…………………………………………..

…………………………………………….
மதுவிலக்கு தொடர்பான விசிகவின் தீர்மானங்களை விமர்சித்து
நேற்று சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறிசரத்குமார் யுள்ளதாவது:
“விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்களில், மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள மது விலக்கை, தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம், முரண்பாட்டுடன் வேடிக்கையாக உள்ளது.
குடியுரிமை சட்டம், தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாக விவாதம் செய்பவர்கள், மாநில உரிமைகளுக்குள் இருக்கும் மது விலக்கை நேரடியாக அமல்படுத்தாமல், மத்திய அரசு தேசிய கொள்கையாக்கி அமல்படுத்திட வேண்டும் என பொறுமையாக காத்திருப்பது நகைப்புக்குரியது.
மது விலக்கு அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசே வரி இழப்பு தரவேண்டும் என்று மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் வகையில் கூட்டணி கட்சியின் ஆட்சிக்காக மாநாட்டில் பேசியிருப்பது முற்றிலும் மக்கள் நலனுக்கு எதிரானது. மத்திய அரசு மீது அனைத்து குற்றச்சாட்டுகளையும் சுமத்தி, தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்பவர்களை மக்கள் அடையாளம் காணவேண்டும்” இவ்வாறு அதில் சரத்குமார் கூறியுள்ளார்….
இந்த விஷயத்தை பொறுத்தவரை சரத்குமார் சொல்வது முற்றிலும் சரியே
என்பதே நமது கருத்தும்.
…………………………………………………………………………………………………………



ஒருவேளை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால், திருமா, மதுவுக்குக் காரணம் அமெரிக்காவும் பிரிட்டன் போன்ற மேற்கத்தைய நாடுகள்தான். அவர்கள் மது ஒழிப்பை ஆரம்பித்தால் இந்தியாவில் தானாக மதுவே இருக்காது என்று சொல்லியிருப்பார்.
அடிமையின் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதி சரத்குமார் பேசியிருக்கவேண்டாம். மக்கள் முட்டாள்கள் என்றால் (கருணாநிதியின் மொழியில், சோற்றால் அடித்த பிண்டங்கள்) திருமாவின் பேச்சை நம்புவார்கள். அவ்ளோதான் விஷயம்.