் அளித்துள்ள மறுவிளக்கத்தில், “ஏவாள் மனித குலத்திற்கு அறிவைக் கொண்டு வந்தார். அதனால் சொர்க்கமாகக் கருதப்படும் ஏதேன் தோட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதேபோன்று, இப்போது சாத்தானை தோற்கடித்து மனித குலத்தை விடுவிக்கும் பொறுப்பைக் கொண்டவராகவும் ஏவாள் பார்க்கப்படுகிறார்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது விளக்கத்தில், சாத்தானைக் குறிக்கும் பாம்புதான் எல்லா
தீமைகளின் உண்மையான தோற்றம். மாறாக ஏவாள் அல்ல என்றும் கன்னியாஸ்திரி ஜோனா கூறுகிறார்.
கடந்த 1869ஆம் ஆண்டில், முக்கிய பிரிட்டிஷ் ஆர்வலரும்
சிந்தனையாளருமான ஹாரியட் லா, ஏதேன் தோட்டத்தில் ஏவாளின் கதாபாத்திரத்தை மறுஆய்வு செய்வதைச் சுற்றியுள்ள சர்ச்சையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.
அடக்குமுறையைக் கையாளும் –
ஆணாதிக்க அமைப்புகளுக்கு எதிரான –
பெண்ணிய செயல்பாட்டின் அடையாளமாக ஏவாளை ஹாரியட் லா வகைப்படுத்தினார்.
மேலும் “சொர்க்கமாகக் கருதப்பட்ட ஏதேன் தோட்டத்தில் இருந்து
வெளியே அனுப்பப்பட்டதற்காக” ஏவாளை ‘சபிப்பதற்கு’ பதிலாக
அவருக்கு ‘மரியாதை’ செலுத்த வேண்டும்.
ஏனென்றால் அவர் ஒரு “சர்வாதிகார” கடவுளின் விருப்பத்திற்கு
எதிராக உலகுக்கு அறிவைக் கொண்டு வந்தார்’ என ஹாரியட் லா குறிப்பிடுகிறார்.
அந்த நேரத்தில் பெண்களுக்கு எதிராக நிலவிய மரியாதையற்ற
சூழலுக்கு எதிராகப் போராடி – –
வரலாற்றில் முதல் பெண்ணியவாதியாக –
ஏவாள் நிலைபெற்றார். இதனால் உலகெங்கிலும் உள்ள
பல பெண்களால் ஏவாள் எனும் விவிலிய கதாபாத்திரம்
மதிக்கப்படுகிறது.
பல பெண்ணிய இறையியலாளர்கள், புனித நூல்களின் மொழிபெயர்ப்பாளர்கள், சமகால கல்வியாளர்கள் முதல் பெண்ணான ஏவாளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் வேண்டும்
என்று வாதிடுகின்றனர்.
“இன்று, ஏவாள் ஒரு புதிய வழியில் பார்க்கப்படுகிறார்.
“ஆணாதிக்க கடவுளை” ” எதிர்த்த ” ஒருவராகப் பார்க்கப்படுவதாக
மட்டுமல்ல, மாறாக உயிர்களின் தாயாகவும் தற்போது பார்க்கப்படுகிறார்” என்று ரியோ டி ஜெனிரோவின் பொன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் (PUC) பேராசிரியர் மரியா கிளாரா பிங்கெமர் விளக்குகிறார்.
“அனைத்து வகையான உயிர்களும் உருவாகக் காரணமாகவுள்ள பூமியைப் போன்றவர்” என்றும் அவர் ஏவாளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அகஸ்தீனிய கன்னியாஸ்திரி மற்றும் பெண்ணிய தத்துவவாதியான ஐவோன் கெபரா, “நாம் எங்கிருந்து வந்தோம்’, ‘நம்மை உருவாக்கியது யார்’ என்பதை விளக்குவதற்கு, தொடக்க நூலில் கூறப்படும் கதை உள்பட, பழங்காலத்தில் ‘வெளிவந்த அனைத்து அறிக்கைகளும் புராணங்களாகக் கருதப்படலாம்” என்று சுட்டிக்காட்டுகிறார்.
“மனிதன் உருவான விதத்தைக் கூறும் இந்தக் கதைகளில், ஏவாளை பலவீனமாகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவராகவும் கருதுவதில்
இருந்து, தடை செய்யப்பட்ட பழத்தை எடுத்துக்கொள்வதன் மூலம்,
தெய்வீக கட்டளைகளுக்கு எதிரான மீறல் சக்தியாக மாறுவதற்கு ஏவாள்
ஆசைப்படுவது வரை,” ஏவாள் குறித்த விளக்கங்கள் வெவ்வேறாக உள்ளன என்றும் அவர் கருதுகிறார்.
“ஏவாள் மற்றும் பிற பெண் கதாபாத்திரங்களின் உண்மையான இயல்பை வெளிப்படுத்துவது இலக்கியத்திற்கும், குறிப்பாக விவிலிய இறையியலுக்கும் பெரும் பங்களிப்பாக இருக்கும்” என்று இத்தாலியின் ரோமில் உள்ள பொன்டிஃபிகல் அர்பானியானா பல்கலைக்கழகத்தின் இறையியலாளர், தத்துவவாதி மற்றும் பேராசிரியரான ஸ்காலப்ரினிய கன்னியாஸ்திரி எலிசாங்கேலா சாவ்ஸ் டயஸ் கூறுகிறார்.
சமூகவியலாளரும் மானுடவியலாளருமான ஃபேபியோலா ரோடன்,
ரியோ டி ஜெனிரோவின் பெடரல் பல்கலைக்கழகத்தில் 1995ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட “புனிதத்தின் பெண்ணியம்” என்ற தனது முதுகலை ஆய்வறிக்கையில்,
இயேசுவின் தாயான மேரியை போலவே,
பெண்ணிய இறையியலுக்கு ஏவாளும் முக்கியமானவர் –
என்று வாதிட்டார்.
“அனைத்து பெண்களின் மீதும் சுமத்தப்படும் உண்மையான பாவத்திற்கு’ ஏவாள் பொறுப்பாளியாகக் கருதப்படுவதாலேயே இந்த முக்கியத்துவம் உள்ளது என்பதை ரோடன் எடுத்துக்காட்டுகிறார்.
…………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….