ஹெச்.ராஜா வாயைக் கிளறினால் என்ன கிட்டும் …..???

………………………………………….

………………………………………….

இன்னும் 57 நாள்களில், மாநிலத் தலைவர் தேர்வுசெய்யப்படுவார்…..! – சொல்கிறார் ஹெச்.ராஜா ……

………………………….

விகடன், பாஜக தலைவர் ஹெச்.ராஜா அவர்களின் வாயைக்கிளறுகிறது…..

என்ன கிடைக்கிறது பார்ப்போமா …???

……………………………….

“ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக என்ன சாதித்தீர்கள்… கட்சி சைலன்ட் மோடில் இருப்பதாக விமர்சனம் கிளம்பியிருக்கிறதே?”

“மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். பெரிய அளவில் உறுப்பினர் களை இணைத்துவருகிறோம். அதனால்தான் ‘ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் இந்தக் காலத்தில் வேண்டாம்’ என முடிவு செய்திருக் கிறோம். மேலும் உட்கட்சித் தேர்தல்கள் நடந்து வருகின்றன. ஜனவரி முதல் வாரத்தில் மாநிலத் தலைவர் தேர்வுசெய்யப்படுவார். அதன் பிறகு மற்ற நடவடிக்கைகள் இருக்கும். இன்னும் 57 நாள்கள்தான்…”

“என்ன சொல்லவருகிறீர்கள்… அண்ணாமலை இனி பா.ஜ.க மாநிலத் தலைவர் இல்லை என்கிறீர்களா?”

“திடீரென ஏன் சீண்டிப் பார்க்கிறீர்கள்… எப்படியாவது ஹெச்.ராஜாவையும் அண்ணாமலையையும் சண்டைபோட வைக்கலாம் என நினைக்கிறீர்களா..?”

“ ‘விரைவில் ஒரு கட்சி காணாமல்போகும்’ என அ.தி.மு.க-வை மறைமுகமாக அண்ணாமலை சீண்டியதற்கு, ‘தி.மு.க-வை வீழ்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்’ என்று தமிழிசை பதிலடி கொடுத்திருக்கிறாரே?”

“நான் 35 ஆண்டுக்காலமாக பா.ஜ.க-வில் இருக்கிறேன். என் அளவுக்கு யாருக்கும் சீனியாரிட்டி இல்லை. ஆனால், ஒரு நாள்கூட கூட்டணி குறித்து நான் ஊடகத்தில் விவாதித்தது கிடையாது. ஏனெனில், அது மத்திய தலைமை முடிவுசெய்ய வேண்டிய விஷயம். அவர்கள் எடுக்கும் முடிவுப்படிதான் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பா.ஜ.க தலைவர்களும் செயல்பட வேண்டும். எனவே, அது குறித்து விவாதிக்கவேண்டியதே இல்லை.”

“அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க உங்கள் கட்சித் தலைவர்கள் விரும்பும் சூழலில், ‘பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை’ என்கிறாரே எடப்பாடி?”

“`எடப்பாடியாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என அப்ளிகேஷன் போட்டுவிட்டு பா.ஜ.க காத்திருக்கிறது’ என என்றைக்காவது நாங்கள் சொன்னோமா… ???

எங்களுக்கு யாருடன் கூட்டணிவைக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறதோ, அதை தேசியத் தலைமையிடம் தெரிவிப்போம். அவர்கள் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம்.”

“ `அமரன்’ படத்தில் காஷ்மீர் மக்களை எதிரிகளாகச் சித்திரிப்பதுடன், ‘ராணுவத்தில் ஜெய் பஜ்ரங் பலி என எப்போது முழக்கமிட்டார்கள்?’ எனக் கேள்வியும் கேட்கிறாரே திருமுருகன் காந்தி?”

“பீகார் ரெஜிமென்ட்டின் கோஷம் என்னவென இந்த திருமுருகன் காந்திக்குத் தெரியுமா… `ஜெய் பஜ்ரங் பலி’தான் பீகார் ரெஜிமென்ட்டின் கோஷம். `வெட்டுடா, குத்துடா…’ என்பது மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கோஷம். அங்கு அந்தக் கோஷம் 75 ஆண்டுகளாக இருக்கிறது. சரி, இதில் திருமுருகன் காந்திக்கு ஏன் எரிகிறது?”

“ ‘பா.ஜ.க பிளவுவாதக் கட்சி, தி.மு.க ஊழல் கட்சி’ என்றெல்லாம் விமர்சித்த த.வெ.க தலைவர் விஜய், அ.தி.மு.க-வை மட்டும் விமர்சனம் செய்யவில்லையே?”

“தி.மு.க-வை `ஊழல் கட்சி’ என அவர் கூறியது நல்ல கருத்து. அவர் அ.தி.மு.க குறித்துப் பேசாததற்கு நான் கவலைப்படவேண்டியதில்லை. எது பிளவுவாதம்… விஜய் முற்றிலும் குழப்பமான மனிதர். சித்தாந்தரீதியாகத் தெளிவில்லாதவர். பிரதமர் மோடி என்றைக்காவது ‘திட்டங்களை இந்துக்களுக்கு மட்டும்தான் கொடுப்பேன்’ என்கிறாரா… பிறகு எப்படிப் பிரிவினை எனச் சொல்வீர்கள்… ஒன்று, விஜய்க்கு விஷயங்கள் பற்றிய அறிவு இல்லை. அப்படி இல்லையென்றால், அவர் ஒரு விஷமி. அதனால்தான் பா.ஜ.க-வைத் திட்டுகிறார்.”

“ஆனால், ‘விஜய்யின் அரசியல் வருகையால், பா.ஜ.க-வுக்கு பாதிப்பு’ என கார்த்தி சிதம்பரம் சொல்கிறாரே?”

“விஜய் வருகையால், நா.த.க கலகலத்துப் போயிருக்கிறது. தி.மு.க-வுக்கும் பெரிய பாதிப்பு வரும். காங்கிரஸுக்குக் கிடைக்கும் மதரீதியிலான வாக்குகளும் சிதறும். ஆனால், பா.ஜ.க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். த.வெ.க எந்தவிதத்திலும் எங்களை பாதிக்காது!”

“பா.ஜ.க கூட்டணிமீது பா.ம.க அதிருப்தியில் இருப்பதால்தானே, ‘பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டித்தான் பா.ஜ.க-வுடன் இருக்கிறோமா, இல்லையா என்பதை முடிவுசெய்வோம்’ எனச் சொல்கிறது?”

“தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் இருக்கின்றன. எனவே, கூட்டணி குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன்!”

“அ.தி.மு.க – த.வெ.க கூட்டணி அமைந்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார்களே?”

“அத்தைக்கு மீசை முளைத்த பிறகு சித்தப்பாவா, பெரியப்பாவா என முடிவுசெய்வோம்.”

“தி.மு.க ஆட்சியில், ‘பிராமணர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனவே, பாதுகாப்பு கோரி கூட்டம் நடத்தத் தேவையில்லை’ என்கிறாரே எஸ்.வி.சேகர்?”

“எஸ்.வி.சேகருக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இன்றும் ‘பார்ப்பான்கள்’ என்று பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள்தானே… மற்றவர்களை இதுபோல் சாதியைச் சொல்லிப் பேச முடியுமா… ஆகவே, தமிழகத்தில் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என அவர்கள் கூட்டம் போட்டால் என்ன தவறு?”

…………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஹெச்.ராஜா வாயைக் கிளறினால் என்ன கிட்டும் …..???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஹெச் ராஜா அவர்கள் ஆர்.எஸ்.எஸ். குரலில் பேசுவார், கொஞ்சம் அதீதமாக எதிர்வினை ஆற்றக்கூடியவர். ஆனால் அவர் எனக்கு வியப்பைத் தந்தது, தமிழக பாஜக தலைவர் சொல்வதற்கு எதிராகவோ இல்லை தலைவருக்கு எதிராகவோ எப்போதுமே கருத்து கூறியது கிடையாது.

    பாஜக வில், மாநிலத் தலைவர் தெரிவு செய்யப்படுவார். அது மீண்டும் அண்ணாமலையாக இருக்கலாமா என்று தெரியவில்லை. இருக்கத்தான் வாய்ப்பு இருக்கிறது (இல்லை..திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால், அதிமுகவுடன் கூட்டணி வருமானால், அண்ணாமலைக்கு மத்தியப் பொறுப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது)

    எனக்கென்னவோ தமிழிசை போன்ற பெருச்சாளிகள் இருக்கும்வரை பாஜக தமிழகத்தில் வளர்வது கஷ்டம். அவர்கள் தங்கள் ஆதாயத்தை மாத்திரமே பார்க்கிறார்கள், அல்லது அண்ணாமலையின் புகழ் வெளிச்சத்தைத் தாங்கமுடியாது இருக்கிறார்கள்.

    எஸ் வி சேகரைப் போன்ற பச்சோந்திகள் அரசியலில் நிறைய இருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் அவர் ஊழல் செய்ததில்லை நல்லவர் என்றாலும், அரசியல் என்று வரும்போது அவர் நம்பிக்கைக்கு உரியவர் இல்லை, தனக்காக தன் நாடகத்தை ரசிப்பவர்கள் வாக்களிப்பார்கள் என்ற போலி நம்பிக்கையில் வாழ்கிறார் அவர்.

    திருமுருகன் காந்தி, உதயகுமார் போன்றவர்கள் கிறித்துவ கைக்கூலிகள். நாட்டின் நலனுக்கு எதிராகவே பேச, நடக்க நினைப்பவர்கள்,நடந்துகொள்பவர்கள். அவர்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.