” எவ்ளோ பெரிய கேவலம்” ! அரசை கேள்வி கேட்டால் வசை பாடுவதா ….?கொந்தளிக்கிறார் – Journalist Mani

…………………………………………

……………………………………..

ஏற்பட்டிருக்கும் அவலத்தை சுட்டிக்காட்டி பேசினால், தனிப்பட வசை பாடுகிறார்கள் – என்னவொரு அயோக்கியத்தனம் …. வாய் கிழியப்பேசின அமைச்சர்களை கேள்வி கேட்கக்கூடாதா …? என்று கொந்தளிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள். மணியைப் போன்ற சீனியர் விமரிசகர்களுக்கே இந்த கதி என்றால் தமிழகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது ….???

………………………………………….

.

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ” எவ்ளோ பெரிய கேவலம்” ! அரசை கேள்வி கேட்டால் வசை பாடுவதா ….?கொந்தளிக்கிறார் – Journalist Mani

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ‘மூமூத்த விமர்சகராம்’ இந்த மணி. இவரது பேட்டிக்கு அந்த யூடியூபில் கீழே இருக்கும் இரண்டு கமெண்ட்ஸ்களை நான் ரசித்தேன். This shows Mani’s credibility.

    //மணி அண்ணாச்சி இன்றில் இருந்தாவது உண்மையை தொடரவும்//

    //Gpay is not working due to chennaifloods..! understand..! next week all is ok..ok..//

    இவர் சமூகத்தின் கண்ணாடியாம்…. பத்து ஆண்டுகள் திமுகவிற்காகப் பேசினாராம். இவர் வூட்டுல தண்ணி வந்தவுடன் சமூகத்திற்கான கோபம் பொய்ங்குகிறது போல. தன் தனிப்பட்ட ஆசைகளை, பொதுமக்களின் விருப்பம், இதுதான் நடக்கப்போகிறது என்றெல்லாம் பரப்புரை செய்துகொண்டிருந்த மணிக்கு தன் வீட்டில் வெள்ளம் வந்தவுடன், ATM வேலை செய்யாததால், திமுக மீது கோபத்தைக் காண்பிக்கிறார்.

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கோட்டைவிட்ட அரசு! Leadership தோல்வி! | பாயிண்ட்டுகளை அடுக்கிய பத்திரிகையாளர்கள்| Chennai Floods |DMK

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      கா.மை. சார்… என்னுடைய கருத்து ஒன்றேதான். இந்த ஜால்ரா கோஷ்டிகள் தங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்து, தங்களுக்கு இழப்புகள் ஏற்பட்ட பின்னர்தான், மக்களுக்காகப் பேசுவதுபோல அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள். அப்படிக் கொந்தளிக்கும்போதும், ஜெயலலிதா இரவு தூங்கச் சென்றதைக் குற்றம் போலவே இப்போதும் சொல்லிக்காட்டுகின்றனர், ஏதோ இவர்களெல்லாம் தூங்காமல் மக்களுக்கு உழைத்த மாதிரி.

      அரசும் அமைச்சர்களும் 98 சதம் வேலை முடிவடைந்துவிட்டது என்று சொன்ன காணொளிகள் இருக்கின்றன (ஸ்டாலின், நேரு, பிரியா). அண்ணாமலை வெள்ளை அறிக்கை கேட்டதும் 40 சதம் வேலைகூட இன்னும் முடிக்கவில்லை என்று இவர்களே சொல்லுகின்றனர் (அதற்குக் காரணம் வேறு. அதுபற்றி பிறகு எழுதுகிறேன்)

      இன்றைக்கு தப்பிப்பதற்கு என்னவெல்லாம் உருட்டுகளைச் சொல்லமுடியுமோ அதையெல்லாம் சொல்கின்றனர். உதாரணமா, மேயர் பிரியா, கடல் நீர் உயரமானதால்தான் சென்னைக்குள் நீர் அதிகமாகிவிட்டது, இல்லாவிட்டால் கடலுக்குள் அனைத்து நீரும் சென்றிருக்கும். அதனால் கடலை ஆழப்படுத்தப்போகிறோம் என்றார் (இதற்கும் காணொளி இருக்கிறது. கடலை ஆழப்படுத்தப் போகிறோம் என்றாலே எல்லோருக்கும் டி.ஆர்.பாலு நினைவுக்கு வரணுமே).

      இப்போ மக்களின் கோபம் வெளிப்படையாகத் தெரிந்த பிறகு, மேயர் பிரியாவை சீனுக்குள்ளேயே வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்களாம். அதனால் அவருக்கு மர்மக் காய்ச்சல் என்று ரெஸ்ட் எடுக்கிறார்கள்.

      Whatever is said and done, இந்தப் பத்திரிகையாளர்களில் இருவரை நான் நிச்சயமாக நம்பமாட்டேன். இவர்கள் சுயநலவாதிகள். திமுக ஜால்ராக்கள். மனசாட்சி இல்லாதவர்கள், மக்களுக்காகப் பேசி அறியாதவர்கள். சீனில் காணாமல் போன இன்னொருவர், திட்டக்குழு பதவி சுகத்தில் இருக்கும், முன்னாள் மின்னம்பலம் ஏஜெண்ட் பொருளாதாரப் புளி.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      அரசைக் குற்றம் சொல்ல இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. நீர் நிலைகளை எல்லாம் ப்ளாட் போட்டு விற்கக் காரணமானது திமுக. இது கருணாநிதி தொடங்கி-வள்ளுவர் கோட்டத்தில் ஆரம்பித்து, தொடர்ந்து நடந்துவருகிறது. ஒரு காணொளியில், பள்ளிக்கரணை ஏரிப்பகுதியை முழுமையாக பட்டா கொடுத்து 500 கோடி சுருட்டியவர்கள் என்று சொல்லியிருந்தார்கள். இந்தப் பள்ளிக்கரணை ஏரியை 85லிருந்து நான் பார்த்திருப்பதால் அந்தக் காணிளியின் பட்டா பிஸினெஸ் உண்மை என்று தெரியும் (எவ்வளவு அடித்தார்கள் என்பதெல்லாம் தெரியாது).

      இரண்டாவது, நீர் வழித்தடத்திற்காக எதையும் செய்யாமல் செய்ததாகச் சொல்லியே ஏப்பம் விட்ட கதை.

      மக்களும் இதில் குற்றவாளிகளே. நீர் போகும் இடமெல்லாம் பிளாஸ்டிக் மற்றும் ஏகப்பட்ட குப்பைகளைப் போகிறவாக்கில் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். பிறகு எப்படி கழிவு நீர் செல்லும்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.