ஹே ராம் ……

…………………………..

……………………………

ஹே ராம்,

மக்கள் உன்னை பாலகனாக பார்க்க ஆசைப்பட்டு,
அயோத்தியில் அமர்த்துகிறார்கள்….

உன்னை எப்படி அழைத்தாலென்ன …?

எந்த வடிவில் பார்த்தால் என்ன …?

எங்கே அமர்த்தினால் தான் என்ன ….?

நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்களில் –
என்றும், எப்போதும் – நீ சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறாய்….!!!

மக்கள் இன்று உன்னை விசேஷமாக கொண்டாடும் நாள்….

உன்னிடம் ஒரு பிரார்த்தனை …….

……….

இந்த நாட்டில் – மதத்தின் பெயராலும்,
ஜாதியின் பெயராலும்,
இடத்தின் பெயராலும் நடந்த மோதல்கள் /கலவரங்கள்,
சிந்திய ரத்தம்,
பலி கொடுத்த உயிர்கள்- போதும்…. போதும்.

இனியும் இங்கே எந்தவித மோதல்களுக்கும் இடம் கொடுக்காமல் –
முற்றாக அவற்றை தொலைந்து போகச்செய்….

மக்களைப் பிரிக்கும் / பாகுபடுத்தும் செயலை –
அது எந்த வடிவத்தில் வந்தாலும் அடக்கு.

இந்த மண்ணின், மக்களின், மனங்களை விசாலமாக்கி –

அவற்றை அன்பால், இரக்கத்தால், கருணையால், நட்பால், உறவால்,
பாசப் பிணைப்பால் – இணைத்து விடு.

இங்கே மக்கள் அனைவரும் அன்பால், உறவால், நட்பால்,
கட்டுண்டு – அமைதியாக, ஆனந்தமாக வாழ அருள் செய்….

பாரத நாடு உலகின் மிகப்பெரிய வல்லரசு என்று கூறப்படுவதை விட,

பாரத மக்கள் – பண்பில்,
மனித நேயத்தில் –
ஒன்றுபட்டு வாழ்வதில் –
சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் –
என்று உலகம் போற்ற வாழ்வதே எமக்கு சிறப்பு….

எம் வேண்டுகோளை, பிரார்த்தனையை –
கருணை கூர்ந்து ஏற்று,

எங்களை மேம்பட்ட மனிதர்களாக்கு …….
அனைத்தையும் படைத்த எம் இறைவா….!!!

.
…………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஹே ராம் ……

  1. sparklemindss's avatar sparklemindss சொல்கிறார்:

    Jai Shree Ram!

  2. Arul's avatar Arul சொல்கிறார்:

    நன்றாக சொன்னீர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.