………………………………………….

………………………………………………

…………………………………………………

…………………………………………………..

……………………………………………

……………………………………………
பார்க்காத இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும்….
புதிய மனிதர்களை, புதிய ஊர்களை, புதிய சூழ்நிலைகளை –
புதிய உலகை ….பயணம் செய்து காண வேண்டும் என்பது
என்னுடன் பிறந்த ஆசை….
உடம்பில் சக்தி இருக்கும் வரை, நிறைய பயணித்துக் கொண்டே
இருந்தேன்… இந்தியாவிற்குள் பலவேறு மாநிலங்கள், சிங்கப்பூர் மற்றும்
நேபாளம் ஆகிய வெளிநாடுகள் என்று பல இடங்களுக்கும்
தனியாகவும், குடும்பத்துடனும் சென்று பார்த்ததுண்டு….
எல்லாம் 4 வருடங்கள் முன்பு வரையோடு சரி.
எதிர்பாராத ஒரு விபத்து மற்றும் அதைத் தொடர்ந்த சில அடுக்கு நிகழ்வுகள் காரணமாக நான் கிட்டத்தட்ட பயணங்களை மேற்கொள்ள உடல் தகுதியற்றவனாகி விட்டேன். எதையும் செய்ய முடியாதவனாக, அநேகமாக வீட்டோடு, பெரும்பாலும் கட்டிலோடு – முடங்கி விட்டேன்…..
இறைவன் தந்த மன உறுதியை மட்டும் என்னை விட்டு இன்னும்
போகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனதளவில் – எந்த நிலையையும் ஏற்றுக்கொள்ள பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்….
தொடர்ந்து விமரிசனம் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்….
ஆனால், இதற்காக எனது லட்சியங்களை விட்டு விட நான்
தயாராக இல்லை. நேரில் போனால் தானா என்ன…? இறைவன் ஆசி இருக்கும் வரை, இணையம் துணை இருக்கின்ற வரையில், சாய்ந்து உட்கார்ந்த இடத்திலிருந்தே – சாய்ந்து படுத்த நிலையிலிருந்தே – இணையத்தின் மூலம்
உற்சாகமாக பயணம் செய்வதை எது என்னை தடுக்கின்றது ….??? ( உடல்சோர்வைத் தவிர …!!!)
எனவே, இனி, நான் போக விரும்பிய இடங்களுக்கெல்லாம்,
நான் பார்க்க விரும்பிய இடங்களுக்கெல்லாம், நான் நினைத்திராத
இடங்களையும் கூட , இணையத்தில் – தேடித்தேடி,
காணொளிகள் மூலம் செல்ல முயற்சி செய்யப்போகிறேன்….
அப்படி நான் பார்க்கும் காணொளிகளை எல்லாம் இந்த தளத்திலும்
பதிவிட உத்தேசித்திருக்கிறேன்…. என் போன்ற ரசனை உடைய
வாசக நண்பர்களும் காண அது உதவுமல்லவா…..!!!
இனி அடிக்கடி இங்கே பயணக் கட்டுரைகள்-காணொளிகள்
அதிகம் வெளிவரும்….
சரி பயணத்தை, ஈசன் துணையுடன் துவங்குவோமா … ???
- “வெள்ளியங்கிரி” சென்று வரலாமா ….???
…………………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….