ராகங்களின் அடிப்படையில் திரைப்பட பாடல்கள் ….!!!ஓரு இனிமையான அனுபவம் –

……………………………………

………………………………….

விடுமுறை நாட்களில் பதிந்தால் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை
ரசித்து அனுபவிக்க முடியுமென்று காத்திருந்து – இன்று
இந்த பதிவை வெளியிடுகிறேன்.

தமிழ்த் திரையுலகின் துவக்க காலங்களில் பாடல்கள்
முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதங்களாகவே அமைந்திருந்தன….
நல்ல குரல் வளம் மிகுந்த, கர்நாடக இசையில் நன்றாக பாடக்கூடியவர்கள்
மட்டுமே திரையுலகில் பிரகாசித்தனர்…..

1930 முதல் கிட்டத்தட்ட 45-50 வரையிலான காலகட்டங்களில்
இப்படித்தான் இருந்தது….

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக, கர்நாடக ராகங்களை அடிப்படையாக
கொண்டு அமைக்கப்பட்ட கொஞ்சம் வித்தியாசமான பாடல்கள் வெளிவரத் துவங்கின….

இசையமைப்பாளர்களும் அதற்கேற்ப மாறிக்கொண்டே வந்தனர்….
பாபநாசம் சிவனில் துவங்கி, ஜி.ராமநாதன், கே.வி.மஹாதேவன்,
எம்.எஸ்.விஸ்வநாதன் போன்று…..

அடுத்து வந்த இளையராஜா அவர்கள் அற்புதமாக ட்ரெண்டையே
மாற்றினார்…. கர்நாடக இசை, நாட்டுப்புறப்பாடல்களை – அழகிய
சினிமா மெட்டுகளாக மாற்றிக் கொடுத்தார்….

இந்த மாதிரி மாறி மாறி வந்த காலங்களில், எந்தெந்த
சினிமா பாட்டு, எந்தெந்த ராகத்தை அடிப்படையாகக் கொண்டது
என்பதை சிலர் ஆராய்ந்து சொல்லத் துவங்கினர்… இத்தகையோருக்கு
கர்நாடக சங்கீதத்திலும் நல்ல புலமை இருக்க வேண்டும்….
அதே சமயம் நல்ல திரைப்பட பாடல்களை அடையாளம் கண்டு,
அவற்றின் அடிப்படை ராகங்களை கண்டு, சொல்லக் கூடிய
திறன் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்….

இத்தகையோர் நமக்கு கிடைப்பது, அவர்களது நிகழ்ச்சிகளை
காணக்கிடைப்பது – ஒரு ரசனையான அனுபவம்…..

இங்கே அத்தகைய ஒரு நிகழ்வு… பங்கேற்பவர்
கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்ற – திருமதி சாருலதா மணி.

நிதானமாக கேட்டு அனுபவியுங்கள் ….

………………….

.
……………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.