பேய்க்கும் பேய்க்கும் சண்டை …!!!

…………………………………………..

……………………………………………

இது சுவாரஸ்யமான ஒரு பத்திரிகைச் செய்தி –

https://tamil.oneindia.com/news/madurai/crpf-alerted-in-chennai-after-vigilance-raid-on-madurai-ed-office-562161.html?story=2


டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை தூசு தட்டாமல் இருப்பதற்காக
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அங்கித் திவாரி
ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன டாக்டர் சுரேஷ் பாபு முதலில்
ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் கொடுத்துள்ளார்.

அடுத்தக்கட்டமாக தர வேண்டிய லஞ்சப் பணத்தை கேட்டு சுரேஷ்
பாபுவுக்கு அமலாக்கத்துறையினர் குடைச்சல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சுரேஷ் பாபு, இதுகுறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு
போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அங்கித் திவாரியை
பொறி வைத்துப் பிடித்தனர்.

வெளியவே நில்லுங்க…..
சிஆர்பிஎப்-க்கு மதுரை ED ஆபிஸில் அனுமதி மறுத்த தமிழக போலீஸ்!

அதன் தொடர்ச்சியாக, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில்
துணை ராணுவத்தினரின் பாதுகாப்பை மீறி லஞ்ச ஒழிப்பு போலீசார்
அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டன.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், அலுவலக பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ்
படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

“உரிய அனுமதி பெற்ற பின்னரே சி.ஆர்.பி.எஃப் படையினர் உள்ள
செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்று தமிழ்நாடு காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்தது. வழக்கமாக அமலாக்கத்துறை சோதனைகளின்போது சி.ஆர்.பி.எஃப் படையினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்படுவார்கள். இந்நிலையில், அமலாக்கத்துறை
அலுவலகத்தில் நடந்த மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையின்போது,

  • சி.ஆர்.பி.எஃப் படையினரையே தமிழக போலீசார் அனுமதிக்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்ததாக சென்னை
  • நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு
  • போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

  • இதையடுத்து இன்று இரவோடு இரவாக சாஸ்திரி பவனுக்கு
  • நூற்றுக்கணக்கில் வந்த சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினர்,
  • அந்தக் கட்டிடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

  • எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த நடவடிக்கையை
    சிஆர்பிஎப் படையினர் எடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை சோதனையிடுவதை தடுக்கும் வகையிலேயே இதுபோன்ற நடவடிக்கையை சிஆர்பிஎப் படையினர் எடுத்திருப்பதாக விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

.
………………………………………………………………………………………………..….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பேய்க்கும் பேய்க்கும் சண்டை …!!!

  1. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. இந்த சண்டையில் இருபுறமும் உள்ள அழுக்குகள் வெளியேறினால் ரொம்ப நல்லது. மாநில அரசும் மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்கமுடியும் என்று காட்டுவதற்காக சிறுபிள்ளை தனமாக இது தெரிந்தாலும், உண்மையில் நல்லதே நடந்திருக்கிறது. இப்போதுதான் ஒரு checks and balances இருக்கும்!

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      Overall இது நல்லதாகத்தான் தெரிந்தாலும், இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று தோன்றுகிறது….. அதாவது முக்கியப் பிரமுகர்கள் முனைந்து இதில் ஈடுபட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. லஞ்சம் கொடுப்பதும் குற்றம். முன்பே 15 லட்சம், தற்போது கொடுக்கும் 15 லட்சத்தின்போது சரியாக லஞ்ச ஒழிப்புத் துறை வந்திருக்கிறது. இந்த டாக்டர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும் திமுகவின் மேலிடத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் பல புகைப்படங்களைப் பார்த்து எனக்குத் தோன்றுகிறது (நினைவிருக்கிறதா மதுரை டாக்டர் சரவணன் பாஜகவை விட்டுவிட்டு in a dubious manner திமுக கட்சியை நோக்கிச் சென்றது)

      தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை எந்த லஞ்சத்தையும் (அதாவது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆயிரம் இரண்டாயிரம் தவிர வேறு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட) பிடித்ததாகத் தெரியவில்லை. சரியாக இந்த விஷயத்தில் கூட்டமாக வந்து பிடிபட்டதை, திட்டமிடப்பட்டது என்றுதான் யூடியூபில் பலர் சொல்கின்றனர்.

      இருந்தபோதிலும் திவாரி டிஸ்மிஸ் செய்யப்படவேண்டியவர் என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை. திகாரில் இவருக்கு ஒரு இடத்தையும் கொடுத்துவிடவேண்டும்.

      யூடியூபில் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட ஆதன் சேனலில் உள்ள பலர் மாதேஷ் உட்பட, மற்ற பல சேனல்களைச் சேர்ந்தவர்கள் லஞ்சம் போன்றவற்றைப் பற்றிப் பேசும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.