……………………………………….

………………………………………..
நேற்றிரவு நள்ளிரவு சமயத்தில் கொல்கத்தாவில், கற்பழிப்பு, கொலை
நடந்த மருத்துவமனையில் கலவரம் நடந்திருக்கிறது…..
கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் உடலில் 150 மில்லி கிராம்
விந்தணுக்கள் இருப்பது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது…
பாதிக்கப்பட்ட பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்,
“தலையின் பல பாகங்களில் காயத்தின் அறிகுறிகள் தென்பட்டன.
இரண்டு காதுகளிலும், உதடுகளிலும், கழுத்திலும் கடித்த அடையாளங்கள் உள்ளன. அவரது இடது தோள்பட்டை எலும்பு முறிந்துள்ளது. அவரது
உடலில் 150 மில்லி கிராம் உயிரணுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றும் மற்ற பல தகவல்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது….
இதையடுத்து, தனியார் மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ஒருவர் மட்டும் பாலியல் வன்கொடுமை செய்திருந்தால் இந்த அளவுக்கு
விந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றும் எந்தவித சந்தேகமும் இல்லாமல்
இது கூட்டு பாலியல் வன்முறை தான் என்றும் நிச்சயமாக ஒன்றுக்கு
மேற்பட்ட நபர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தங்கள் மகள், கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக
பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இவையெல்லாம்
சேர்ந்து மேற்கு வங்கத்தில் மக்களிடையே பெரும் கொதிப்பை
உருவாகி விட்டது…..
இந்த நிலையில், நேற்றிரவு நடந்த கலவரங்களுக்குப் பிறகு செய்தியாளரிடையே பேசிய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் –
“”பொய்யான ஊடக பிரசாரத்தால் கொல்கத்தா காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது…
இந்த வழக்கில் ஒரே ஒரு குற்றவாளிதான் இருக்கிறார் என்று காவல்துறை சொல்வில்லை.. (ஆனால், பிரேத பரிசோதனை ரிப்போர்ட்
கிடைத்த பிறகும் கூட கூட்டு பலாத்காரம் என்றும் இந்த நிமிடம்
வரை போலீஸ் சொல்லவில்லை – )
அறிவியல் ஆதாரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது கிடைக்க இன்னும் நேரம் ஆகும். அதற்காக வெறும் வதந்திகளின் அடிப்படையில்,
எதுவும் செய்ய முடியாது…
வதந்திகளின் அடிப்படையில் யாரையும் கைது செய்ய
என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்கிறார் இந்த உலக உத்தமர் கொல்கத்தா போலீஸ் கமிஷனர்…..
சம்பவம் நடந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகும், கூட்டு பலாத்காரம்
என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொன்ன பிறகும் கூட, இவர்கள் கைது
செய்திருப்பது ஒரே ஒரு மனநோயாளியை மட்டும் தான்.
உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட இவர்கள் முயற்சிக்கிறார்கள்
என்பது வெளிப்படையாகவே தெரிகிறது……
காரணம், அரசியலாகவோ, பணபலமாகவோ, ஜாதி, மதமாகவோ –
எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்…….
ஆனால், காவல் அதிகாரியின் இந்த பதில் உச்சபட்ச அராஜகம்.
முதலில் இவர் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்….
கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்திரவின்படி சிபிஐ, இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்வது ஓரளவு ஆறுதல் தரும் விஷயம்.
ஆனால், சிபிஐ, இந்த போலீஸ் அதிகாரிகளையோ, அந்த மருத்துவமனை
தலைமை பொறுப்பாளரையோ, தலைமை செக்யூரிடி அதிகாரியையோ –
யாரையும் விட்டு விடக்கூடாது. உண்மை குற்றவாளிகளை
மறைப்பவர்களும், தப்பவிடுபவர்களும் கூட குற்றவாளிகளே…..
.
…………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….