……………………………………………………….

…………………………………………..
மேலே – கலைஞர் காலத்தில், ஏரியை தூர்த்து கட்டப்பட்ட – நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் .
“ஏரிக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். அது சோழர் காலத்தில் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தால்கூட!” என்று திருவேற்காடு பகுதியில் இருக்கும் கோலடி ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் அதிரடி காட்டியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். …(கார்ட்டூன் நன்றி – விகடன் தளம் …!!!)
அப்போ, வள்ளுவர் கோட்டம் ….???
………………………………………………………………………………………………………………………………………………….



நம்ம நாட்டுச் சட்டங்கள் இளிச்சவாயர்களுக்குத்தான்.
மாம்பலம், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் எத்தனை ஏரிகள் இருந்தன, அவை இப்போது எங்கே என்று தேட ஆரம்பித்தால், நீங்களும் நானும் நடந்துதான் போகணும். மின்சார இரயிலோ இல்லை வேறு இரயிலோ இருக்காது. லேக் வியூ ரோட் என்று இருக்கும் எல்லாமே, பாக்கம் என்று முடியும் எல்லா இடமுமே நீர்நிலையை ஒட்டியதுதான்.
நான் 87ல் தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூருக்குப் போகவேண்டும் என்றால், இடது புறம் மிகப் பெரிய ஏரி இருக்கும். மிகப் பெரியது என்று சொன்னால் அவ்வளவு பெரிய ஏரி. கொஞ்சம் தண்ணீர் இல்லை என்றால் சதுப்பு நிலமாக சுற்றிச் சுற்றி இருக்கும். பிறகு மெதுவாக அங்கு ‘சுவிசேஷ பிரசங்கம்’ கிறித்துவக் கூட்டங்கள் என்று ஆரம்பித்தது (கொஞ்சம் வெயில் காலத்தில்). இப்போ அந்த இடங்களுக்கு யார் பட்டா கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. கிழக்குத் தாம்பரத்திலிருந்து அந்தப் பகுதியில் இடமே இல்லாதபடி ஏகப்பட்ட சர்ச்சுகள் கட்டிடங்கள் என்று முழுவதுமாக ஆக்கிரமிப்புக்குள்ளாகிவிட்டது (அவற்றை ஆக்கிரமிப்பு என்று சொல்ல முடியாதபடி பட்டா கொடுத்துவிட்டார்கள்). மிஞ்சின ஏரியில் அரசு கட்டிடம் கட்ட ஆரம்பித்துவிட்டு, அதற்கு எதிர்ப்பு வந்ததும் அரை குறையாக இருக்கிறது. நான் பார்த்த பீர்க்கங்காரணை ஏரி, இப்போ குளம் சைசுக்கு வந்தாகிவிட்டது.
இன்னும் இருபது வருடங்கள் கழித்து இன்னொரு மதிப்புக்குரிய நீதிபதி அவர்கள், ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டு என்று கர்ஜிப்பார்.
சுப்ரீம் கோர்ட் சொல்லியே கோயம்பேடில் இருக்கும் மசூதியை ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டு அகற்றப்படுவதை வாக்கு வங்கிக்காக நிறுத்திவிட்டார். இதில் ஏரியாவது, ஆக்கிரமிப்பாவது.