ஸ்பெஷல் அவதாரம் – கொடுத்து வைத்த இந்திய மக்கள் …!!!

…………………………………………

…………………………………………

விசேஷ செய்தி –

நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி ….

மாலை மலர் – 22 மே 2024 12:01 PM

https://www.maalaimalar.com/news/national/i-am-not-human-god-has-sent-me-to-this-earth-pm-modi-719661

……………………..

பிரதமர் மோடி, “நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு
அனுப்பியது பரமாத்மாதான்” என்று கூறியிருப்பது
மீண்டும் விமர்சனமாகி உள்ளது.

ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா,
“பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்”
என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதைதொடர்ந்து, பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தம்
தெரிவித்த பூரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா
3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

மேலும், “மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக
பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்” என தவறுதலாக கூறிவிட்டதாக
வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தார்.

…………………………………

இந்நிலையில், ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி
பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் பிரதமர் மோடி,

“நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது
பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.

ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக,
கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.

நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது
கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்” என்றார்.

.
………………………………………………………………………………………………………..…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஸ்பெஷல் அவதாரம் – கொடுத்து வைத்த இந்திய மக்கள் …!!!

  1. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    நீங்க அவரது பேட்டியை பார்த்தீர்களா… அவர் அப்படியா சொன்னார்

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Karthikeyan Palanisamy,

    நான் பார்த்தது மாலை மலர் செய்தியை …
    அதைத்தான் பிரசுரம் செய்திருக்கிறேன்….
    அதைத் தெளிவாக சொல்லவும் செய்திருக்கிறேனே…

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      அய்யா சிறு விண்ணப்பம் தாங்கள் இந்த மாதிரி தமிழ்ப் பத்திரிக்கை செய்திகளை இங்கே பதிவிடுவதை தவிருங்கள். தமிழ்ப்பத்திரிக்கை செய்திகள் அனைத்தும் பொய் மற்றும் கற்பனைச் செய்திகளே 🙏🏾

      • ஆதிரையன் சொல்கிறார்:

        போன தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்றால் , கருப்பு பணத்தை மீட்டு , அதை ஒவ்வொருவருக்கும் 15 லட்சமாக தருவதாக கூறியதாக தமிழ் பத்திரிக்கையில் படித்து , ஹிந்தி தெரியாத நானும், அதை பல காலமாக அவ்வாறுதான் கூறினார் என்று நம்பி கொண்டிருந்தேன்.பிற்பாடு அறிவு பெற்ற பிறகு, நான் தமிழ் பத்திரிக்கைகளில் வரும் பிஜேபி செய்திகளை , உறுதிப்படுத்திக்கொள்ளாமல் நம்புவதில்லை என முடிவெடுத்துக்கொண்டேன்.

பின்னூட்டமொன்றை இடுக