உள்ளே இருந்த “சரக்கு” என்ன ….??? அது யாரு’து …???

……………………………………………….

………………………………………………..

” இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் செங்கடலில் கடத்தல்:
ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை..”

  • இது ஆழமாக விசாரிக்காமல், வந்த செய்தியை அப்படியே
    வெளியிட்ட மீடியாக்களின் தலைப்பு …..

…………..

இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் நடந்துவரும் போர்
45 நாட்களைக் கடந்துவிட்ட பிறகும், இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை.
4,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 13 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் போரை பாலஸ்தீன அரசு
“இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கை” என வரையறுத்திருந்தது.
ஐக்கிய நாடுகள் மன்றம் இதை போர்க்குற்றம் என்றே வர்ணித்திருக்கிறது.
இஸ்ரேல் உடனடியாக காஸா மீதான மனித உரிமை மீறலை
நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன.

இருந்தாலும், உலக நாடுகளின் வலியுறுத்தலை மீறி இன்னமும்
இஸ்ரேல் தனது கொலைகார தாக்குதல்களை நிறுத்தவில்லை.

…….

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி குழுவும், பாலஸ்தீனியர்களின் ஹமாஸ் அமைப்புடன் இணைந்திருக்கிறது.

இந்த போராளிகளின் செய்தித் தொடர்பாளர், “இஸ்ரேலிய
நிறுவனங்களுக்குச் சொந்தமான, தொடர்புடைய அல்லது இஸ்ரேலின்
கொடி பறக்கும் அனைத்துக் கப்பல்களையும் குறிவைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். எனவே, அத்தகைய கப்பல்களில் பணிபுரியும் ஒவ்வொரு நாட்டின் குடிமக்களையும் அந்தந்த நாடுகள் திரும்பப்
பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தியாவுக்குச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த
Galaxy Leader எனும் சரக்குக் கப்பலை, தெற்கு செங்கடலில், ஹெலிகாப்டரிலிருந்து கப்பலில் இறங்கி ஹவுதி குழு கடத்தியிருக்கிறது.

இந்தக் கடத்தல் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,
“அந்த சரக்குக் கப்பல் இஸ்ரேலுக்குச் சொந்தமானதல்ல. பிரிட்டிஷ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஜப்பானிய நிறுவனத்தால்
இயக்கப்படுகிறது. கப்பலில் உக்ரைன், பல்கேரியன், பிலிப்பைன்ஸ்
மற்றும் மெக்ஸிகன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
25 பணியாளர்கள் இருந்தனர்.

அந்தக் கப்பலில் இஸ்ரேலியர்கள் யாரும் இல்லை. கப்பல் கடத்தப்பட்டது என்பதுபயங்கரவாதச் செயலாகும். இது சுதந்திர உலகின் குடிமக்களுக்கு எதிரான, உலகளாவிய கப்பல் பாதைகளின் பாதுகாப்புக்கு எதிரான
சர்வதேசக் குற்றமாகும்” – எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், ஹவுதி குழு செய்தித் தொடர்பாளர்,” நாங்கள் கடத்தியது
இஸ்ரேலிய கப்பல்தான். தெற்கு செங்கடலிலிருந்து ஏமன்
துறைமுகத்துக்குக் கப்பலைக் கொண்டுவந்திருக்கிறோம். மிக மரியாதையாகவே கப்பல் பணியாளர்களை நடத்துகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

……………

நமக்கு சில சின்ன சின்ன கேள்விகள் – ….


கப்பல் இஸ்ரேலுக்கு சொந்தமானது இல்லை – சரி.
இஸ்ரேல் பணியாளர்கள் யாரும் அதில் இல்லை – சரி…

கப்பலைப்பற்றி, மற்ற விவரங்களை வெளியிடும் இஸ்ரேல் –
கீழ்க்கண்ட தகவல்களை ஏன் வெளியிடவில்லை…?

  • அந்த பிரிட்டிஷ் நிறுவனத்தின் சொந்தக்காரர்/மேஜர் பங்குதாரர் ஒரு இஸ்ரேலிய பண மூட்டை அல்லவா ….???
  • அந்த கப்பலில் இருந்த “சரக்கு” என்ன ….??? சொல்ல முடியுமா…???
  • அந்த கப்பல், பிடிபடும் முன், கடைசியாக துருக்கியிலிருந்து கிளம்பியது -சரி…. ஆனால், துவக்கத்தில் அது எங்கிருந்து கிளம்பியது….? அந்த சரக்கு எங்கிருந்து, யாருக்கு – யாரால் – அனுப்பப்பட்டது …..??? சொல்ல முடியுமா ….?

………………….

  • ஒன்றுமறியாத குழந்தைகளையும், அப்பாவிப் பெண்களையும்,
    முதியோர்களையும் கொன்று குவிக்கும் போர்குற்றவாளியான
    இஸ்ரேலுக்கு –
  • ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் வீசிய இஸ்ரேலுக்கு –

சர்வதேச குற்றங்களைப்பற்றி பேச
என்ன யோக்கியதை இருக்கிறது…..???

.
……………………………………………………………………………………………………………………..….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to உள்ளே இருந்த “சரக்கு” என்ன ….??? அது யாரு’து …???

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:
  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //ஒன்றுமறியாத குழந்தைகளையும், அப்பாவிப் பெண்களையும்,
    முதியோர்களையும் கொன்று குவிக்கும் போர்குற்றவாளியான
    இஸ்ரேலுக்கு – ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் வீசிய இஸ்ரேலுக்கு –// நீங்க ரொம்ப ஹார்ஷ் ஆக இதனை approach செய்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இது Gandhian thought process. (பிரச்சனை நடந்ததும் இந்துக்களை கோழை போல அமைதியாக இருங்கள், எதிரிகளை மன்னித்துவிடுங்கள் என்று உபதேசம் செய்தது போல)

    ஹமாஸ் பயங்கரவாதிகள் முதலில் பயங்கரவாதச் செயல் செய்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை/பெண்களைக் கொலை செய்து, பிறகு 200க்கும் அதிகமான இஸ்ரேலியர்களை கடத்திவைத்துள்ளனர். அவர்கள் ஹாஸ்பிடல் பேஸ்மெண்ட் என்று எல்லா இடங்களிலும் சுரங்கம் வைத்து அதன் மூலமாக பயங்கரவாதச் செயல்களைச் செய்கின்றனர். இந்தத் தீவிரவாதிகளின் தலைவன் கத்தாரில், அரசு பாதுகாப்போடு இருக்கிறான், மற்ற தலைவர்களுடன்.

    இஸ்ரேல் தங்கள் நாட்டைப் பாதுகாக்க, காஸா பகுதியில் நுழைந்து தீவிரவாதிகளை வேட்டையாடுகிறது. As a by-product பயங்கரவாதிகளின் செயலால், அவர்களைச் செயலிழக்கச் செய்ய மின்சாரம் போன்றவற்றைத் தடை செய்து இஸ்ரேல் வேட்டையாடுகிறது.

    இதில் ஒன்றுமறியா குழந்தைகள் மற்றும் வயதான நோயாளிகள் பாதிக்கப்படுவது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. அப்பாவி பொதுமக்களும் (அந்தப் பகுதியைச் சேர்ந்த சில பல இளைஞிகளில் காணொளிகளைப் பார்த்தேன். போரினால் அப்பாவிக் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. ரொம்பவே துயரம் தருகிறது.

    காஸா பயங்கரவாதிகளை முடிந்தவரை தீர்க்கவேண்டும். நீங்கள்தான் ஒரு நல்ல வழி சொல்லுங்களேன், இதைவிட வேறு வழி இருந்தால். அமெரிக்கா பல்வேறு நாடுகளில் தீவிரவாதிகள்/பயங்கரவாதிகளைக் கொல்ல இதே வழியைத்தான் பின்பற்றியது.

    ஐக்கிய நாடுகளில் பேசிய பல்வேறு representatives including Arab nations, காஸா பயங்கரவாதச் செயலை கண்டித்தார்களா? ஐக்கிய நாடு இந்த பயங்கரவாதச் செயலுக்கு என்ன remedy சொன்னது?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      // இது Gandhian thought process. //

      பெருமைப்படுகிறேன்…காந்தீயவாதி என்பதற்காக…
      காந்திஜி காட்டிய வழியில் செல்வதற்காக.

      நீங்கள் கோட்சே-யை போற்றுபவர் என்று
      வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்காக நன்றி.
      உங்களிடருந்து வேறு எத்தகைய பின்னூட்டதை
      எதிர்பார்க்க முடியும் … ?

      ஆனால் இந்திய ராணுவத்தையும் உங்கள் நோக்கிலேயே
      பார்க்க வேண்டாம்….தவறிக்கூட சிவிலியன்களை
      தொடாது இந்திய ராணுவம்…1965, 1971 என்று
      2 பெரிய போர்களை நாம் சந்தித்த அனுபவமே சாட்சி….

      தர்க்க வாததிற்கு நான் எப்போதுமே தயார்.
      ஆனால் குதர்க்கவாதத்திற்கு அல்ல.

      .

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        //தவறிக்கூட சிவிலியன்களை தொடாது இந்திய ராணுவம்// – காந்திக்கு எதிர்ப்பதம் கோட்சே என்று சொல்லிவிட்டீர்கள். தப்பித்தவறிக்கூட நேதாஜி என்று சொல்லமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் அகராதியில், ராஜீவ் காந்திக்கு எதிர்ப்பதம் தனு, இந்திராகாந்திக்கு எதிர்ப்பதம் சத்வந்த் சிங் என்று புரிந்துகொள்கிறேன்.

        போரில் வேண்டுமென்றே எந்த நாடும் (பொதுவாக, நாகரீகமான நாடுகள் எதுவும்) சிவிலியன்களைக் குறிவைக்காது. ஆனால் போரில் சிவிலியன்கள் இறக்கத்தான் செய்வார்கள். அது 65, 71 அல்லது அமெரிக்கா முன்னெடுத்த போர்கள் என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம். (ஏன்..காஷ்மீர் கலவரங்களின்போது, அதாவது பாஜக 370ஐ நீக்குவதற்கு முன்பு, இராணுவம் அங்குள்ள பயங்கரவாதிகளுடன் போரிடும்போது பயங்கரவாதிகள் அல்லாதவரும் கொல்லப்பட்டனர்-cross fireல் என்று செய்திகளை நான் படித்திருக்கிறேன். Even when there is an intelligence failure, wrong persons/civilians may be killed by any army. இப்போது இஸ்ரேலும் வேண்டுமென்றே சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என்று நான் நம்பவில்லை. பல காணொளிகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஏன் பஹ்ரைன் இளவரசர் இதுபற்றிப் பேசிய காணிளியையும் நான் பார்த்தேன்.

        இதை ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் பார்க்கவேண்டியதில்லை.

        எல்லோரும் எதில் நிறம் மாறுகிறீர்கள் என்று பார்த்தால், பயங்கரவாதத்தைக் கண்டிப்பதில், ஹமாஸை குற்றம் சொல்வதில், அமைதியைக் கடைபிடித்துவிட்டு, இஸ்ரேலைக் குறை சொல்லுகிறீர்கள். இதுதான் காந்தியன் வழி. கலவரத்துக்குக் காரணமானவர்களை அவர் விட்டுவிடுவார், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர் தாக்குதல் நடத்தக்கூடாது என்று உண்ணாவிரதம் இருப்பார், அழுத்தம் தருவார்.

        நான் எழுதியிருப்பது தவறு என்று மற்றவர்கள் கருதினால் இங்கு எழுதும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இல்லை சரி என்று நினைத்தாலும் இங்கு எழுதலாம்.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          .

          கோட்சே தரப்பை ஆதரிக்கலாம். ஆனால் கோட்சே
          ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ள வெட்கம்.

          // நான் எழுதியிருப்பது தவறு என்று மற்றவர்கள்
          கருதினால் இங்கு எழுதும்படி வேண்டுகோள்
          விடுக்கிறேன். இல்லை சரி என்று நினைத்தாலும்
          இங்கு எழுதலாம்…//

          வெறுமே வார்த்தை ஜாலம் செய்ய வேண்டாம்.
          நீங்கள் எழுதியிருப்பது தவறு என்று யாராவது
          எழுதினால் – அத்தோடு விட்டு விடப்போகிறீர்களா…?

          வெற்று விதண்டா வாதத்தில் ஈடுபட
          யார் விரும்புவார்கள்….?

          பச்சிளம் குழந்தைகள் பரிதவிப்பதைப் பார்த்தும்,
          ஒருவேளை ரொட்டிக்காக, ஒரு கிலோமீட்டர்
          க்யூவில் நிற்கும் பெண்களையும், முதியோர்களையும்
          பார்த்தும் – மனதில் கலக்கம் இல்லை.

          மனசாட்சியும் இல்லை; உள்ளத்தில் ஈரம் சிறிதும் இல்லை;

          இப்போது இந்தோனேஷியா கட்டிக்கொடுத்த
          மருத்துவ மனையையும், பீரங்கி கொண்டு தாக்கி
          அழித்துக் கொண்டிருக்கிறார்கள் ராட்சத இஸ்ரேலியர்.

          சந்தோஷமாக தூங்குங்கள்.

          .

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக போர் புரிகிறது என்பதே twisted statement. இஸ்ரேல், காஸா பயங்கரவாதிகளுக்கு எதிராக, அவர்களை முற்றிலும் அழிக்கவேண்டும் என்று போர் புரிகிறது. இஸ்ரேல் டாங்கிகளின் மேல், கல் எறிபவர்களும் தீவிரவாதிகள்தாம்.

    நம்ம ஊரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு என்று அரசியல் கட்சிகள் சொல்வது, முஸ்லீம் வாக்குகளுக்காக மாத்திரமே. இஸ்ரேல் பல நாட்கள், பொதுமக்கள் வெளியேற பாதை அமைத்துத் தந்தது. பயங்கரவாதிகளை அழிக்கவேண்டும் என்று ஒரு நாடு நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? பயங்கரவாதிகளை ஏன் ஒரு மதத்துடன் தொடர்புபடுத்தி நம் கட்சிகள் பேசுகின்றன?

    நாளை பாகிஸ்தானுடன் போர் வந்தால், ராணுவ வீரர்கள் மாத்திரம் எங்க பகுதில ஒரு கிரவுண்டுக்கு வாங்க, உங்க மேல குண்டு போடுகிறோம் என்று இந்திய அரசு அல்லது இந்திய ராணுவம் சொல்லவேண்டுமா?

  5. சேந்தன் அமுதன்'s avatar சேந்தன் அமுதன் சொல்கிறார்:

    இஸ்ரேல், ஹமாஸ் இரண்டு தரப்பும் அப்பாவிகளுக்கு செய்வது மிகவும் கொடூரமானது.
    ஆனால் இந்த முறை ஆரம்பித்தது ஹமாஸ்….
    மற்றபடி
    Let there be peace for all,
    Let there be well-being for all,
    என்று என்னால் வேண்ட மட்டுமே முடியும்

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.