…………………………….

……………………………..
“நீதிபதிகளையும் தீர்ப்புகளையும் தாராளமாக விமர்சியுங்கள்…’’
- நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், அதிரடி அழைப்பு!
அதிரடியாக இவர் பாட்டிற்கு சொல்லிவிட்டு போய் விடுவார்.
ஆனால், நாம் விமரிசித்து விட்டு, பிற்பாடு, நம் மீது நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு என்று வந்தால், இவர் துணைக்கு வருவாரா …???
- இருந்தாலும், இப்படியும் ஒரு நீதிபதி சொல்கிறாரே என்று
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது….!!!
கீழே ஒரு பத்திரிகைச் செய்தி –
………………………
“நீதிபதிகளையும் தீர்ப்புகளையும் தாராளமாக விமர்சியுங்கள்…’’
பொதுவாக, ஒரு நீதிபதி, ஒரு தீர்ப்பைக் கொடுத்துவிட்டால்... அதைப் பற்றி யாரும் வாயையே திறக்கக் கூடாது' என்பதுதான் பொதுப்புத்தியாக இருக்கிறது. ஆனால்,தாராளமாக தீர்ப்பை விமர்சிக்கலாம்… அதுமட்டுமல்ல, எங்களையும் விமர்சிக்கலாம்’ என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார்… பரபரப்பாக கருத்துகளை வெளியிடுவதன் மூலம் தமிழக நீதித்துறையில் கவனிக்கப்படும் நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் ஜி.ஆர். சுவாமிநாதன்.
திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கும் கலையரங்கத்தில்
தமிழ் நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுவின் பொன்விழா கருத்தரங்கம் சமீபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாநில அமைச்சர் கே.என்.நேரு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஓய்வு) எஸ்.முரளிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன்னுடைய பேச்சில், “நீதிமன்ற தீர்ப்புகள் விமர்சிக்கப்பட வேண்டும். நீதிபதிகள் செய்யும் வேலை தெய்வப்பணி என
நம் நாட்டில் கருதப்படுகிறது. ஆனால், அதுவும் பிற பணிகளைப் போன்று விமர்சனத்திற்கு உட்பட்ட ஒரு பணிதான். நீதிபதிகளின் செயல்பாட்டை, அவர்கள் வழங்கும் தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு.
இந்தப் போக்கு மாற வேண்டும். கூர்மையாக விமர்சிக்க வேண்டும்.
ஒரு நீதிபதியின் செயல்பாட்டை அவர் அளித்த தீர்ப்புகளின்
எண்ணிக்கையை வைத்து மதிப்பிட இயலாது. ஏனெனில், ஒவ்வொரு வழக்குக்கும் விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைக்கு குறிப்பிட்ட ல அவகாசம் தேவைப்படுகிறது. அதேபோல், சில குற்ற வழக்குகளை விசாரிக்க மிக நீண்ட காலம் தேவைப் படுகிறது.
சில நீதிபதிகள் இரவு வரைகூட நீதிமன்றத்தில் வேலை செய்கின்றனர். ஓரிரு மணி நேரம் மட்டுமே செலவிடும் நீதிபதிகளும் உண்டு. எனவே, அவர்களின் பணி நேரம் கண்காணிக்கப்பட வேண்டும். நீதிபதிகள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதைக் கண்காணிக்க பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்த வேண்டும்” என்று சொன்னவர், அடுத்து சொன்னது செம அதிரடி.
நீதிபதிகளிடமும் வரிமானவரித்துறை சோதனை….!
“பல துறைகளைச் சேர்ந்தவர்களிடம் வருமான வரித்துறை சோதனைகள் நடத்துவது போல் ஐயப்பாடு உள்ள நீதிபதிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும். அதனால், நீதிபதிகள் எவ்வளவு சொத்துகள் வைத்துள்ளார்கள், அந்த சொத்துகளை எத்தகைய வழிகளில் சம்பாதித்தார்கள், வருமானத்துக்கு மீறி சொத்துகள் வாங்கியிருக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும். நீதிபதி பொறுப்புக்கு வரும் பலர், தங்களுக்குரிய கடமைகளைத் தெரிந்துகொள்வதைவிட, தங்களுக்கு என்னென்ன வசதிகள்
அளிக்கப்பட்டிருக் கின்றன எனத் தெரிந்துகொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்’’ என்று பொதுச் சமூகத்தின் மனசாட்சிபோல படபட வெனப் பட்டாசாக அவர் பேசி முடித்தபோது, அரங்கமே ஆச்சர்யத்தில்
அசந்து போனது.
ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஓய்வு) எஸ்.முரளிதர்.
தன்னுடைய சொத்துகளை வெளிப்படையாக வெளியிட்ட முதல் நீதிபதி இவர்தான். அவர் தன்னுடைய பேச்சில், “நவீன தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு வழக்குக்கும் நீதிபதிகள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைக் கண்டறியலாம். அதேபோல், புகார்தாரர் அமர்த்திய வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு வருகிறாரா, வாய்தா கேட்கிறாரா, எவ்வளவு நேரம் வாதாடுகிறார் என்பதையும் கண்டறியலாம்” என்று வழிகாட்டியது, அரங்கிலிருந்தோருக்கு விழிப்பு உணர்வு ஊட்டுவதாக இருந்தது.
விழாவில் பங்கேற்ற வழக்கறிஞர் கரூர், தமிழ் ராஜேந்திரன் நம்மிடம் பேசியபோது, “நான் அட்மினாக உள்ள ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள
ஒருவர் பகிர்ந்த சர்ச்சையான பதிவுக்கு எதிராக, என்மீது வழக்கு
தொடர்ந்தார். அதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டோம்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘வாட்ஸ்அப்
குழுவில் மற்றவர்களால் பகிரப்படும் கருத்துகள், பதிவுகள், வீடியோக்களுக்கு குரூப் அட்மின் பொறுப்பாக முடியாது’ என்று கூறி, அந்த வழக்கை
தள்ளுபடி செய்தார். இப்படி, சீர்தூக்கிப் பார்த்து நீதி வழங்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் பாராட்டுக்குரியவர்” என்று புகழ்ந்தார்.
நிகழ்வை ஏற்பாடு செய்த, தமிழ்நாடு உப யோகிப்பாளர் பாதுகாப்புக் குழு செயலாளர் எஸ்.புஷ்பவனம், “எங்கள் அமைப்பே நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டும் அமைப்பு. அந்த வகையில் பல்வேறு நல்ல விஷயங்களை அரசாங்கத்திடம் இருந்து வென்றெடுத்துள்ளோம். அப்படிப்பட்ட எங்கள் அமைப்பு நடத்திய விழாவில் இரண்டு நீதியரசர்களும் நீதித்துறையைப் பற்றி சுயவிமர்சனம் செய்திருப்பது… எங்களுக்கும், மக்களுக்கும் தெம்பூட்டியிருக்கிறது’’ என்றார் உற்சாகமாக.
உச்சபட்ச அதிகாரம் பெற்ற அமைப்பான நீதித்துறையும், அதிலிருப்பவர்களும் கடமை தவறும்போது கேள்விக்குள்ளாக்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், மீடியா முதல் மக்கள் வரைக்கும் `அதெல்லாம் விமர்சிக்கவே கூடாது’ என்பதே ஆழமாகப் புகுத்தப் பட்டிருக்கிறது. அந்தத் தடைகளை தங்களின் பேச்சு மூலம் தகர்த்திருக்கிறார்கள்… நீதித்துறை யின் பொறுப்பாளர்களான நீதிபதிகள்.
- இருந்தாலும் இது இவர்களது தனிப்பட்ட கருத்து தானே தவிர,
நீதிமன்ற அவமதிப்பு என்று வழக்கு வந்தால் …??? எனவே, ஜாக்கிரதையாகத்தான் செயல்பட வேண்டும்….!!!
……………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….