…………………………………

………………………………..
சிங்கக் குடும்பத்தை லயன்ஸ் ப்ரைடு ( Lions Pride)என்று
சொல்கிறார்கள்…. ஒரு குடும்பத்தில் 15 முதல் 30 சிங்கங்கள்
இருக்குமாம். ஒரு குடும்பத்தில், அதிக பட்சம் 2 ஆண்,
5 பெண் சிங்கங்கள் மற்றும் ஆணும் பெண்ணுமாக
பல குட்டிகள் இருக்குமாம்.
இரை தேடுவது ஆணின் வேலை…. குட்டிகளை பார்த்துக்கொள்வது
பெண் சிங்கங்கள் தானாம்.
இதில் அப்பா யார், அம்மா யார், சித்தப்பா, சித்தி, பெரியம்மா,
பெரியப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை
யார் யார் என்று நமக்குப் புரியவில்லை; அதுங்களுக்கு
இந்த உறவுமுறைகளெல்லாம் புரிந்திருக்குமா என்ன …?
எந்த வேலையும், எந்த கவலையும் இல்லாமல் இவை
அலைவதைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது.
முதுகில் அரிப்பெடுத்தால், மல்லாந்து படுத்துக்கொண்டு
உருளுகின்றன….
கொஞ்சம் பின்னணி இசை சேர்த்திருக்கலாம்…
தவறி விட்டார்கள். இயற்கையாகவே இருக்கட்டும் என்று
விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.
நேரம் இருந்தால் முழுவதுமாக பாருங்கள் …. இல்லையென்றால் விட்டு விட்டு பார்க்கலாம்….!!!
…………………………………..
………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….