ஒரு வித்தியாசமான பழசும் புதுசும் …

………………………………..

……………………………….

……………………………….

இந்த இன்டர்னெட்டும், யூ-ட்யூபும் நமக்கு கிடைத்த வரம்.
இவை தரும் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை…
எதிர்பார்க்காமல் நிறைய சர்ப்ரைஸ்களைத் தரும்…

எதேச்சையாக ஒரு யூ-ட்யூப் ஷார்ட்ஸ் பார்த்தேன்…
நீங்களும் முதலில் பாருங்களேன்…..

………………

……………..

கேட்டால் வியப்பாக இருக்கும் உங்களுக்கு…
இந்தப் பெண் பாடுவது –
1953-ஆம் ஆண்டு வெளிவந்த தில்-ஏ-நாதான் – என்னும்
பழைய ஹிந்தி திரைப்பட பாடல்.

அந்தக் காலத்திய பிரபலங்களான -குலாம் மொஹம்மது இசையமைத்து,
தலத் மொஹம்மத் பாடிய ஒரு சோகப் பாடல்… மெலடி…!!!
எனக்கு 10-11 வயதில் அறிமுகமான இந்தப் பாடல்
அந்தக்காலத்தில் மிகப்பெரிய ஹிட்…
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதைக்கேட்பது வழக்கம்.

ஆனால், கடைசியாக நான் இந்தப் பாடலை கேட்டு
50 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும்… !!!
நாளடைவில் வேறு வேறு பாடல்கள் லிஸ்டில் வரவே,
நானும் தெற்கே வந்து விடவே –
இது மறந்தே போயிற்று.

திடீரென்று நேற்று யூ-ட்யூப் ஷார்ட்’டில் இந்த சின்னஞ்சிறு பெண்
70 வருடப் பழைய இந்தப்பாடலை பாடுவதை பார்த்ததும்
எனக்கு ஆச்சரியமாகி விட்டது….. இன்னமும் இந்தப் பாட்டை
நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்களா மக்கள்….???? என்று….

…………..
பின்னர், ஏதோ ஒரு ஆர்வம் – வேறு யாராவது இதை
பாடி இருக்கிறார்களா என்று தேடினேன்…
ஆச்சரியம் …… எக்கச்சக்கமான பேர்கள் ….!!!

சாம்பிளுக்கு ஒரு சில வித்தியாசமானவற்றை மட்டும் இங்கே தருகிறேன்…

……………..

இது தலத் மொஹமத் அவர்களே பாடியது – ஷார்ட்ஸில் பாடலில்
சில வரிகள் மட்டும் –

…………………….

அடுத்தது – வித்தியாசமாக, பாகிஸ்தான்-இஸ்லாமாபாத்-ஐ சேர்ந்த
கஜல் சிங்கர் – Naseem Ali Siddiqui என்பவர்….

……

……………………..

கீழே இருப்பதை நீங்கள் மிஸ் பண்ணவே கூடாது …..


ஒரு நல்ல பாடலை வைத்து, எப்படியெல்லாம் சித்ரவதை பண்ணலாம்
என்பதற்கு ஒரு ஃபர்ஸ்ட் க்ளாஸ் உதாரணம் –

டிவி சிங்கர் போட்டியில் கலந்துகொண்டு – தனது “திறமை”யால் –
ஜட்ஜுகளையே கதற விட்ட ஒரு இளைஞன் – ஜட்ஜுகள் எப்படி கண்ணீர் விட்டு அழுகிறார்கள் பாருங்கள் …..………….😊😊😊

…………………….

இன்னும் நிறைய பார்த்தேன்…
ஆனால் – சாம்பிள்…..போதுமே… !!!

.
………………………………………………………………………………………………………………………..……

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.