………………………………………….

………………………………………….
மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் ஒரு கேள்வி-பதில் பதிவு –
………………………………
…. திரையுலகில், அதனாலே தான் பூஜைபோடாமல் ஒரு படம் ஆரம்பிக்க
மாட்டார்கள். எடுத்த உடனே முதல் காட்சி “ஆண்டவன் காப்பாத்துவான்”
இந்த மாதிரி எல்லாம் வார்த்தை வரும்.
இந்த பகுத்தறிவாளர்கள் எல்லாம் படம் எடுப்பாங்க. அவங்க படத்துல
யெல்லாம் ஆண்டவன்னு சொன்னா தப்பாச்சே.. ‘வெற்றி! வெற்றி!” ன்னு
சொல்வான் ஒருத்தன். எடுத்த உடனே அந்த மாதிரி ஒரு காட்சி எடுத்துப்பாங்க..! ஏன்னா அவங்க வெளியே காண்பித்துக் கொள்ள முடியாது! அதனால இப்படி எடுத்துப்பாங்க!
… இதுல கெட்டதைச் சொல்லக் கூடாது என்பதற்கு உதாரணம் சொல்றேன்.
பீம்சிங் பெரிய டைரக்டர். “செந்தாமரை” ன்னு ஒரு படம் நின்னு, நின்னு,
நின்னே போச்சு அவருக்கு. கிட்டத்தட்ட ஏழு வருஷம் எடுத்தாங்க.
அவர் சொல்லலை எனக்கு. அவரோட அசிஸ்டன்ட் டைரக்டர் சடகோபன்,
திருமலை மகாலிங்கம்னு ரெண்டு பேர்… அவங்க சொன்னாங்க எனக்கு…!
கே ஆர் ராமசாமி ஹீரோ அதுல…!
அவருக்கு ஒரு பாட்டு எழுதி இருக்காங்க..!
‘பாடமாட்டேன்! இனி பாடமாட்டேன்!”
இவங்க எல்லாம் சொன்னாங்களாம் ‘இது வேண்டாம். இந்தப் பாட்டு பல்லவி வேண்டாம். மாற்றுவோம்! இது என்ன நன்னாவே இல்லை! கெடுதல் இது..! வேண்டாம்’ன்னு சொல்லி இருக்காங்க.
அவர் என்ன சொல்லியிருக்கார், “அதெல்லாம் இல்லை…! நான் பகுத்தறிவுவாதி.. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கைக்கு கிடையாது.
நான் பாடறேன்! இப்படியே இருக்கட்டும் பல்லவி…!
‘பாடமாட்டேன், இனி படமாட்டேன்ன்னு பாடினார்…!
அதுதான் அவர் பாடின கடைசிப் பாட்டாம் சினிமாவில்…! சொன்னாங்க…!
முன்னாடி அவரு கேட்கலை. இதனால்தான் அது நடந்ததா? இல்லைன்னா
அவர் சினிமால அப்புறம் நிறைய பாடியிருக்க மாட்டாரா என்று கேட்கலாம்.
ஆனால் இவங்க ஏற்கெனவே எச்சரிக்கை பண்ணதுக்கும் இதுக்கும்
சரியா இருந்தது.
……………………
செந்தாமாரை’யில் கே.ஆர்.ராமசாமி பாடிய அந்த கடைசி பாடல் ….கீழே-
(இது 1962-ல் வெளிவந்தது… இதன் பிறகு கே.ஆர்.ராமசாமி பாடவே இல்லை…
9 வருடங்களுக்குப் பிறகு கேன்சர் வந்து 57 வயதிலேயே இறந்து விட்டார்…)
………….
………………………………………
தங்கவேலு நடிகர். அவச்சொல் பேசவே கூடாதென்பதில் அவர் ரொம்ப
நேர்மை… ஒரு சினிமால எல்லோரும் என்னைத் திட்டிண்டிருப்பாங்க…
ஒரு அதிகப்ரசங்கி கேரக்டர் அப்படீங்கறதால… இவருக்கு ஒரு டயலாக்
“நீ உருப்படடமப் போயிடுவ…! நீ நாசமாய் போயிடுவ…” என்றெல்லாம்.
இவர் டயலாக் எழுதியவரைக் கூப்பிட்டார்.
“இது எழுதினாதான் படம் ஓடுமா…?நான் இதெல்லாம் சொல்ல மாட்டேன்
எந்த நேரத்துலயும்.. எதையும்… எவன் சொல்றது…! என்ன அடுக்குமோன்னு..! அதெல்லாம் சொல்லக்கூடாது…! அதெல்லாம் மாற்றுங்கள்.
இப்படித்தான் திட்டணுமா ஒருத்தனை? ஏதோ மடையன், முட்டாள் என்று
திட்டச் சொல்லுங்க! சொல்லிட்டுப் போறேன். உருப்பட மாட்டே,
நாசமா போ’ ன்னு இதெல்லாம் சொல்ல மாட்டேன்! எந்த நேரத்துல எவன் சொல் பலிக்கும் என்று சொல்ல முடியாது…” அப்படீன்னு பிடிவாதம் பிடிச்சாரு அவரு.
அப்போ அவர் ஒரு நிகழ்ச்சி சொன்னார்.
என்.எஸ்.கே பெரிய தர்மாத்மான்னு ஒரு பெயர் உண்டு.
இவர் அப்போ என் எஸ் கேயோட ஒரு கோஷ்டி மாதிரி நடித்துக் கொண்டிருந்தார். தங்கவேலுக்கு அப்போ பணக்கஷ்டம். என்.எஸ்.கே. கிட்ட போய்ப் பணம் கேட்டாராம்…..! அவர் தன் பாக்கெட்டில் கைவிட்டு
“இந்தா! என் கிட்ட இருக்கற லக்ஷ்மியை உன் கிட்டக் கொடுத்துட்டேன்..!
வச்சுக்கோ,,,,! – அப்படீன்னாராம்.
இவருக்கு ‘திக்கு’ ன்னுத்தாம். ‘என்ன இந்த மாதிரி சொல்றார்?
லக்ஷ்மியைக் கொடுத்தேன்னு சொல்லலாமா? அவர் சொன்னார்,
‘அன்றையிலிருந்து அவருக்கு மார்க்கெட் இறங்கிற்று; எனக்கு மேலே
ஏறிகிட்டே போச்சு….!’ இந்த மாதிரியெல்லாம் பேசவே கூடாது…!
அப்படிங்கற நம்பிக்கை ரொம்பப் பேர்க்கு இருக்கு. இவங்க எல்லாம் பிரபலமானவர்கள் என்பதற்காக இந்த உதாரணங்களை சொன்னேன்.
நிஜ வாழ்க்கையிலேயே இந்த மாதிரி நிறைய உண்டு.
.
………………………………………………………………………………………………………..…….



கவிஞர் வாலி தன்னுடைய தன் வரலாற்று நூலில் இதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார். எம்.கே.தியாகராஜபாகவதர், தன்னுடைய படத்தில் அன்று, ‘நான் இனி கைதி’ என்று வசனம் பேசி, அன்றிரவே சிறைக்குப் போகவேண்டி வந்தது என்று சொல்லியிருக்கிறார். இன்னும் பலவும்.
நெகடிவ், எதிர்மறையாகப் பேசுவது எப்போதுமே நெகடிவ் எனர்ஜியை ஈர்க்கும்.
நம்ம டி.எம்.எஸ். அவர்கள் ‘நானொரு ராசியில்லா ராஜா’ என்ற பாடலை ஒருதலை இராகம் படத்தில் பாடிய பிறகும், இன்னொரு பாட்டான ‘என் கதை முடியும் நேரம் இது என்பதைச் சொல்லும் ராகம் இது’ என்பதைப் பாடியதன் பின்னும் தன் திரையுலக பின்னணிப் பாடகர் என்ற வாழ்க்கையே முடிவுக்கு வந்தது என்று சொல்லியிருக்கிறார். (அதனால் டி.ராஜேந்தர் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டியிருக்கிறார்).