……………………………………………..

…………………………………………….
கடந்த சில ஆண்டுகளாகவே பொதுவாக – தொலைக்காட்சிகளில்
நடைபெறும் அரசியல் விவாதங்கள் மகா கேவலமாக, அருவருக்கத்தக்கதாகவே இருக்கின்றன.
மாநில அல்லது மத்திய ஆளும் கட்சியை ஆதரித்தே விவாதங்களை
கொண்டு செல்வது நெறியாளர்களின் “ஊடக தர்ம”மாக இருந்து
வந்திருக்கின்றன…( சம்பளம் கொடுக்கும் முதலாளிகள் சொல்வதைத்
தானே அவர்கள் செய்ய முடியும்….???).
அபூர்வமாக – டிசம்பர் 31-ந்தேதியன்று நடந்த ஒரு விவாதம் இந்த வழக்கமான “நெறி”முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மிகச்சிறப்பாக இருந்தது.
முற்றிலும் பத்திரிகையாளர்களே கலந்து கொண்ட விவாதம்.
நெறியாளர் தமிழினியன் நேர்மையாக, அனைவருக்கும் சமமாக வாய்ப்பு கொடுத்து, விவாதத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார்….
நிகழ்கால அரசியலில் ஆர்வமுள்ள வாசக நண்பர்கள், அவசியம்
காண வேண்டிய ஒரு நிகழ்ச்சி…. கீழே –
( நீளம் கொஞ்சம் அதிகம் (48 நிமிடங்கள் )…. நேரம் கிடைக்கவில்லையென்றால்
இரண்டு தவணைகளில் பார்க்கலாம்….)
………………………………………………



கா.மை. சார்… ஜப்பானிய குழந்தை education எப்படி இருக்கு என்பதை காணொளிகள்ல பாருங்க. அவங்க வகுப்பைச் சுத்தம் செய்வது, உணவு உண்ணும் முறை என்று பல்வேறு நடவடிக்கைகளில் அவர்களுக்கு எப்படிப்பட்ட அறிவு போதிக்கப்படுகிறது, எப்படிப்பட்ட மாடல் குழந்தைகளாக அவர்கள் வளருகிறார்கள் என்று. சமீபத்தில்கூடப் படித்தேன். ஒருவர் தவறவிட்ட பொருள் அதே இடத்தில் அப்படியே இருக்கும் என்று. அவர்கள் நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்குமுறை. சுனாமி வந்தால், அல்லது கட்டிடத்தில் மாட்டிக்கொண்டால், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்ற instructions உண்டோ அதனை அப்படியே செய்யும் முறை (சுனாமி வந்தபோது எடுத்த காணொளியில் பார்த்தேன்).
ஒழுங்கீனமாக எப்படி இருப்பது என்பதை, உண்மையிலேயே இந்தியாவிடமிருந்துதான் உலகம் கற்றுக்கொள்ளவேண்டும் (அதற்காக நம்மைவிடக் கீழ் நிலையில் உள்ள சாதாரண தேசங்களை உதாரணமாகக் கூறக்கூடாது). விமானம் ஏர்போர்ட்டை அடையப்போகிறது என்றாலே உடனே எழுந்து நின்று, லக்கேஜுகளை எடுத்து என்று ஒரே ஒழுங்கீனம். ஆம்புலன்ஸ் போவதற்குள் அதற்குப் பின்னாலேயே போகும் பைக்/கார் ரௌடிகள், கொஞ்சம்கூட சாலை விதிகளைப் பின்பற்றுவதில்லை (for that matter எந்த rulesஐயும்).