M.R. ராதா’வின் ஸ்பெஷாலிடி ….!!!

……………………………………….

……………………………………….

.”என்னடா நடிகன், கலைஞன்னு நமக்கு பெயரு….?
ஆளாளுக்கு ஒரு பெயர் வச்சிக்கிறானுக‌.
ஆனா அன்னைக்கு ஜனங்க வச்ச பேரு என்ன தெரியுமா?

  • கூத்தாடி….!!

ஜனங்க ஒழுங்கா உழைக்க போவான். காடு, கரை, வயல்னு உழைப்பான்.
கூத்தாடி பயலுக என்ன செய்வான் தெரியுமா? வீடு வீடா பிச்சை வாங்க
போவான். ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், அரிசி கம்பு இருந்தா
போடுங்க தாயின்னு பிச்சை எடுப்பான். அது தான் அவனுக்கு சாப்பாடு.
ராத்திரி உழைச்ச மக்கள் எல்லாம் வீடு திரும்பி சாப்பிட்டு விட்டு –

  • கொஞ்ச நேரம் கூத்து பார்க்க வருவான், அப்போதான் கூத்தாடி வேலையே ஆரம்பிக்கும்…! உழைச்ச மக்களுக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுக்குற
    கூத்தாடி பரம்பரை தான் நாங்கெல்லாம். அதனால அந்த கூத்தாடி பசங்கள
    பெருசா நினைச்சி அவனுகள மதிச்சி நாட்டை கொடுக்காதீங்க.

நாசமாக்கிருவானுக….!

அவனுகளுக்கு கூத்த தவிர ஒண்ணும் தெரியாது! ஒழுங்கா படிப்போ
வேலையோ தொழிலோ இருந்தால் அவன் ஏன் கூத்தாட வாரான்?

ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாத பய தான் அங்க வருவான்.
அடி மட்ட வரிசை அது. அவனை விட கீழான மடையன்
ஒரு பயலுமில்ல, தெரிஞ்சிக்க….!

அன்னைக்கு நாங்க வீடு வீடா போனோம். அரிசி கம்புகேழ்வரகுன்னு
கொடுத்தாங்க. பசியாறினோம்….!

இன்னைக்கு விஞ்ஞானம் உங்கள எங்கள் கொட்டாயி தேடி வந்து
காசு கொடுக்க சொல்லுது அவ்வளவு தான்.

மற்றபடி நாங்க அன்னைக்கும் கூத்தாடி, இன்னைக்கும் கூத்தாடி,
என்னைக்கும் கூத்தாடி….

இது புரியாம நடிகன் மன்றம், தலைவன், ம**ன்னு கிளம்பாத….!

( எம்.ஆர். ராதா அவர்கள் பேசியது 50-களில்….
இன்றைய நிலை வேறு…. எனவே, அதனை இன்றுடன்
ஒப்பிட்டு குழப்பம் கொள்ளக்கூடாது…
இருந்தாலும், அன்றைய நாட்களில், இவ்வளவு வெளிப்படையாக
பேசியவர்கள் வேறு யாரும் இல்லை….
அது தான் எம்.ஆர். ராதா அவர்களின் ஸ்பெஷாலிடி….!!!)

.
…………………………………………………………………………………………………….…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.