…………………………………………..

…………………………………………….
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, செல்வப்பெருந்தகை – அண்ணாமலை மோதல், மீண்டும் சூடுபிடிக்கும் காவிரிப் பிரச்னை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த கேள்விகளோடு, பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீநிவாசனிடம் பேசினேன்…
( நன்றி – ஜூனியர் விகடன் )
“ ‘ரெளடிகளுக்குப் பொறுப்பு வழங்கும் கட்சி பா.ஜ.க’ என்று பொதுவில் இருந்துவரும் ஒரு குற்றச் சாட்டைத்தான் மீண்டும் சொன்னார் செல்வப்பெருந்தகை. ஆனால், அதற்கு பதில் சொல்லாமல், அவர்மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுக்கிறாரே அண்ணாமலை?”
“அண்ணாமலையின் கருத்தை, செல்வப்பெருந்தகை மறுக்கலாம் அல்லது வழக்கு தொடுக்கலாம். அதை விடுத்து `அவன் இவன், வாடா, போடா…’ எனத் தனிமனிதத் தாக்குதல் நடத்தி, தரக்குறைவாகப் பேசுவது அவர்தான். பா.ஜ.க-வில் இருப்பவர்கள்மீது ‘குற்றப் பின்னணி… குற்றப் பின்னணி…’ என்கிறீர்கள். கொரோனா காலத்தில் உணவு விநியோகித்தேன் என என்மீதும் கிரிமினல் வழக்கு இருக்கிறது. அப்படியானால், நானென்ன குற்றப் பின்னணிகொண்டவனா… நான் கட்சியில் இருக்கக் கூடாதா?”
“அப்படியென்றால், கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உங்கள் கட்சியில் இல்லை என்கிறீர்களா?”
“ஒருவரைக் குற்றவாளியா, இல்லையா எனத் தீர்மானிக்கவேண்டியது நீதிமன்றம்தான். சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வந்தால், கட்சியைவிட்டு விலக்குகிறோம். ஒருவேளை நிரபராதி எனத் தீர்ப்பு வந்துவிட்டால் என்ன செய்வது… குற்றப் பின்னணிகொண்டவர்களுக்கான அடிப்படை மற்றும் அரசியல் உரிமையை மறுக்க முடியாது.எனவே, குற்றப் பின்னணிகொண்டவர்கள் கட்சியில் சேருவதில் பிரச்னையில்லை. ஆனால், அவர்களுக்குக் கட்சியை வழிநடத்தும் அளவிலான பொறுப்புகள் வழங்கக் கூடாது என்பது என் கருத்து. இன்றைய சூழலில், மிஸ்டு கால் கொடுத்து கட்சியில் சேரும் வாய்ப்புகள் இருக்கின்றன. யார் மிஸ்டு கால் கொடுக்கிறார்கள் என எப்படித் தெரியும்… செல்போன் கிடைத்தால், சிறையிலிருந்துகூடச் சிலர் மிஸ்டு கால் கொடுக்கலாம்.”
ஆருத்ரா நிறுவனத்தை பா.ஜ.க பாதுகாக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ராவையும் விசாரிக்க வேண்டும்’ என்கிறாரே திருமாவளவன்?”
“திருமாவளவன் எப்போது சி.பி.ஐ-போல புலனாய்வு நிறுவனமாக மாறினார் எனத் தெரியவில்லை. ஆனாலும், குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆருத்ரா என்று இல்லை, யாராக இருந்தாலும் விசாரிக்கப்பட்டு குற்றவாளி அம்பலப்படட்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருமாவளவன் பா.ஜ.க-வை விசாரிக்கச் சொல்லட்டும். அதில் அவர் உறுதியாக இருக்கட்டும். அதை நான் வரவேற்கிறேன். இல்லையென்றால், பொதுவெளியில் பொறுப்பற்றுப் பேசுகிற லிஸ்ட்டில் திருமாவளவன் சேர்ந்துவிடுவார்.”
“ஆளுங்கட்சிமீது பல்வேறு அதிருப்திகள் இருந்தும், அ.தி.மு.க இல்லாத விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையே?”
“சட்டம்-ஒழுங்கு, கள்ளச்சாராயம் உள்ளிட்ட விவகாரங்களைத் தேர்தல் பிரச்னையாகப் பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை. அ.தி.மு.க வாக்குகளைப் பொறுத்தவரை நேரடியான நிர்வாகிகளின் வாக்குகள் பா.ம.க-வுக்கு வந்திருக்கலாம். ஆனால், அ.தி.மு.க ஆதரவு வாக்குகள் தி.மு.க-வுக்கே போயிருக்கின்றன. வாக்குகளுக்காகப் பணம் கொடுக்கவேண்டிய அவசியமும் பா.ம.க-வுக்கு இல்லை. மேலும், தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும்போது, பா.ம.க-வை ஜெயிக்கவைத்தால் எம்.எல்.ஏ-வுக்கு வாய்ஸ் இருக்காது. தொகுதிக்குத் திட்டம் வராதோ என்றும் மக்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.”
`எடப்பாடி துரோகி’ என்ற அண்ணாமலையின் பேச்சுதான் அ.தி.மு.க ஆதரவு வாக்குகள் உங்கள் கூட்டணிக்குக் கிடைக்காமல் பின்னடைவை ஏற்படுத்திவிட்டதா?”
“அதனாலெல்லாம் இல்லை. அண்ணாமலை அப்படிச் சொல்லாமல் இருந்திருந்தால், அ.தி.மு.க ஆதரவு வாக்குகள் அப்படியே பா.ம.க-வுக்கு வந்திருக்குமா… நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ம.க – அ.தி.மு.க இரண்டும் பெற்ற வாக்குகளைச் சேர்த்தால்கூட, இன்றைய தி.மு.க-வின் வாக்குகள் வராது. எனவே, இந்தக் கருத்தை ஏற்க முடியாது.”
`2026-ல் பா.ம.க தங்கள் தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும்’ என்கிற கணக்கில்தான் அ.தி.மு.க தேர்தலைப் புறக்கணித்ததா… இதை, பா.ஜ.க எப்படிப் பார்க்கிறது?”
`அதெல்லாம் இல்லை.டெபாசிட்கூட கிடைக்காமல் தோற்றால் கேவலம்’ என நினைத்துத்தான் அ.தி.மு.க போட்டியிடவில்லை. 2026 கூட்டணி பற்றி இப்போதே பேச முடியாது.”
“கர்நாடகாவில் பா.ஜ.க அரசு இருந்தபோதும், காவிரிப் பிரச்னைக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்திய தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கு, காங்கிரஸைக் குறைசொல்ல என்ன தார்மிகம் இருக்கிறது எனக் கேட்கிறார்களே?”
“கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியிலிருந்த போது, நீர்த் திறப்பில் பிரச்னை இருக்கவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க போராடியது மேக்கேதாட்டூ அணை கட்டக் கூடாது என்பதற்காகத்தான். தொடர்ந்து, பா.ஜ.க-வின் கர்நாடகத் தேர்தல் அறிக்கையில் `அணை கட்டுவோம்’ என்ற வாக்குறுதி இடம்பெறவில்லை. தற்சமயம், நீர்த் திறப்பிலும் சரி, அணை கட்டுவதிலும் சரி… காங்கிரஸ் அரசு பிடிவாதம் காட்டுகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிக் கண்டிக்கும் தி.மு.க., சட்டமன்றத்தில் நீட் தீர்மானத்தைப்போலவே இதற்கும் தீர்மானம் இயற்றத் தயாரா… மாநிலத்தில் தி.மு.க., கர்நாடகத்தில் காங்கிரஸ் இருக்கும்போதும் பிரதமர் மோடி குரல்கொடுக்க வேண்டுமா… எதற்கெடுத்தாலும் வக்கணையாகப் பேசும் ராகுல் காந்தி குரல் கொடுக்க மாட்டாரா..?”
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
( ஒரு சந்தேகம் – ஆஷாடபூதி என்றால் தமிழில் என்ன அர்த்தம் …?

கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி அஞ்சலைக்கு தமிழக பாஜக-வில் என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது…? யாரால் ..??)
.
……………………………………………………………………………………………………………………..



//“ ‘ரெளடிகளுக்குப் பொறுப்பு வழங்கும் கட்சி பா.ஜ.க’ என்று பொதுவில் இருந்துவரும் ஒரு குற்றச் சாட்டைத்தான் // – ரௌடிகளை மாத்திரமே ஆதரிக்கும் பத்திரிகை ஜூனியர் விகடன் என்றுதான் பொதுவில் குற்றச்சாட்டு இருக்கிறது. ரௌடிகளுக்கு ஆதரவாகவே கட்டுரைகள் வெளியிடுவது விகடன் குழுமத்திற்கு வழக்கம் என்றும் பலர் பேசுகின்றனர். அதுபோல ஊழல் செய்து அரசுப் பணத்தைக் களவாண்டவர்களையும் உரிமையாளராகச் சேர்த்துக்கொள்வதுதான் விகடன் குழுமத்தின் வழக்கம் என்று ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது.
நீங்கள் மற்றவர்கள் எழுதிய கட்டுரையை இங்கு போட்டாலும் அதனை நீங்கள் நம்புவதால்தான் போட்டிருக்கிறீர்கள், உங்கள் எண்ணத்துடன் அது ஒத்துப்போவதால்தான் இங்கு எடுத்தாண்டிருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
பொறுப்பில் இருக்கும் ஒருவர் தவறு செய்தால் (அது உங்கள் அனுமானம் மாத்திரமே. இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை, இருந்தாலும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் என்பது தெரிந்தால் பாஜக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். பயங்கரவாதச் செயலை சிலிண்டர் வெடிப்பு என்று அமுக்காது) கட்சி செய்தது என்பது உங்கள் நிலைப்பாடு என்றால், எம்பியாக இருந்தபோது செய்த கொலையை கட்சி பெரிதாக எடுத்துக்கொள்ளாதது திமுக கட்சியின் தவறு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? எத்தனையோ கொலைக்குற்றச்சாட்டிற்கு உள்ளானவர், கோடிக்கணக்கான லஞ்சம் வாங்கினார் என்று நம்பப்படுபவர், கட்சித் தலைவராக உள்ளது உங்களுக்கு உவப்பாக இருக்கிறது போலும். உங்கள் அர்த்தமற்ற பாஜக எதிர்ப்பு நிலைதான், கொள்ளைக்காரர்களையும் ஊழல்வாதிகளையும் தேசவிரோதிகளையும் சகித்துக்கொள்வேன் ஆனால் பாஜகவை சகித்துக்கொள்ளமாட்டேன் என்ற நிலைப்பாட்டிற்குக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.
சபாஷ்! இந்த மாதிரியான கொத்தடிமைதான் நாட்டிற்கு தேவை.