……………………………………………

……………………………………………
” லண்டன் வீராஸ்வாமி ” …!!! நாமெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விஷயம் …!!!
சுமார் 98 வருடங்களுக்கு முன்னர், 1926-ஆம் ஆண்டு, லண்டனில் துவங்கப்பட்டு இன்றும் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு இண்டியன் ரெஸ்டாரண்ட்….
லண்டனில் மிகவும் புகழ்பெற்ற நம்பர் -1 இண்டியன் ரெஸ்டாரண்ட்.. நமக்குத் தெரிந்த பல வி.ஐ.பி.க்கள் இங்கு சென்ற நூற்றாண்டிலேயே விஜயம் செய்திருக்கின்றனர்… அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர் –
காந்திஜி, சரோஜினி நாயுடு, சார்லி சாப்ளின், நேருஜி, மஹாராணி காயத்ரி தேவி …….Winston Churchill, King Gustav VI of Sweden and many more …..!!!

………………………………………………………………….

…………………………………………………………………………….

……………………………………………………………………………

…………………………………

……………………………

……………………………….

………………………………..

………………………………….
இந்த ஹோட்டலுக்கு உணவருந்த செல்லவேண்டுமானால், சில விசேஷ விதிகள் உண்டு……
முதலில், இதன் வெப்சைட்டிற்கு சென்று “அட்வான்ஸ் புக்கிங்” செய்யவேண்டும்…விஜயம் செய்யவிருக்கும் நேரம், நபர்களின் எண்ணிக்கை….
இங்கே செல்ல “டிரெஸ் கோட்” உண்டு. வெப்சைட்டிலேயே அதுவும்சொல்லப்பட்டிருக்கும் ….
ஒவ்வொரு நபரும், குறைந்தபட்சம் 60 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு குறையாமல் சாப்பிட வேண்டும்… ஒரு குடும்பத்தில் 4 பேர் சென்றால், மொத்த பில் 240 பவுண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். இந்திய ரூபாயில் சுமார் 25,000 என்று வைத்துக்கொள்ளுங்களேன்….😊😊😊
ஒரே சமயத்தில் 114 பேர் வரை இங்கே உணவருந்த இடம் உண்டு. அப்படியும், விடுமுறை நாட்களில் இடம் பிடிக்க வேண்டுமானால், ரிசர்வேஷன் செய்ய முந்திக் கொள்ள வேண்டும்….!!!
இந்த ரெஸ்டாரண்டுக்கு ஏன் இந்தப்பெயர் என்று விசாரித்தால் – 98 வருடங்களுக்கு முன்னர் இதைத் துவங்கியவர் Edward Palmer என்ற பெயருடைய ஒரு ஆங்கிலோ இந்தியர்….. அவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராம்…. அவரது தாத்தாவும் அதே மாதிரி இந்தியாவில் பணியாற்றியபோது ஒரு தமிழ்ப்பெண்ணை ( ப்ரின்சஸ் என்று சொல்லிக் கொள்கிறார்கள்…!!! ) மணந்து கொண்டாராம்… அந்தப்பெண்ணின் தந்தையின் பெயர் வீராஸ்வாமியாம் …!!! ஆக, வீராஸ்வாமி என்பது அந்த ஆங்கிலோ இந்தியரின், இந்திய பாட்டியின் குடும்பப்பெயர் என்று சொல்கிறார்கள்…. பெயர் வந்தவழி எப்படியானால் என்ன….. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக, லண்டனில் கொடிகட்டிப் பறக்கிறது ஒரு தமிழரின் பெயர்….
சட்டைக் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாமா …???
………………………………………………………………………………………………………………………………………………



This is wonderful information! Thanks for sharing!