……………………………………….

………………………………………..
நூலகங்கள் விஷயத்தில் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு என்றுமே
ஒரு சிறப்பான இடம் உண்டு என்பது ஏற்கெனவே நாம் அறிந்த விஷயம்….
பல பெரிய, அற்புதமான நூலகங்கள்…!!!
இப்போது இன்னுமொரு சிறப்பு தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் ‘முதல் நடமாடும் நூலகம்’, 1931-ம் ஆண்டு
அக்போபர் 21-ந்தேதியன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில்
துவக்கப்பட்டிருக்கிறது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால்
உருவாக்கப்பட்ட இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.
முதியோர் கல்வியை இலக்காகக் கொண்டு – பல கிராமங்களுக்கு,
எளிய தமிழில், தோட்டக்கலை, தேனீ வளர்ப்பு, குடிசைத்தொழில் மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் முறைகளைப் பற்றிய குறிப்புகளுடன்
புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டு இந்த நடமாடும் நூலகத்தின் மூலம்
விநியோகம் செய்யப்பட்டன.
மன்னார்குடி மற்றும் அதனைச்சுற்றி – 12 மைல் தொலைவு வரை உள்ள கிராமங்களில் வசிப்பவர்களின் கல்வி நலனிற்காக கௌமார குருகுலம் நிறுவப்பட்டது.
நடமாடும் நூலகத்தின் மூலம் 95 கிராமக் கிளைகளுக்கு இலவசமாக
புத்தகங்கள் கொடுத்து வாங்கப்பட்டன. சித்திரை, ஐப்பசி மாதங்களில்
கிராமப்புற இளைஞர்களுக்கு சிறப்பு பள்ளிக்கூடம் மூலம்
கல்வியும் போதிக்கப்பட்டது.
மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றான இந்நடமாடும் நூலகத் திட்டம்,
பின்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் துவக்கப்பட்டு,
கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் வித்திட்டது….
(நன்றி “தாய்” இதழ்….)
………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….