……………………….

…………………………
“ரூ.62 கோடியில் கலைஞர் அரங்கம் கட்டியது சினிமா தியேட்டராக மாற்றுவதற்கா…..?”
பொதுமக்கள் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட கலைஞர் அரங்கத்தை,
சினிமா தியேட்டர் நடத்த தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டதாக
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு எதிராகச் சர்ச்சை வெடித்திருக்கிறது…!
தஞ்சாவூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சுமார்
ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதிய பேருந்து நிலையத்துக்குப் பின்புறத்திலுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், 62 கோடி ரூபாய் மதிப்பில் கான்ஃபரன்ஸ் ஹால் கட்டப்பட்டது. ‘முத்தமிழறிஞர் கலைஞர்
மு.கருணாநிதி அரங்கம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட இந்தக் கட்டடம்,
‘குடும்ப நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வாடகைக்கு விடப்படும்’ என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கலைஞர் அரங்கத்தை சினிமா தியேட்டர் உரிமையாளர் ஒருவருக்கு, சினிமா தியேட்டர் நடத்துவதற்காக ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்குக் கொடுத்திருக்கிறது மாநகராட்சி
நிர்வாகம். இதையடுத்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இது குறித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரன், “பொதுமக்கள் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட கருணாநிதி அரங்கத்தை, கடந்த ஜூலை மாதம்தான் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த
அரங்கத்தில் நடைபெற்ற ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் கலந்துகொண்டார். அதன் பிறகு தனிநபர்கள், திருமணம்
உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கேட்டு மாநகராட்சி
நிர்வாகத்தைப் பலரும் அணுகியபோது, பல்வேறு காரணங்களைச்
சொல்லி அனுமதி மறுக்கப் பட்டது. ஆனால், ‘வாடகைக்குக் கேட்டு
யாரும் வரவில்லை’ என்று சொல்வதற்காகவே திட்டமிட்டு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்திருக்கிறது என்பது இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது.
ஏனெனில், இப்போது கருணாநிதி அரங்கத்தை, தஞ்சாவூரில் பிரபல
சினிமா தியேட்டர் உரிமையாளர் ஒருவருக்கு சினிமா தியேட்டர்
நடத்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்குக் கொடுத்திருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். இதற்காக நடத்தப்பட்ட டெண்டரில் வெளிப்படைத் தன்மை இல்லை. தி.மு.க மேயர் சண்.இராமநாதன் தனக்கு வேண்டியவர்கள் பயன்பெறும் வகையில் கருணாநிதி அரங்கத்தை, குறைந்த வாடகைக்குக் கொடுத்திருக்கிறார். இதற்கு மாமன்றக் கூட்டத்தில் ஆலோசனை செய்யவில்லை; தீர்மானமும் நிறைவேற்றவில்லை.
மொத்தமுள்ள ஆறு ஏக்கர் இடத்தில், ஒரு ஏக்கர் அளவுக்கு இந்தக் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. அண்டர் கிரவுண்ட் பார்க்கிங், அரங்கத்தைச் சுற்றிலும் போதுமான இட வசதி, ஒரே நேரத்தில் 1,500 பேர் அமரக்கூடிய வசதி எனப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திட்டமிட்டுக் கட்டப்பட்ட அரங்கம் இது.
இதை எப்படித் தனிநபருக்குத் தாரை வார்க்கலாம்… இப்போது அந்த அரங்கத்தில் ஒரு பெரிய தியேட்டர், இரண்டு மினி தியேட்டர்கள் என
மூன்று தியேட்டர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஹோட்டல் ஆகியவை வரவிருக்கின்றன. இதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
ரூ.62 கோடியில் கருணாநிதி அரங்கம் கட்டியது, சினிமா தியேட்டராக மாற்றுவதற்கா… இந்த அனுமதியைத் திரும்பப் பெறாவிட்டால்
மாநகராட்சிக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்”
என்றார் ஆவேசமாக.
பொதுமக்களும்கூட, “தஞ்சாவூரில் அரசு சார்பில் பெரிய அளவில்
நிகழ்ச்சி நடத்துவதற்கான இடவசதி இல்லை. அது போன்ற சமயங்களில் தனியார் திருமண மண்டபத்தைத்தான் வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் எதிர்காலத் திட்டமிடலுடன் அரசு
கட்டிய அரங்கத்தையும், சினிமா தியேட்டர் நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருப்பதை ஏற்க முடியாது” என்றே சொல்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் மகேஷ்வரியிடம்
கேட்டபோது, “விதிமுறைகளுடன் ஒப்பந்த அடிப்படையில் மாத
வாடகைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், சினிமா தியேட்டர்
நடத்த வேண்டுமென்றால் மாநகராட்சியிடம் என்.ஓ.சி வாங்க வேண்டும்.
நான் இதுவரை அப்படியான எந்த அனுமதியும் கொடுக்கவில்லை.
எனவே, அதில் என்னென்ன வரவிருக்கின்றன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை” என்றார்.
குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மாநகராட்சியின் தி.மு.க மேயர் சண்.இராமநாதனிடம் பேசியபோது, “மூன்று முறை டெண்டர் வைத்து, அதிகபட்சமாக 25 லட்ச ரூபாய் மாத வாடகை தருவதாகச் சொன்ன நபரிடம்தான் கலைஞர் மு.கருணாநிதி அரங்கத்தை ஒப்படைத்திருக்கிறோம். இதற்காக அட்வான்ஸ் 3 கோடி ரூபாய், ஒரு வருட வாடகை 3 கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய் டெபாசிட் வசூலிக்கப்பட்டி ருக்கிறது.
மாநகராட்சிக்கு வரக்கூடிய இந்த வருமானமும் பொதுமக்களுக்குத் தான் பயன்படப்போகிறது. எனவே, ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதில், உள்நோக்கமோ, முறைகேடோ எதுவும் இல்லை. அதில் கூட்ட அரங்கம், மல்டி காம்ப்ளக்ஸ் வரவிருக்கின்றன. சினிமா தியேட்டர் நடத்துவதற்கும் அனுமதி கேட்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் நடத்தும் வகையில் டெண்டர் எடுத்தவருக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம். தனியாரிடம்
ஒப்படைத்தாலும் கலைஞர் மு.கருணாநிதி பெயரில்தான் அரங்கம் செயல்படும்’’ என்றார். ( அப்படி போடுங்க ….அது தானே முக்கியம் …!!! )
(நன்றி – விகடன் தளம் …)
.
…………………………………………….



காவிரி மைந்தன் என்பதால் காவிரி டெல்டாவில் நடந்த ஊழல் உங்கள் கண்ணுக்குப் பட்டிருக்கிறது. யாரோ தனியார் (இவர்களெல்லாம் யார் என்று யாருமே கண்டுபிடிக்க முடியாது. ரொம்ப ஆராய்ந்து பார்த்து யாருடைய பினாமி என்று கண்டுபிடிப்பதற்குள், பல மடங்கு ஊழல் புகார்கள் குவிந்துவிடும்) கார் ரேஸ் நடத்துவதற்காக அரசுப் பணம் எத்தனையோ கோடிகள் (200-400) செலவழிக்கத் திட்டமிட்டு, அதில் 30 கோடியும் செலவழித்து (??) மழை வந்ததால் ரேஸ் நடத்த இயலாமல் போனது. அரசுக்கு வேண்டியவர்கள் என்றால் நெடுஞ்சாலையிலும் ரேஸ் நடத்தலாம், 500 சதுர அடி இடத்தில் நடக்கும் கேளிக்கைக்கு, 50000 பேர்களுக்கு டிக்கெட் கொடுத்து சம்பாதிக்கலாம். அரசுக்கு வேண்டாதவர்கள் என்றால், சொந்த வீடாக இருந்தாலும் அது நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தம், புறம்போக்கு என்றெல்லாம் வழக்கு வரும். ஊழல்களுக்கு எதிராக மக்கள் போராடவில்லை என்றால், ஊழல்களின் அளவு பெரிதாகும், இன்னமும் தைரியமாகவே ஊழல்கள் நடைபெறும்.