………………………………………….

…………………………………………..
அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்
விவரமாகப் பேசும் ஒரு காணொளி கீழே –
கேட்க கேட்க – நமது இயலாமையை குறித்து வெட்கமாகவும்.
வேதனையாகவும் இருக்கிறது….
நமது கண்ணெதிரேயே தொடர்ந்து அக்கிரமங்கள், ஊழல்கள்
நடந்து கொண்டே இருக்கின்றன… புலம்புவதைத் தவிர,
கொதிப்பதைத்தவிர – வேறு என்ன செய்ய முடிகிறது நம்மால்…???
ஓரு பக்கம் அரசியல்வாதிகளின் கொள்ளைகள்…
இன்னொரு பக்கம் அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் ஊழல்கள்.
ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள்,
ஆண்டுக்கணக்கில் நடந்துகொண்டிருக்கும் அக்கிரமங்கங்களை
கண்டுகொள்ளாமல் இருந்தால் என்ன அர்த்தம் …..? அந்த ஊழல்களில்
அவர்களுக்கும் பங்கு உண்டு…. அவர்களும் அதில் கூட்டுப் பங்காளிகள்
என்று தானே அர்த்தம்…?
சளைக்காமல் – ஆதாரங்களை, ஆவணங்களை தேடிக்கண்டெடுத்து,
அலுக்காமல் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் ஜெயராமன்
மற்றும் அவரது அறப்போர் இயக்க தோழர்கள் அனைவருக்கும் நமது
மனப்பூர்வமான வாழ்த்துகளும், ஆதரவும் நிச்சயம் உண்டு.
…………………………
.
………………………………………………..



விசாரணை மற்றும் புலனாய்வைத் தொடரலாம். ஆனால் வழக்காக கோர்ட்டில் போட முடியாது என்று நினைக்கிறேன். அதில் சட்ட சிக்கல் இருக்கும். சட்டப் புத்தகத்தை ஆராய்ந்து பார்த்து இரண்டு வருடங்கள் கழித்துத்தான் வழக்கு போட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.
புலம்புவதைத் தவிர,கொதிப்பதைத்தவிர – வேறு என்ன செய்ய முடிகிறது நம்மால்
எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க என்று …பேசாமல் சிரித்து விடுங்கள் …:-)