………………………………….

……………………………………………….
இந்த புகைப்படம் மிகுந்த வியப்பைத் தருகிறது அல்லவா…..???
சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற மதினா நகரில்
உள்ள விமான நிலையத்தில் 1950-ஆம் ஆண்டு கால கட்டங்களில்
விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட்டை
சரிபார்த்து விமானத்தில் ஏற அனுமதிக்கும் நிகழ்வின்
புகைப்படம் மேலே …
விமானம் பக்கத்திலேயே இருக்கிறது…
அதற்கு மிக அருகில் தரையில்
அமர்ந்தபடி விமான நிலைய அதிகாரிகள்…
இடையே ஒரு கயிறு மட்டுமே உள்ளது…
இவர்கள் பாஸ்போர்ட்டை சரிபார்த்து ஒப்புதல் கொடுத்ததும்
கயிற்றை தாண்டி சென்று விமானத்தில் ஏறி பிரயாணம் செய்யலாம்…
ஆரம்ப காலங்களாகிய இந்த நேரங்களில் சவுதி அரேபியா மிக மிக சாதாரணமாக உள்ளது இப்புகைப்படம் மூலம் தெரிகிறது…
இன்றைய விமான நிலையங்கள் ….???? !!!
இன்றைய நாட்களில் ,
50 -களில் சவுதி அரேபியா மதினா
சென்று வந்த பிரயாணிகளால் மட்டுமே
இக்காலங்களில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்களை நன்கு உணர முடியும் .
( நன்றி – திரு.ராமஸ்வாமி பாலசுப்ரமணியன் )
The same Airport Today –
………………………………………………………………………………………………………………



பஹ்ரைனில் ஆயில் கண்டுபிடித்த பிறகுதான் அதன் முக்கியத்துவம் கருதி விமானம் வந்தது. மிடில் ஈஸ்டிலேயே பஹ்ரைனில்தான் முதல் விமானம் கல்ஃப் ஏர் வந்தது. சென்னையிலேயே (அப்புறம் பஹ்ரைன், துபாய்) நான் நடந்து சென்று விமானத்தில் ஏறியிருக்கிறேன். 90களிலும் விமான நிலையங்கள் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தன. முதலில் துபாய்தான் அளவில் மிகப்பெரிதாக விமான நிலையத்தை வடிவமைத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புதான் உபயோகத்திற்கு வந்தது. அதைப் பார்த்துவிட்டு கத்தார், பஹ்ரைன் என்று விமானநிலையத்தை விரிவாக்க செய்ய ஆரம்பித்தார்கள்.
இப்போது நினைத்தால் 90களுக்கும் 2015க்கும் உள்ள வித்தியாசமே மிகப் பெரியதாகத் தெரிகிறது எனக்கு. 90களில் நான் வசித்த துபாய்க்கும் 2010களுக்குமே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
இதைப்பற்றியே விரிவாக எழுதலாம். எப்படி விமானங்களின் பயணக்கட்டணம், திடுமெனக் குறைந்தது, பட்ஜெட் ஏர்லைன்ஸ் எப்படி எல்லோரையும் கவர ஆரம்பித்தது என்றெல்லாம்