………………………………………………………

………………………………………………………..
பொதுவாக பாஜக-வுக்கு ஆதரவானது என்று கருதப்படும்
தந்தி தொலைக்காட்சியில் நேற்று மாலை ஒரு பரபரப்பான காணொளி
வெளியாகி இருக்கிறது.
அதன் தலைப்பு –
” மோடி– ஆர்.எஸ்.எஸ். மோதல்,
அதிகாரத்திற்கான, சாதிகளின் மோதலா? “
இது அவர்களது முந்தைய தின மாலை ஏட்டில் வெளியான –
” ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கே சவால் விடும் மோடி-அமீத் ஷா கூட்டணி “
என்கிற தலைப்பிலான தலையங்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுகிறது.
இந்த விஷயத்திற்கு தந்தி டிவி கொடுத்திருக்கும் முக்கியத்துவம்,
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இது பெரிய அளவில் பேசப்படும்
பொருளாக மாறும் என்று தெரிகிறது.
இந்த சமயத்தில் இத்தகைய ஒரு செய்தி வெளியாகியிருப்பது ஏன்…?
இந்த செய்தியின் பின்னணியில் இருப்பது யார்….?
…………………………………………………………..



//பொதுவாக பாஜக-வுக்கு ஆதரவானது என்று கருதப்படும் தந்தி// – யாரு இப்படிக் கருதறாங்க? பெரிய நகைச்சுவையா இருக்கு. தந்தி எப்போதுமே திமுக ஜால்ரா. அதனாலத்தான் திமுகவின் கட்டளைக்கிணங்க ரங்கராஜ் பாண்டேவைக் கழற்றிவிட்டது.
//ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கே சவால் விடும் மோடி-அமீத் ஷா கூட்டணி// – இதில் அர்த்தம் எதுவும் இல்லை. புதிய தலைவர்கள் முளைக்கும்போது பழையவர்களைக் களைவது இயல்பாக நடக்கக்கூடியதுதான். (ராஜேந்திர சோழன், தந்தை ஆசைப்பட்டுக் கட்டிய பெரியகோவில் இருந்த தஞ்சையை விட்டுவிட்டு, இத்தனைக்கும் தஞ்சை கோவில் குடமுழுக்கு ஆகி இரு வருடங்கள் கூட ஆகவில்லை, கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாக ஆக்கி அங்கேயே ஒரு ‘பெரியகோயிலை’ நிர்மாணம் செய்ததுபோல). தேர்தல் வேலைகளை, ஆர்கனைசேஷன் வேலைகளை ஆர்.எஸ்.எஸ் பார்த்துக்கொண்டாலும், ஆட்சியை நடத்துவது மோடி மற்றும் அமித்ஷா. அவர்கள் தங்கள் கையை மீறி ஆர்.எஸ்.எஸ் போகாமல் பார்த்துக்கொள்வதும், அதே சமயம் ஆர்.எஸ்.எஸை மீறிப் போகாமலும் balancedஆகத்தான் நடத்துகிறார்கள்.
இந்தக் காணொளியும் திமுகவைத் திருப்திப்படுத்த தந்தி செய்த வேலைதான்.
சமீபத்தில் ஒரு அனலிஸ்ட் சொன்னார், வாஜ்பாய், குஜராத் பிரதமர் மோடியைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள் ஆர்.எஸ்.எஸுக்குப் பிடிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயைக் கவிழ்த்துவிட்டது, அதனால்தான் வாஜ்பாய் மீண்டும் பிரதமராக ஆகமுடியவில்லை என்றார். கருத்துச் சொல்ல காசா பணமா? தங்கள் கருத்தைத் திணிக்கவேண்டியதுதானே.
பிஜேபி மற்றும் அதன் சகோதர இயக்கமான ஆர்எஸ்எஸ் ஒன்றும் திராவிட மாடல் சொம்பு தூக்கிகளின் கழகம் அல்ல. (திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல தந்தைக்குப் பின் தனயன் என்று வாரிசு அரசியல் நடத்த என்ற மூத்தவரின் முதுமொழியை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவும்). நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் அமைந்த மூன்று மாநில பிஜேபி ஆட்சியில் முதல்வர்கள் தேர்வு என்பது நிச்சயம் தந்தி டிவியில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் அல்ல. வரும் 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்குப் பிறகும் நீண்ட கால அடிப்படையில் அடுத்தடுத்த தலைவர்களை உருவாக்குவது என்ற நுண் அரசியலின் அடிப்படையிலேயே தற்போதைய முதல்வர்களின் தேர்வு. அதே நேரம் திராவிட மாடல் சொம்பு தூக்கிகளுக்கு பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்தான எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் புழங்க விடுவதற்கு இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் செய்தியாளர்களின் தேவை அடிப்படையாக உள்ளது. அதன் அடிப்படையில் அமைந்தது தான் மேற்கூறிய தந்தி டிவி செய்தி. இந்த செய்தி வெளியான அதே நேரத்தில் தான் வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு முடிவும் வெளியானது ஆனால் அது குறித்து இங்குள்ள செய்தியாளர்களும் செய்தி நிறுவனங்களும் எதுவும் பேச மாட்டார்கள். பொன்முடி விவகாரத்தில் இவர்கள் காக்கும் கள்ள மவுனம் இவர்கள் எப்படிப்பட்ட செய்தியாளர்கள் என்பதை நாட்டிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். பொன்முடி விவகாரத்தில் திராவிட மாடல் சொம்பு தூக்கிகளின் தோழமை கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்கு ஒரு உதாரணம் திருமா அவர்களின் பேட்டி. பொன்முடி விவகாரத்திலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும் நீதிமன்றங்களும் தற்போது சனாதன மயமாகி வருகின்றதோ என்று எண்ணைத் தோன்றும் வகையிலேயே நீதிமன்றங்களின் செயல்பாடு அமைந்துள்ளது என்ற சீர்மிகு கருத்தை திருமா அவர்கள் வெளிப்படுத்திய போது எத்தனை ஊடகங்கள் அதனை விவாதத்திற்கு உள்ளாக்கின.. இது போன்ற கருத்துக்களை உருவாக்கி பரப்புவதன் மூலம் பிஜேபிக்கு எதிரான மனநிலையை உருவாக்க முடியும் என்று நம்பும் அளவிற்கு தான் நமது திராவிட மாடல் சொம்பு தூக்கிகளும் அவர்களுக்கு துதிபாடும் ஊடகங்களும் உள்ளன என்பதே தமிழக அரசியலில் சாபக்கேடு.
போன தேர்தலுக்கு பார்த்த அதே புளித்து போன தலைப்பு…
கும்மிடிபூண்டிய தாண்டினா தந்தி டிவி எத்தன பேரு பாப்பாங்க. பாஜகவை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் 1 தொகுதியில் வென்றாலும் கவலைப்பட மாட்டார்கள். முட்டாள்கள் நிறைந்த மாநிலம் நம்ம மாநிலம் 😔
காசு வாங்கிக்கொண்டு வெட்கம் மானம் சூடு சுரணையை விற்ற ஈரோடு கிழக்கு, திருமங்கலம், கல்விக்கண் கொடுத்த நேர்மையின் சிகரமான காமராஜரைத் தோற்கடித்த விருதுநகர் வாக்காளர்களை மனதில் வைத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாள்கள் என்று சொல்லிட்டீங்களே.
ஆனாலும் தமிழகத்தில் ஊழலுக்குக் காரணமானவர்கள் காசு வாங்கிக்கொண்டு மானத்தை விற்கும் வாக்காளர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை