ஸ்டாலின் : பரவாயில்லையே… என் போட்டோ போட்ட பேட்ஜை அணிஞ்சிருக்கீங்களே…?..!!!😊 -வானதி : அப்பவாவது ‘எல்லா’ மகளிருக்கும்ரூ.1,000 கிடைக்குமான்னு பாக்குறேன்…😊😊😊

……………………………………………

……………………………………………

ஜூனியர் விகடன் இதழில், வாரந்தோறும் புகைப்படம் ஒன்றை பிரசுரித்து, வாசகர்களிடமிருந்து கமென்ட்’களை வரவேற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கமென்ட்’களுக்கு 200 ரூபாய் பரிசு கொடுக்கிறார்கள். இந்த வாரம் வெளியான புகைப்படமும், அதற்கு வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கமெண்ட்’சுகளும் நிஜமாகவே  சுவாரஸ்யமாக இருக்கின்றன – கீழே –

………………………………………………………………………..

Manicka Vasagam

வானதி: செந்தில் பாலாஜியை நல்லாப் பார்த்துக்கிறீங்கபோல!

மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.சுரேஷை நீங்கல்லாம் பார்த்துக்கறதைவிடவா..?

……………………………………………………………………………….

Saravanan M

வானதி: மக்கள் துயரத்தில் பங்கேற்பதுதான் அரசியல் பணி… வசனம் பேசுவது அல்ல!

ஸ்டாலின்: அண்ணாமலை மேல உங்களுக்கு இவ்வளவு கோபமா?

………………………………………………………………………

Raja K Nlc

ஸ்டாலின்: பரவாயில்லையே… என் போட்டோ போட்ட பேட்ஜை அணிஞ்சிருக்கீங்களே?!

வானதி: அப்பவாவது `எல்லா’ மகளிருக்கும் ரூ.1,000 கிடைக்குமான்னு பாக்குறேன்.

………………………………………………………………

Sathia Moorthi

ஸ்டாலின்: என்னங்க… ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அத்வானிக்கே அழைப்பில்லையாமே!?

வானதி: அத்வானியா… யாருங்க அது?

……………………………………………………………….

VKarthik

வானதி: சந்தர்ப்ப அரசியல்தான் தி.மு.க!

ஸ்டாலின்: சந்தர்ப்பமே இல்லைன்னாலும் அரசியல் பண்றதுதானே பா.ஜ.க?!

…………………………………………………………………………..

Saravanan M

வானதி: `டோக்கன்’ என்ற பெயரில் ஏழை மக்களை அலைக்கழிக்காதீர்கள்.

ஸ்டாலின்: எது… உங்க டாடி போடுறேன்னு சொன்ன 15 லட்சம் ரூபாய் மாதிரி பேங்க்ல போடச் சொல்றீங்களா..?

……………………………………………………………..

TWITTER

@LAKSHMANAN_KL

வானதி: பிரதமர் ஆகுறதுக்கான தகுதியை வளர்த்துக்கிட்டிருக்கீங்களா… எப்படி..?

ஸ்டாலின்: டெலிபிராம்ப்டர் பார்த்துப் பேசப் பழகிட்டிருக்கேன்..!

…………………………………………………………..

@JaNeHANUSHKA

ஸ்டாலின்: தென் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் மழை பாதிப்பை, பேரிடர்னு அறிவிக்கச் சொல்லுங்களேன் ஒன்றிய அரசை..!

வானதி: `மத்திய அரசு’ன்னு சொல்லுங்க… சொல்லச் சொல்றோம்!

……………………………………………………………….

@Vkarthik_puthur

வானதி: கூட்டணியைக் கட்டுறதுல இருக்கிற அக்கறையைக் கொஞ்சம் மக்கள்மீதும் காட்டுங்க சார்!

ஸ்டாலின்: எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்யுறதுல காட்டுற அக்கறையை, கொஞ்சம் மக்கள்மீதும் காட்டச் சொல்லி நீங்களும் `ஜி’கிட்ட சொல்லுங்க மேடம்!

……………………………………………………………………

@LAKSHMANAN_KL

வானதி: ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றிக்காக நான் உதவணுமா… எப்படி..?

ஸ்டாலின்: தம்பி அண்ணாமலையை இந்தியா முழுக்க பா.ஜ.க-வுக்காக பிரசாரம் பண்ணச் சொல்லுங்க, போதும்..!

.

……………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.