தமிழ்நாட்டின் அர்னாப் கோஸ்வாமி – ” 36-ல் பாஜக ஆட்சி “

……………………………..

……………………………….

26-ல் நிச்சயமாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர
வாய்ப்பில்லை… இதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்வர்.

” எனவே, கேள்விக்கு பதிலாக, ஆமாம் … 26-லேயே நல்ல கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கூட்டணி அரசு அமைக்க வாய்ப்பு
இருக்கிறது தான் ….” என்று இவர் சொல்வாரென்று நினைத்தால்
இதென்ன 36 ….46 என்றெல்லாம் போகிறார் …??? !!!

இவர் ஏன் இப்படி பேசுகிறார்….???

இவர் அண்ணாமலைக்கு நல்லது நினைக்கிறாரா –
அல்லது …???

இவரது பேச்சை பார்த்தால் – அண்ணாமலைக்கு உதவ வேண்டும் என்பது இவரது நோக்கமாக தெரியவில்லை ….

அடுத்தது பாஜக ஆட்சி என்று அண்ணாமலை உற்சாகமாக பேசி வரும்போது, இவர் 36-ல் தான் பாஜக ஆட்சி என்று ஏன் சொல்ல வேண்டும் …? அப்படியென்றால் 36 வரை திமுக ஆட்சி தொடரும் என்று சொல்கிறாரா..?

பாஜக தொண்டர்களை இன்னும் 13 வருடங்கள் காத்திருக்க வேண்டுமென்று மறைமுகமாக வெறுப்பேத்துகிறாரா …..???

ஓரு வேளை இவருக்கென்று வேறு எதாவது அஜெண்டா
வைத்திருக்கிறாரோ ..???

…………………………………………….

.
…………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தமிழ்நாட்டின் அர்னாப் கோஸ்வாமி – ” 36-ல் பாஜக ஆட்சி “

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்த மாதிரி பேச்சுக்களே, அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இல்லாமலிருந்தால் எழுதிருக்கவே எழுந்திருக்காது. பாஜக நோட்டாவுடன் போட்டிபோடும் கட்சி என்று அனேகமாக எல்லாக் கட்சிகளுமே சொன்னார்கள், ஊடகவியலாளர்கள் உட்பட. ஆனால் அண்ணாமலை, தன் வழி தனி வழி என்று சென்று, கடந்த 1 வருடத்தில் நிறையபேரை பாஜகவும் பெரிய கட்சி என்ற அளவில் பேசுபொருளாக ஆக்கியிருக்கிறார். அண்ணாமலையைத் தவிர்த்த செய்திகள் 1 1/2 ஆண்டுகளாக இல்லை. இதனால்தான் அண்ணாமலை யாத்திரை பற்றிய செய்திகள் எதுவுமே வாரா வண்ணம் திமுக சார்பு ஊடகவியலாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக தூண்டுதலின் பேரில் எஸ்.வி.சேகர், காயத்ரி போன்ற பலரும், அண்ணாமலையைப் பற்றி தாறுமாறாகப் பேசினார்கள். ஏன் திமுக ஜால்ரா மணி, ஆதன் தொலைக்காட்சி, தராசு ஷ்யாம்….என்று பெரிய லிஸ்ட், அண்ணாமலையைத் தூக்கி வீசப்போகிறார்கள் என்றே சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் அண்ணாமலை வளர்ந்து வருகிறார். மோடியைத் தாறுமாறாக விமர்சனம் செய்யச் செய்ய அவர் வளர்ந்துவருவதுபோல (அவர் அகில பாரதம், இவர் தமிழகம்……) அண்ணாமலையும் வளருவார்…. நிற்க…

    பாண்டே கொஞ்சம் அரசியல் சாமர்த்தியமாகத்தான் இந்த விஷயங்களை அணுகுகிறார். அதனால் அவர் லாவகமாகத்தான் பேசுவார் (நடுநிலை அல்லவா? இன்னொன்று அவர், மணி/ஷ்யாம்…போன்ற பல அல்லக்கைகளைவிட அறிவு அதிகம் கொண்டவர்.). மணி, ஷ்யாம் போன்ற பல ‘விலைபோன அல்லது காழ்ப்புணர்வு கொண்ட’ ஊடகவியலாளர்கள் அவசரப்பட்டு ஒரு தரப்பை முற்றிலும் ஆதரித்து மூக்குடைபடுகிறார்கள். (சமீபத்தில், பாஜக 5 மாநிலங்களிலும் படுதோல்வியடையும், மக்கள் பாஜகவை விரட்டியடிப்பார்கள், மோடிக்குத் தோல்வி உறுதி என்றெல்லாம் கடுமையாகப் பேசிய ‘அனுபவம் மிக்க-எதில் என்பது கேள்விக்குரியது மணி’ தன் முகத்தில் தானே கரியைப் பூசிக்கொண்டதுதான் மிச்சம். இணைய ஊடகங்களும் தெலுங்கானாவில் பாஜக படுதோல்வியடையும் என்று ஆரூடம் கூறிக்கொண்டிருந்தனர், ஆனால் பாஜக தன் வாக்கு வங்கியை இரண்டு மடங்காகவும், சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை 8 மடங்காகவும் பெருக்கிக்கொண்டது). ஆனால் பாண்டே சாமர்த்தியமாகத்தான் அரசியல் ஆரூடங்களைச் சொல்லுவார்.

    அண்ணாமலை, ‘அடுத்து பாஜக ஆட்சி’ என்று சொல்வதை நான் உற்சாகப்படுத்தும், மிக நம்பிக்கையான ஸ்டேட்மெண்டாகத்தான் பார்க்கிறேன். திமுக மீது மக்கள் கடும் வெறுப்பில், கோபத்தில் இருக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன். மக்கள் திமுகவை நிச்சயம் தூக்கி எறியக் காத்திருப்பார்கள். ஆனால் யாருக்கு வாக்களிப்பது? யார் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு வருகிறதோ அவர்களுக்குத்தான் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் செல்லும். அதிமுக+பாஜக இருந்திருந்தால், 26ல் இந்தக் கூட்டணிதான் வெல்லும். ஆனால், மூன்று அணிகளாகப் பிரிந்திருப்பதால் நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு அதிமுகவின், பாஜகவின் மற்றும் திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதத்தைத் தெளிவாக்கும் என்று நம்புகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.