………………………………………………..

………………………………………………..
2-ஆம் உலகப் போர் நடந்து கொண்டு இருந்தபோது
ஆகஸ்டு 9, 1945 -ம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் நாட்டின் நாகசாகி மீது
அணுகுண்டு வீசியது. இதில் ஒரே நாளில் சுமார் 89,000 மக்கள்
கொல்லப்பட்டார்கள்.
மேலேயுள்ள புகைப்படமானது அணுகுண்டு வீசப்பட்ட சிறிது நாட்களுக்குப்
பிறகு செப்டம்பர் மாதம் 1945-ல் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க
புகைப்படமாகும்.
குண்டுவீச்சில் தப்பிப் பிழைத்த 10 வயதான சிறுவன், குண்டு வீச்சில்
தனது பெற்றோர்களையும் உறவினர்களையும் இழந்து போன நிலையிலும்,
கட்டிட இடிபாட்டில் மரித்துப்போன 2 வயது நிரம்பிய தனது தம்பியை,
தன்னுடைய முதுகில் கட்டிவைத்துக் கொண்டு, மரித்தவர்களை தகனம்
செய்யும் சுடுகாட்டில் தகனம் செய்ய தன்னுடைய முறைக்காகக்
காத்திருக்கிறான்.
அப்போது அவனை கவனித்த ஒரு இராணுவவீரர், இறந்துபோன
குழந்தையை அவன் முதுகில் கட்டிவைத்திருப்பதில் சோர்வடைந்து
போகாமல் இருக்க – கீழே இறக்கி வைக்கச் சொன்னார்.
அப்போது பதில்கொடுத்த அச்சிறுவன்:
“‘ அவன் கனமாக இல்லை…அவன் என் சகோதரன்”
- என்றான்….
இந்தச் சிறுவன் கூறியதை அந்த இராணுவ வீரர் தெளிவாகப் புரிந்து
கொண்டார்.
– போரினால் விளைந்த நன்மை…..!!!
அப்போதிருந்து, இந்தப் புகைப்படமானது ஜப்பான் நாட்டில்
சகோதர உறவின் அடையாளமாக மாறியது.
இதுவே நமது பொன்மொழியாக இருக்கட்டும்:
“அவன் கனமாக இல்லை… அவன் என் சகோதரன்…
அவள் என் சகோதரி.”
- உங்கள் சகோதரன் அல்லது சகோதரி விழுந்துபோனாலும் அவர்களைக்
கைதூக்கி எழுப்பிவிடுங்கள். நீங்கள் சோர்வடைந்து இருந்தாலும்,
அவர்களுக்கு உதவுங்கள்.
அவர்கள் உங்களை மனமொடியப் பேசியிருந்தாலும்
அல்லது தவறு செய்திருந்தாலும், அவர்களை
மன்னியுங்கள். ஏனென்றால் அவர்கள் கனமாக
இல்லை… அவர்கள் உங்கள் சகோதரர்,
சகோதரி… இந்த உலகம் அவர்களைக் கைவிட்டாலும்,
அவர்களை உங்கள் முதுகில் சுமந்து கொள்ளுங்கள்….
ஏனென்றால் அவர்கள் கனமாக இல்லை….
அவர்கள் உங்கள் சகோதரர், சகோதரி…
…,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,….
This picture was captured by US Marine photographer
Joe O’Donnell after the nuclear bombs were dropped
at the end of World War II.
In 2017, Pope Francis ordered distribution of this
picture of boy carrying his dead brother on his back ..
The card would carry the harrowing image of a boy
waiting in line at a crematorium with his dead brother strapped to his back
On the orders of Pope Francis, a picture card captioned
“the fruit of war” was printed and distributed globally.
.
…………………………………………………………………………………………………



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…