………………………………………………

………………………………………………..
பூரணய்யாவின் கண்களில் ஒரு பெரும் பேழை தென்பட்டது. துருக்கி நாட்டின் ‘கான்ஸ்டாண்டி நோபில்’ நகருக்கு ஹைதர்அலி சென்றிருந்தபோது, அந்நகரின் காலிபா தன் நினைவாக ஹைதர் அலிக்கு ஒரு பேழையைக் கொடுத்தார்.
அதனுள் மாணிக்கக் கற்கள், பட்டாடைகள் கையால் குருதி கொண்டு எழுதப்பட்ட திருக்குர்ஆன் நூல், மெக்கா நகரின் ஜம்ஜம் ஊற்று நீர் கொண்ட கண்ணாடிக் குடுவை என்று பல பொருள்களை அந்த பெரும் பேழையில் வைத்துக் கொடுத்திருந்தான்.
அதன் புறத்தில் உருது மொழியில் `இறைவன் நிகரில்லாத பெரியவன்’ என்ற வாசகத்துடன், திருக்குர்ஆனில் காணப்படும் சில அருளுரைகளும் பொறிக்கப்பட்டிருந்தன.
அந்தப் பேழையைக் கண்ட பூரணய்யா, அதனுள் ஹைதரின் உடலை அமர்ந்த நிலை யில் வைத்து, ஓர் ஆடை கொண்டு உடலை மூடினார். ஆடையின் மேல் மாணிக்கக் கற்கள், நகைகள், பட்டாடைகள் அடுக்கி வைத்தார். நடுநாயகமாக திருக்குர்ஆன் நூலையும் வைத்துப் பேழையை மூடினார்.
அதன் பிறகு, பேழையை ஒரு பல்லக்கில் வைத்து, முன்புறம் நான்குபேர் பின்புறம் நான்குபேர் என மொத்தம் எட்டுபேர் பல்லக் கைச் சுமக்க, நரசிங்கம்பேட்டையை விட்டு 1782-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி ஒரு ஊர்வலம் போல புறப்பட்டார் பூரணய்யா.
வழியில் எவராவது தடுத்தாலும் அது தெய்விகமானது என்பதால் விலகி விடுவார் கள் என்பது பூரணய்யாவின் எண்ணம். அந்த ஊர்வலம், கர்நாடக மாநிலம்-கோலாரை அடைய 12 நாள்களாயின. அதுவரையிலும் உடல் கெடாமல் இருக்க, யுனானி முறையில் ஒருவகை எண்ணெய் பூசப்பட்டது. இருந்தும், கோலாரை அடைந்த போது உடம்பு சுருங்கிய தோடு சில பாகங்கள் பிய்ந்து உதிர்ந்தன. உதிர்ந்த பாகங்களை எடுத்து அதை ஒரு ஜாடிக்குள் போட்டு மூடிய நிலையில், கோலாரில் ஹைதர் உடலை அடக்கம் செய்தான் திப்பு. பின், உதிர்ந்த பாகங்களைக் கொண்ட ஜாடியை ஸ்ரீரங்கபட்டினத்துக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தான்.
இதையும் ஒரே குழியில் கோலாரில் அடக்கம் செய்திருக்கலாமே'' என்று பூரணய்யா கேட்டார். திப்புஎனக்கு இந்த உலகமே சொந்தமாக இருந்தாலும், ஸ்ரீரங்க பட்டினத்தையே என் பிறந்த மண் போல் கருதுகிறது மனம். அதனால் இனி வரும் காலங்களில் என்னை மட்டுமல்ல, என் வம்சாவளியினரும் இந்த மண்ணில்தான் புதைக்கப்பட வேண்டும்” என்றான். இப்படிச் சொன்ன திப்பு, தந்தை இறந்த துக்கத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டுத் தன் யுத்தத்தைத் தொடரவும் செய்தான்.
ஒரு நாற்பது நாள்களுக்காவது தாங்கள் ஓய்வில் இருக்கக் கூடாதா?'' என்று பூரணய்யா கேட்டார்.இல்லை! ஒரு நாள் நான் ஓய்வெடுத்தாலும், பரங்கியர்கள் இந்த நாட்டில் பல அடிகள் ஊடுருவி விடுவார்கள்” என்றான் திப்பு. அப்போது பூரணய்யா திப்பு விடம் `இந்தப் பாரத தேசம் மேல்தான் எத்தனைபேருக்கு விருப்பம்... ஆனால் உண்மையில் இதற்கு உரியவர்களிடம் இந்த ராஜ்ஜியம் இல்லாததுதான் காரணம்'' என்றார். பூரணய்யாவின் பதில் திப்புவை சிந்திக்க செய்தது. பூரணய்யா எதையும் பட்டென்று போட்டு உடைத்து விடக்கூடியவர். அச்சம் இல்லாதவர். அதனால்தான் திப்புவிடம்கூடஉங்களுக்கும் இந்த நாட்டின் மேல் உரிமை இல்லை’ என்று சொல்லாமல் சொல்ல முடிந்தது.
பூரணய்யாவின் நேர்மையும் விசுவாசமும் ஹைதருக்கு மிகப் பிடித்தமான காரணத்தால் தான் அவரைத் தன் அருகிலேயே வைத்திருந் தான். அவரின் சிபாரிசுகளுக்கும் மதிப்பளித் தான். அதற்கான சாட்சி சாமைய்யன். அதேபோல கணக்கு வழக்குகளைப் பார்ப்பது, வரி நிர்வாகம் போன்றவற்றுக்கும் ஹைதர் ஒரு ஸ்ரீவைஷ்ணவனையே நியமித்திருந்தான்.
ஒருமுறை, ஹைதர் படையோடு வருவது அறிந்து, எங்கே தாங்கள் கொல்லப்படுவோமோ என்று பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் திருவரங்கக் கோயிலுக்குள் தஞ்சம் புகுந்தனர்; அரங்கன் நிச்சயம் தங்களை காப்பாற்றுவார் என்று நம்பினர். அதற்கேற்ப, ஆலயத்தின் ஸ்ரீபண்டாரத்தில் இருந்து நெல் எடுத்து அதை அவித்து சோறு சமைத்து அதை `ததியன்னம்’ எனப்படும் தயிரன்னமாக அனைவருக்கும் ஆலய நிர்வாகம் அளித்தது.
பின் சாமைய்யன் செய்த சமாதானத்தால், ஆலயம் சார்ந்தவர்களுக்கு ஹைதர் எந்த கெடுதலும் செய்யவில்லை. சாமைய்யனின் சாதுர்யமான பேச்சு அப்படியிருந்தது!
“ஹீசூர்… உங்களுக்கும் இறைவன் ஒருவனே. அவனே மிகப் பெரியவன். வைணவன் அல்லது சைவன் வரையிலும்கூட இறைவன் ஒருவனே. அவனே மிகப்பெரியவன். ஒரே பேதம்… நீங்கள் உருவ வழிபாடு செய்வதில்லை. நாங்கள் அதைச் செய்பவர்கள். சாரம் காட்டாமல் ஒரு கட்டடத்தை எழுப்ப முடியாது. அதுபோல இறைவனை துதிக்க ஒரு பிடிமானமாகப் பயன்படுவதே உருவம். அந்த உருவை மனிதனால் மட்டுமே உருவாக்க முடியும்.
நானே பிரம்மம் – அதாவது இறைவன் என்னைப் படைத்ததால், அவனால் நான் தோன்றியதால், எனக்கு அவன் சம்பந்தம் எப்போதும் உண்டு. அதை உணர பக்தி தேவை. அந்தப் பக்திக்கான சாதனமே உருவங்கள். உருவங்களை உருவாக்கிவிட்டு, அவற்றைப் பூஜைக்காமல் இருந்தால் அவை கலைச்சின்னங்களாக மட்டுமே கருதப்படும். எனவே, கலைச்சின்னங்களில் இருந்து மாறுபட்டவை என்பதை உணர்த்தவே இறை ரூபங்களுக்கு அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் புரிகிறோம். அவற்றை ஓர் ஒழுங்குடன் நிகழ்த்தவே ஆகமங்களை உண்டாக்கினோம்.
கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, சாரங்கள் அகற்றப்பட்டு விடுவது போன்று, `நானும் பிரம்மம்’ என்று உணர்ந்து தெளிந்து விட்ட ஒருவர், அதன் பின் இந்த ஆகமப்படி நடக்கத் தேவையில்லை. அவரால் ஒரு தூசு துரும்பிலும் கூட இறைவனைக் காண முடியும். எனவே அவர் ஆலயங்களுக்கு சென்றுதான் வழிபட வேண்டும் என்றில்லை.”
இப்படி, வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் சாமைய்யன் ஹைதரிடம் பேசிய பேச்சுக்கள், ஹைதரை கட்டிப்போட்டதோடு அவனுடைய மதத் துவேஷத்தைக் கட்டுப்படுத்தவும் செய்தன. அதனால் `திருவங்க ஆலயத்தை சாமைய்யனே நிர்வகிக்கலாம். அந்த ஆலயமே அவனுக்கு உரிமைப்பட்டது என்று நான் அறிவிக்கிறேன்!’ என்ற ஹைதர், பின் அதைக் கைப்பட எழுதியும் தந்ததாகத் தெரிகிறது.
திருவரங்க ஆலயம், மாற்றுச் சமயத்தவரால் எப்படியெல்லாம் பார்க்கப்பட்டது, பின் அதில் தன் பொலிவை இழக்காமல் எப்படி செயல்பட்டது என்பதற்கு இந்த வரலாற்றுச் சம்பவங்கள் மிகச் சிறந்த உதாரணங்களாகும்.
ஹைதர் இறந்த பிறகு தென்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த திப்பு திருவரங்கம் கோயிலை யும் தனது கட்டுப்பாட்டுக்குள் சில காலம் வைத்திருந்தான்.
( திரு.இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய ரங்கராஜ்ஜியம் நூலிலிருந்து
ஒரு சிறிய பகுதி …!!! )
…………………………………………………………………………………………………………………….…



WHERE WE ARE GOING …..???
………………………………………………………
Vardhman Group CEO Duped Of ₹ 7 Crore By Cyber Scamsters Posed As CBI
………………………………………………………
நான் தி நகரில் பணிபுரிய ஆரம்பித்த நேரம். என் Boss (Company Owner) இல்லாதபோது, EB recordsஐக் காண்பித்து Electricity cut பண்ணப் போகிறேன் என்று EB ஊழியர் வந்து புத்தகங்களைக் காண்பிக்க, அன்று பெற்றிருந்த சம்பளத்தை நான் கொடுத்தேன் பாக்கி உள்ள billக்காக. Later when I went and checked with EB office, நான் ஏமாற்றப்பட்டேன் என்று புரிந்துகொண்டேன். (89ல்).
சென்ற வருடமும் கூட யூடியூப் விளம்பரம் ஒன்றைப் பார்த்து பணத்தை அனுப்பி, மாம்பழம் வராமல் ஏமாந்திருக்கிறேன். பசங்கள்ட சொன்னா, அந்த விளம்பரம் பார்த்த உடனேயே fraud என்று ஏன் தோன்றவில்லை என்று கேட்கறாங்க. சட் என்று நம்மை மதிமயக்கும் விளம்பரங்கள், பேச்சுக்கள், தொலைபேசிகள் நம்மை ஏமாற்றிவிடும், கண நேரத்தில்.
இதுவும் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான். இருந்தாலும், இவ்வளவு பெரிய பதவியில் உள்ளவர், கொஞ்சம் ஜாக்கிரதையாக verify பண்ணியிருக்கலாம். கண நேரத்தில் அவங்க அவங்க தகுதிக்கு ஏற்றவாறு ஏமாந்துவிடுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். அதிலும் Artificial Intelligence வந்த பிறகு, காணொளி, Documents என எதையுமே நம்ப முடியாத நிலைமை இருக்கிறது.